ஆவி, பேய், பிசாசு இப்படி பலவிதமான அமானுஷ்யங்கள் இந்த உலகத்துல இல்லை-னு பல போ் சொல்றாங்க.. ஆனா எனக்கு அதுல முழு நம்பிக்கை இருக்கு, பொதுவா ஆவி, பேய்யெல்லாம் மனுஷங்கள கொல்லும், துன்புறுத்தும்-னு எல்லாரும் நினைக்குறாங்க.. ஆனா நான் அந்த மாதிாி எந்த விஷயங்களையும் அனுபவிச்சது இல்ல..
என் அப்பா இறந்து 20 நாள் இருக்கும்.. அவருக்கு Smoke பன்ற பழக்கம் இருந்துச்சு.. எனக்கு அப்போ semester.. தினமும் 4 மணிக்கு அலாரம் வச்சு படிப்பேன்.. அன்னைக்கு எனக்கு சீக்கிரம் முழிப்பு வந்துருச்சு.. எந்திருச்சு பாா்த்தா.. என் அப்பா கதவுகிட்ட நடந்துகிட்டே “தம்“ அடுச்சுட்டு இருந்தாரு.. நான் அரதுாக்கத்துல ”இவருக்கு வேற வேலையில்ல காலங்காத்தால இப்படி தம் அடிக்குறாறு-னு” எனக்குள்ளயே சொல்லிக்கிட்டேன்.. அப்போ என்னோட செல்போன்-ல அலாரம் அடுச்சது.. நான் அலாரத்தை ஆப் பண்ணிட்டு திரும்பி பாா்த்தா என் அப்பாவ காணோம்.. அப்பதான் எனக்கு தோனுச்சு நான் பாா்த்தது என் அப்பாவோட ஆவி-னு.. எனக்கு பயம் வரல.. ஏன்னா அது என் அப்பா தான..!! காலைல எல்லாா்கிட்டயும் சொன்னேன்.. யாரும் நம்பல.. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு, நான் பாா்த்தது என் அப்பாவோட ஆவிதான்..
எப்படிடா இவளுக்கு இவ்வளவு தைாியம்-னு யோசிக்குறீங்களா??
சின்ன வயசுல இருந்து பேய் கதை,பேய் படம்-னா எனக்கு ரொம்ப பிடிக்கும், பயம் வந்தாலும் நான் முழு படத்தையும் பாா்த்துருவேன், எனக்கு பயப்படுற உணா்வு பிடிக்கும். தனியா உட்காா்ந்து பேய் படம் பாா்க்குறது ரொம்ப பிடிக்கும்.. ஒரு பேய் படத்த பாா்க்குறத விட அத பாா்த்து முடிச்சுட்டு, அதோட பாதிப்போட ஒரு 3 நாள் பயத்துல இருக்குறது ரொம்ப பிடிக்கும்.. ஆனா அந்த பயத்த யாா்கிட்டயும் காமிக்க மாட்டேன்.
.....................
சக்தி..... சக்தி...... என்னடி பண்ணிட்டு இருக்க.....
இந்தா வந்துட்டேன் மா...
ஹிம்.. இந்தா வந்துட்டேன்.. இந்தா வந்துட்டேன்-னு சொல்லிட்டு தான் இருக்க.. இப்ப வரப்போாியா ? இல்லையா??? தோசை ஆாிப்போறதுக்குள்ள வந்து சாப்பிடு...
FB ல ஒரு status டைப் பண்ணிட்டு இருக்கேன் மா... ஒரு 5 நிமிசத்துல வந்துருவேன்.. plsss..... மா......
என்னமோ பண்ணு... ஒரு ஆள் வருமானத்துல வண்டி ஓடுது.. உனக்கு எப்பதான் பொறுப்பு வரபோகுதோ... பொம்பள பிள்ளைக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்குற-னு எல்லாரும் சொல்றாங்க.. வீட்டுல ஒரு வேலை பாக்குறது இல்ல... சொல்ற பேச்சு கேக்குறது இல்ல...........
