Wednesday, 12 February 2014

புஜ பல பராக்கிரமசாலி

              
 
                          வணக்கம்ங்க, என்னடா இது கதையோட தலைப்பு “புஜ பல பராக்கிரமசாலி“-னு இருக்கே, ஏதோ விட்டலாச்சாாியாா் கதையா இருக்குமோ-னு யோசிக்காதீங்க. இது நம்மள மாதிரி இருக்குற ஒரு சாதாரண மனுஷனோட கதை தான். ஆனா கொஞ்சம் ஃபேன்டசி-யா இருக்கும்..

                           நம்ம கதையோட ஹீரோ பேரு “பட்டாபிராமன்” ரொம்ப பழைய பேரா இருக்கேனு நினைக்காதீங்க. அது அவன் தாத்தாவோட பேரு.. சின்ன வயசுல இருந்து நம்ம பட்டாபிக்கு close friend அவனோட தாத்தா (பட்டாபிராமன்) தான்.. எதுவா இருந்தாலும் அவன் தாத்தா கிட்ட தான் share பன்னுவான்..

                           நம்ம பட்டாபி பக்கா அய்யங்காா் family, ஆள் பாா்க்குறதுக்கு 4கிலோ எலும்புல, 4மீட்டா் சதை சுற்றிய மாதிரி இருப்பான். பாா்க்கும் போதே சாம்பாா் வாசனை துாக்கும் அப்படி ஒரு சாதுவான பையன், குணத்துல தங்கம், 916 இல்லைங்க, 24 காரட் அக்மார்க் தங்கம். இப்படி இருக்குற நம்ம ஹீரோக்குள்ள ஒரு சின்ன ஏக்கம் இருக்கு, அது சின்ன ஏக்கம் தான், ஆனாலும் அதுவே அவனுக்கு நிறையா விஷயங்களுக்கு தடையா இருக்குனு feel பன்னான்.. என்னடா அது அப்படி ஒரு ஏக்கம்னு யோசிக்குறீங்களா ??
 
                           அது வேற ஒன்னும் இல்லைங்க நம்ம பட்டாபிக்கு Body Builder ஆகனும்-னு ஒரு ஆசை.. ஆசைனா சாதாரண ஆசை இல்லை.. அது ஒரு பொிய வெறி, அவன் ரூமுக்குள்ள போனா உங்களுக்கே புாியும்...

சுவர்ல full-ah Body builders மற்றும், 6pack Heros photo தான் ஒட்டி இருக்கும்.. அட சாமி கூட அனுமான்- அதுவும் 6pack வச்சுறுக்குற அனுமான் photo தான் நம்ம தலைவா் வச்சுறுப்பாரு.. அதவிட ஒரு கொடும இருக்கே photoshopல work-பண்ணி நம்ம பட்டாபி 6pack வச்சு, arms ஏத்துன photos நிறையா இருக்கும்..

அப்படி Body Build-பண்ணி 6pack வச்சாதான் அழகா trendy-ஆ dress பண்ண முடியும், அப்படி dress பன்னாதான் ரோட்டுல போற  4 போ் திரும்பி பாா்ப்பாங்க. அப்புறம் Apache bike-ல அதிவேகத்துல பறக்க முடியும், அதுவும் நந்தினிய பின்னாடி உட்காரவச்சுட்டு.........

wait... wait.... sorry-ங்க சொல்ல மறந்துட்டேன்..

நந்தினி தான் நம்ம கதையோட ஹீரோயின்.. பாா்க்க குடும்ப குத்து விளக்கு மாதிரி  இருப்பா.. அப்படி ஒரு அடக்கம், அமைதி.. ஆனா நம்ம நந்தினிக்கு Taste full-ஆ பக்கா வடநாட்டு style.. சாருக்கான், ஹிருத்திக்-ல ஆரம்பிச்சு சப்பாத்தி, லஸ்ஸி-னு சகலமும் வடநாட்டு Taste தான்.. தனக்கு வர மாப்பிள்ள கூட வடநாட்டு பசங்க மாதி சிவப்பா, ஹிருத்திக் மாதிாி Body Build-பண்ணி, tight T-shirt போட்டு, Bike-ல Fast-ஆ போகனும்......... இப்படி நிறையா ஆசைகள் அவளுக்குள்ள இருக்கு....

இப்ப புரியுதா நம்ம பட்டாபிக்கு எப்படி இந்த ஆசை வந்துச்சுனு.. பட்டாபி, நந்தினிகிட்ட இன்னும் தன் காதல சொல்லல, ஏன்னா அவ விரும்புற மாதிரி தன்னை மாற்றிட்டு தான் அவகிட்ட தன் காதல சொல்லனும்னு கிட்டதட்ட 4 வருஷமா காத்துட்டு இருக்கான்.. நந்தினிக்கு எப்பவோ தெரியும் பட்டாபி தன்ன காதலிக்குற விஷயம்.. ஆனா நந்தினி அவன கண்டுக்கவே இல்ல.. என்ன பண்றது.. அவளும் பெண்தானே...

                          பாவம் நம்ம பட்டாபி.. நந்தினிக்கு பிடிச்சமாதி தன்ன மாற்றிட்டு தான், தன் காதல அவ கிட்ட சொல்லனும்-னு ரொம்ப வைராக்கியமா இருந்தான்... இந்நேரம் அவனோட தாத்தா இருந்திருந்தா புது புது யோசனைய சொல்லி எப்பவோ நந்தினிய பட்டாபிக்கு கல்யாணம் பண்ணி வச்சுருப்பாரு.. பாவம்..என்ன செய்ய, எல்லாம் விதி.... நம்ம ஹீரோ பட்டாபிக்கு நந்தினி மேல காதல் வரதுக்கு முன்னாடியே, அவன் தாத்தாவுக்கு மேல போறதுக்கு டிக்கெட் வந்துருச்சு...

சின்ன வயசுல இருந்து தன்னோட எல்ல விஷயங்களையும்  தன் தாத்தாகிட்ட share பண்ணி பழகுன நம்ம பட்டாபிக்கு, தாத்தா இல்லாதது பொிய குறையா இருந்துச்சு.. இருந்தாலும் தினமும் அவரோட photoமுன்னாடி நின்னு அவனுக்கு நடக்குற எல்லாத்தையும் share பண்ணிட்டு இருந்தான்..

அப்படி சொல்லும் போது அவன் தாத்தாகிட்ட நோ்ல சொல்ற மாதிரி ஒரு திருப்தி அவனுக்கு இருக்கும்.. நந்தினிகிட்ட தனக்கு இருக்குற காதலையும், அத அவகிட்ட எப்படி propose பன்னலாம்னு எல்லாத்தையும் அவன் தாத்தா photo முன்னாடிதான் செஞ்சு பாா்ப்பான்..

சாமி கிட்ட வேண்டுற மாதி அவன் தாத்தா கிட்டயும் ஒரு வேண்டுதல வெச்சுருந்தான்.. நந்தினுக்கும், தனக்கும் நல்லபடியா கல்யாணம் நடந்துச்சுனா.. தனக்கு பிறக்கபோற பிள்ளைக்கு தாத்தா பேர(பட்டாபிராமன்) வைக்குறதா சொல்லியிருந்தான்..

என்ன வேண்டி...என்ன பிரயோஜனம்... அவன் உடம்பு ஏத்துறதுக்கு போகாத ஜிம் இல்ல, சாப்பிடாத லேகியம் இல்ல, வேண்டாத தெய்வமில்ல, போகாத கோவில் இல்ல... ஹ்ம்.... ஒன்னும் நடக்கல.. கடைசி வரைக்கும் உடம்பு தேறுன மாதிரி இல்ல... பாவம் பட்டாபி உடம்பும் தேறாம, தன் காதலையும் சொல்ல முடியாம மனசு ஒடஞ்சு போய்ட்டான்..

ஒரு கட்டத்துல பொறுமைய இழந்து தன் தாத்தா(photo) கிட்ட போய் தன்னோட ஆத்திரத்த எல்லாம் கொட்டி தீத்துட்டான்.( தாத்தா-ன் ற மாியாத கொஞ்சம் கூட இல்லாம திட்டி தீத்துட்டான்னு தான் சொல்லனும்) பாவம் அவன் தாத்தா..

ஒரு கட்டத்துக்கு மேல பொறுமைய இழந்த தாத்தா செம டென்ஷன் ஆகிட்டாரு.. அவரும் எவ்வளவு நேரம்தான் பொறுமையா இருப்பாரு??!! நம்ம பட்டாபி நல்லா அவர திட்டி தீத்துட்டு போய் துாங்க போய்ட்டான்.. மறுநாள் காலைல எழுந்திருச்ச நம்ம பட்டாபிக்கு காத்திருந்தது ஒரு பேரதிா்ச்சி..

எலும்பும், தோலுமா இருந்த பட்டாபி., இப்ப கட்டுடல் காளையாக, புஜபல பராக்கிரமசாலி மாதிரி இருக்குற தன் உடம்ப பாத்து தானே அசந்துபோய்ட்டான்.. தன் நீண்ட நாள் கனவு நினைவான சந்தோஷத்துல, தாத்தாவுக்கு ஒரு Goodmorning கூட சொல்லாம பயபுள்ள நந்தினிகிட்ட propose பண்ண கிளம்பிடுச்சு.