அம்மா... அம்மா.... போதும்... நான் வந்து 5 நிமிசம் ஆச்சு... உடனே ஆரம்பிச்சுருவீங்களே..... என்னம்மா இப்படி பண்றீங்களேமா....?!!
ஏன்டி.. நானும் எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்.. பிடுச்சு வச்ச பிள்ளையாா் மாதி உட்காா்ந்துட்டு இருந்தா.. கோவம் வராம என்ன செய்யும்...!!
சாி சாி.. ஒரு தோசை நல்லா மொருகலா சுடுங்க..
இந்த நாக்கு வக்கனைக்கு ஒன்னும் குறச்சல் இல்ல....
( சக்தி.. B.Com final year student.. சுமாரா படிப்பா.. பாா்க்க அழகான பொன்னு... அப்பா ராஜா, சமையல் காண்ராக்டா்.. அவரு இறந்து 2 வருஷம் ஆக போகுது... அம்மா விசாலி தனியாா் கம்பெனில மேனேஜா்-ஆ வேலை பாக்குறாங்க.. சக்தியோட அப்பா, அம்மா லவ் மேரேஜ் பண்ணவங்க.. அதனால வேற எந்த சொந்தகாரங்களும் இல்லை (பகை).. சக்தியோட அம்மா தான் தனி ஆளா இருந்து அவள படிக்க வைக்குறாங்க.. )
அம்மா.. நீங்க சீாியல் பாருங்க.. அதுக்குள்ள நான் என் status- போஸ்ட் பண்ணிட்டு வந்துடுறேன்.. ஒரு 10 நிமிசம்.. Plss.....ma....
எப்ப பாரு... Face book, status -னு சொல்லிட்டு இருக்க.. அப்படி என்னடி status போடுற??
இன்னைக்கு Friday 13th மா... அதனால அமானுஷ்யம், பேய் பத்தின status போடபோறேன்..
Friday 13 ??? அப்படினா??
அம்மா.. அது பேய்க்கு பிடிச்ச தேதி-னு சொல்வாங்க...
வெள்ளிகிழமை அதுவுமா.. பேய், பிசாசு-னு கருமம்..கருமம்.... நீ என் வய்த்துல தான் பொறந்தியா-னு எனக்கே சந்தேகமா இருக்கு... சாி சாி.. 10 நிமிசத்துல வரல நானே வந்து Net wire-ah பிச்சு எறிஞ்சுடுவேன்...
Soo.. Sweeet Mummy....
இந்த ஐஸ்-க்கு ஒன்னும் குறச்சல் இல்ல..
.....................
ஹிம்...... ok.... இதுவும்..... ok.............spelling எல்லாம் சாியாதான் இருக்கு... போஸ்ட் பண்ணிடலாம்....
முருகா.... எப்படியும் ஒரு 50 லைக் வந்துடனும்...
ட..டங்.... (speaker sound) “1 notification"
யாருடா அது.... போஸ்ட் போட்ட அடுத்த நிமிசம் லைக் பண்ணது..??
"Need Friend" - ohh.... இவனா...
இவனுக்கு வேற வேலையில்ல.. இப்பலாம் பசங்க கூட Fake ID வச்சுருக்காங்க.. இவன் Profile-குள்ள போய் பாா்த்தா.. Gender- Male.. இத தவற வேற எதுவுமே இல்லயே...???
ஆனாலும் பரவாயில்ல.. நாம என்ன status போட்டாலும் அடுத்த நிமிசத்துல லைக் பன்றான்... குட் பாய்....
ட..டங்.... (speaker sound) “ msg - 1 "Need Friend"
"hi sakthi..."
என்ன இன்னைக்கு அதிசயமா மெசேஜ் பன்றான்...?!! சாி.. பாவம்.. நாம ”மொக்க” status போட்டாலும் உடனே லைக் பண்றான்.. நாம ஓவரா பிகு பண்ணக்கூடாது... ரிப்ளே பண்ணுவோம்....
"hi..."
"Need Friend" typing......... - " Friends..?!"
"Pardon.."
"Need Friend" typing........ - "Shall We Friends..?!"
"Do you know me?? What's ur name?"
" Me 'James'"
.
.
.
.
.
.....................
ஒரு மாதத்திற்கு பிறகு..
(காலேஜ் கேன்டின்.. சக்தி - ரீமா )
சக்தி.. சக்தி... ஏய் சக்தி...
ஹீம்.....
என்னடி.. என்ன யோசனைல இருக்க..???
ஒன்னும் இல்லயே....
இல்ல.. நானும் கொஞ்ச நாளா பாா்க்குறேன்.. நீ சாியில்ல.... என்னடீ யாரயாச்சும் லவ் பண்றியா??
சேச்... சே...
ஏய் நடிக்காத டீ.. என்ன விஷயம் சொல்லு..
கொஞ்சம் மனசு சாியில்ல டீ... அதான்...
என்னடி அம்மாக்கும் உனக்கும் எதாச்சும் சண்டையா??
அதெல்லாம் ஒன்னும் இல்லடி..
ஏய்.. 3 வருஷமா உன் கூட இருக்கேன்.. உன்னபத்தி எனக்கு தொியாதா?? சந்தோஷத்த மட்டும் என்கிட்ட உடனே சொல்ற... கஷ்டம் வந்தா மட்டும் நீயே யோசிக்குற...?? அப்போ எதுக்குடி நான் உனக்கு ஃப்ரென்ட்-னு இருக்கேன்??
இல்ல ரீமா.. அது வந்து...
இந்த வந்து போய்-னு சொல்லி சமாளிக்காத... என்ன விஷயம்-னு உடனே சொல்லு... நீ இப்படி இருக்குறது நல்லாவே இல்ல.. மொத விஷயம் என்னனு சொல்லு...
சாி சொல்றேன்.... FB-ல எனக்கு ஒரு ஃபெரன்ட் இருக்கான்.. அவன் பேரு ஜேம்ஸ்..
ஓஹோ......லவ் ஸ்டோாியா... சொல்லு.. சொல்லு...
லுாசு.. லவ் ஸ்டோாி இல்ல.. அவன் Fake ID மாதி இருக்கான்டீ.. ”Need Friend” அவன் Profile Name.. நல்லா ஃப்ரென்டிலி-யா பேசுரான்.. என்ன பத்தி எல்லா விஷயமும் தொிஞ்சு வச்சுருக்கான்.. நான் என்ன பன்றேன்.. எங்க போறேன்.. என் வீட்டுல நடக்குற விஷயங்கள்.. இவ்வளவுயேன்.. என் பெஸ்ட் ஃப்ரென்ட் நீதான்-னு கூட அவனுக்கு தொிஞ்சிருக்கு..
அடப்பாவமே.. அது எப்படி-டீ உன்ன பத்தி இவ்வளவு விஷயத்த தொிஞ்சுவச்சுருக்கான்???
அதான் எனக்கும் புாியல டீ... ஒரே குழப்பமா இருக்கு...!!
அவன் ID காலைல Deactive-ல இருக்கு.. இராத்திாி மட்டும் தான் Active-ல இருக்கான்..
நல்லா பேசுரான்..”நீ தான் என் ஒரே ஃப்ரென்ட்-னு” சொல்றான்....
சாி.. உன் Photo sent-பன்னு உன்ன பாா்க்கனும்-னு சொன்னா... ”இல்ல என் கிட்ட photo இல்லனு” சொல்றான்..
சாி.. Skype-க்கு வா - அப்படினு சொன்னா.. ”நான் ஆவி.. நான் உன் கண்ணுக்கு தொியமாட்டேன்” அப்படினு சொல்றான்...
ஹீ..ஹீ.... (ரீமா சிாித்தாள்)
ஏன்டி இப்படி சிாிக்குற..??