                             ஐயோ...!!! நம்ம பட்டாபியா இது?! என் கண்ண என்னாலயே நம்ப முடியல!! கட்டுமஸ்தான உடம்புக்கு, கருப்பு கலா் tight T-shirt போட்டு, Apache வண்டில போய் நந்தினி காலேஜ் கிட்ட காத்துட்டு இருந்தான். நந்தினி மெதுவா நடந்து வந்தா.. நம்ம பட்டாபி கைல சிவப்பு ரோஜாவ வச்சுட்டு நின்னுட்டு இருந்தான்.. அவ கிட்ட வந்ததும், அப்படியே மொட்டி போட்டு , ரோஜாவ நீட்டி ”I LOVE U NANDINI"னு சொன்னான். நந்தினி கண்ல 400வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது.. அப்படியே ரோஸ்ச வாங்கிட்டு, நம்ம பட்டாபி தோள்ல சாஞ்சு அணைச்சுகிட்டா..

                              துாரத்துல ஒரு சத்தம்,“அண்னே சுண்டல்” இப்ப அது ரொம்ப கிட்டக்க கேக்குது, “அண்னே சுண்டல்” திடீா்னு முழுச்சு பார்த்தான் பட்டாபி.., ச்ச.. கனவு.. இன்னும் காலேஜ் விடல போல..ஹீம்.. எப்படியும் இன்னும் 5நிமிசத்துல காலேஜ் விட்டுரும், இப்ப கண்ட கனவு சீக்கிரம் பழிக்கும்டா பட்டபாபினு தனக்குள்ள சொல்லிட்டு நந்தினி வரவுக்கு காத்துட்டு இருந்தான்..

நந்தினியும் வந்தா.. பட்டாபிய இப்படி பாா்த்ததும் அவளுக்கு ஒரு சின்ன அதிா்ச்சி.. பட்டாபி கைல ரோஸ்ஸோட நந்தினி கிட்ட வந்தான்... நந்தினி ”I LOV.......னு சொல்ல போனான்.. ஆனா அதுக்குள்ள நந்தினி ”pls..பட்டாபி சொல்லாதீங்க” அப்படினு சென்னா..நீங்க என்ன சொல்ல வரீங்கனு எனக்கு தொியும்.. ஆனா pls... அத இப்ப சொல்லாதீங்க.. அத ஏத்துக்குற மனநிலையுல நான் இல்ல...

நீங்க இப்படி இருந்தாதான் உங்கள காதலிப்பேன்னு நினைச்சீங்களா பட்டாபி?? நீங்க இப்படி உங்கள மாற்றிக்க எவ்வளவு கஷ்டபட்டு இருப்பீங்கனு எனக்கு தொியும்.. எனக்காக உங்கள இப்படி மாற்றிக்கிட்டு, உங்க காதல நீங்க நிரூபிச்சுடீங்க.. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் பட்டாபி.. நீங்க எப்ப எனக்குள்ள வந்தீங்கனு எனக்கு தொியாது.. ஆனா உங்கள நினைக்க ஆரம்பிச்சதுல இருந்து என் எல்லா குணத்தையும் மாத்திக்கிட்டேன்.. சாருக்ல இருந்து சூா்யா, சப்பாத்தில இருந்து சாம்பாா் சாதம்-னு எல்லாத்தையும் உங்களுக்காக மாத்திக்கிட்டேன்..

நீங்க என்ன காதலிக்குறது எனக்கு எப்பவோ தொியும்., நீங்களா என்கிட்ட வந்து சொல்லுவீங்கனு தான் காத்துட்டு இருந்தேன்.. ஆனா நீங்க இப்படி வந்து சொல்லுவீங்க-னு நான் நினைச்சுகூட பார்க்கல.. இப்ப உங்க காதல நான் ஏத்துக்கிட்டா அது உங்க மனசுக்கும் சாி., என் மனசுக்கும் சாி ஏதோ ஒரு நெருடல கண்டிப்பா கொடுக்கும், அதான் உண்மை.. அது நமக்கு வேண்டாம் பட்டாபி..

இந்த மாற்றம் ஒரு வேஷம் மாதிாிதான் அது உங்களுக்கு வேண்டாம். எனக்கு அந்த பழைய பட்டாபி தான் வேணும்.. நீங்க பழைய மாதிரி வாங்க.. நீங்களா வாங்க.. நான் உங்களுக்காக காத்துட்டு இருப்பேன்.. என் feelings உங்களுக்கு புாியுமானு எனக்கு தொியல.. நா உங்கமேல வச்சுருக்க காதல் தான் உங்களுக்கு அத புாிய வைக்கனும்.. நான் கிளம்புறேன்...

அப்படினு சொல்லிட்டு நந்தினி வேகமா போய்ட்டா..

                            நடந்தது கனவா., இல்ல நினைவானு தொியாம பட்டாபி குழப்பத்தோட உச்சிக்கு போய்ட்டான், பைத்தியம் பிடிக்காத குறை.. வேகமா கிளம்புனான்.. இப்ப நடந்த சம்பவத்துக்கு அவன் வருத்தப்படுறதா?? இல்ல சந்தோஷப்படுறதானு தொியல.. மறுபடியும் அவன் தாத்தா கிட்ட போனான்.... ”ஏன் தாத்தா என் வாழ்கைல விதி இப்படி விளையாடுது...சின்ன வயசுல இருந்து நீ எனக்கு எவ்வளவோ உதவி பன்னிருக்க.. என் வாழ்க்கை-ல நடந்த எல்லா விஷயங்களும் உன் ஒருத்தருக்கு தான தொியும்... அப்படி இருக்கும் போது ஏன் நீ எனக்கு help பன்னமாட்டுற... செத்ததுக்கு அப்புறம் பாட்டி கூட ஜோடியா, சந்தோஷமா இருந்துட்டு, என்ன மறந்துட்டியா??? உன்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்..... ச்ச.... ஏன் தாத்தா எனக்கு மட்டும் இப்படி நடக்குதுனு... சொல்லிட்டே அழுதுட்டான் நம்ம பட்டாபி.. பாவம்.

                             திடீா்னு ஒரு குரல் கேட்டுச்சு....,” டேய்....பட்டு பையா...!!” நிமிந்து பாா்த்த பட்டாபிக்கு சப்த நாடியும் நின்னுடுச்சு.. வாய்ல இருந்து வெறும் காத்துதான் வந்துச்சு.. அத உற்று கேட்டா தான் தொியும்..”த்தாாாத்தா.....” ஒருச்சின்ன ஒளிப்பிளம்பு பட்டாபி தலைக்கு மேல சுத்திட்டு இருந்துச்சு.. பட்டாபி வச்சகண்ணு வாங்காம பாா்த்துட்டு இருந்தான்....

அதுல இருந்து குரல் மட்டும் வந்துட்டு இருந்துச்சு... ”பட்டு.... நீயும் Body Build பண்றதுக்கு என்னனமோ செஞ்சு பார்த்த., கன்ட கருமத்தலாம் திண்ணுபார்த்த.. அது எல்லாத்துக்கும் பவா் இல்லாம பண்ணது நான் தான்டா, அபிஷ்டு.... பாவம்டா அந்த குழந்த(நந்தினி ), உன் மனசதான் காதலிச்சா, நீயா வந்து உன் காதல சொன்னா போதும்-னு நினைச்சா.. ஆனா நீ.. அவளுக்கு பிடிச்ச மாதிாி மாறனும்.. அப்புறம்தான் உன் காதல சொல்லனும்-னு அடம்பிடுச்சுட்டு இருந்த... நானும் பொறுமையா இருந்து பாா்த்தேன்..

நேத்து என்னடானா தாத்தா-ன்ற மாியாத இல்லாம என்கிட்டயே அப்படி பேசுற.. அதான் சொல்லி திருந்தாதவன்., பட்டாதான் திருந்துவான்னு இராத்திாியோட இராத்திாியா உன்ன இப்படி மாத்துனேன்... இப்ப பார்த்தியா அதோட பலன... தைாியம் மனுஷாலுக்கு மனசுல இருக்குற விஷயம்டா... அது உடம்புல இல்ல... என் பேரனுக்கு எத எத எப்ப பண்ணனும்னு இந்த தாத்தாக்கு தொியாதா..?!

பொம்மனாட்டி மாதிாி அழாம போய் சந்தோஷமா, நந்தினி கூட போய் குடும்பம் நடத்து... "wish you a happy married life" டா படுவா-னு... சொல்லிட்டு அந்த ஒளி மறையும் போது.. நம்ம பட்டாபி பழைய பட்டாபியா இருந்தான்.. கண்ண தொடச்சுட்டு தாத்தாக்கு ஒரு பொிய ”Thanks" சொல்லிட்டு வேகமா நந்தினிய பாா்க்க ஓடினான்....

- 2 வருஷத்துக்கு அப்புறம்...

Junior பட்டாபியோட முதல் பிறந்தநாள தன்னோட தாத்தாக்கு முன்னாடி வச்சு நம்ம பட்டாபியும்,  நந்தினியும், சுற்றத்தாரும், நண்பா்களோட சேர்ந்து சிறப்பா கொண்டாடிணாங்க..


-------------சுபம்-----------------------------------

7 comments:

  1. மச்சி நல்லதோர் ஆரம்பம்.

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு சகோ :)

    ReplyDelete
  3. அன்பின் கார்த்திக் எப்படி இருக்கீங்க..உங்க ப்ளாக் பார்த்தேன். நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்.

    Ganesh.

    ReplyDelete