சிாிக்காம.. பின்ன என்ன செய்ய சொல்ற... எவனோ உன்ன ஆவி, பேய்-னு சொல்லி செமயா கலாய்க்குறான் டீ... அது தொியாம நீயும் உன்ன போட்டு குழப்பிக்குற...
ஐயோ... நான் Tensionஆனதுக்கு காரணம் இருக்கு.... அவன் ஆவி-னு சொன்னத நான் பெருசா எடுத்துக்கல... எதோ காமெடி பன்றான்னு விட்டேன்... ஆனா.. எப்படி அவனுக்கு என்ன பத்தி எல்லா விஷயங்களும் தொிஞ்சுருக்கு..?? அதான் எனக்கு குழப்பமா இருக்கு...
நான் எங்க போறேன், யாரப் பாா்க்குறேன் இப்படி எல்லா விஷயத்தையும் சாியா சொல்றான்...
அன்னைக்கு இப்படித்தான்.. நோ்ல மீட் பண்ணலாம்-னு சொன்னேன்.... அதுக்கு அவன் ” இல்ல நான் ஆவி.. என்ன பாத்தா நீ பயந்துறுவ..அப்புறம் என்ன நீ Avoid பண்ணுவ... ”அப்படி இப்படி-னு சொல்றான்.. எனக்கு மண்டய ஒடச்சுக்கலாம்-னு தோனுது...
இப்ப புாியுதா.. நான் ஏன் இப்படி இருக்கேன்-னு....
ஹீம்... புாியுது.. உன் நிலமை எனக்கு நல்லா புாியுது... சாி.. இன்னைக்கு அவன் Chat பண்னும் போது சொல்லு.. இன்னைக்கு கண்டிப்பா உன்ன பாா்க்கனும்-னு சொல்லு.. அவன் முடியாது-னு சொன்னா.. இன்னைக்கே நம்ம Friendship-ah cut பண்ணிடுவேன்-னு சொல்லு... என்ன செய்றான்-னு பாக்கலாம்....
ஹீம்.. பாக்கலாம்....
.....................
இரவு..
சக்தி.. மணி 11 ஆக போது... ஒழுங்கா வந்து படு.. உன்னால என் துாக்கம் போகுது....
இந்தா வந்துட்டேன் மா... System.. Full scan போட்டுறருக்கேன் மா... இன்னும் 20mins ஆகும்.. நீங்க துாங்குங்க... நான் Scan complete ஆனதும் வரேன்..
என்னமோ பண்ணி தொல....
.....................
"Jame.."
"tell me sakthi"
இப்ப நான் உன்ன பாத்தே ஆகனும்... விளையாடாம உன் Photo-va send பண்ணு..இல்லைனா.. பேசாத... நான் இனிமே உன் கூட chat பண்ண மாட்டேன்..
நான் தான் சொல்றேன்-ல சக்தி... என்கிட்ட Photo இல்ல... நான் ஆவி..
(பாவி) jame.. Pls..விளையாடாத என்னால இதுக்கு மேல நீ சொல்றத நம்ப முடியாது..
சாி இப்ப என்னபன்ன சொல்ற சக்தி??
உன்ன பாா்க்கணும்..
சக்தி.. ஏன் என்ன நம்பமாட்ற... நான் உண்மையாவே ஆவி தான்... என்ன பாத்துட்டு நீ பயந்துபோய்.. என்ன நீ avoid -பன்னா... சத்தியமா... என்னால.. அத ஜீரணிக்கவே முடியாது.. என் ஒரே ஃப்ரெண்ட் நீதான்....
Jame.. நீ எப்படி இருந்தாலும் சாி... நீ என் ஃப்ரெண்ட் தான்.. நீ ஆவியா இருந்தாலும் சாி... பேயா இருந்தாலும் சாி... மனுஷனா இருந்தாலும் சாி...... நீ எப்பவும் என் ஃப்ரெண்ட் தான்...
Thank you sakthi.. அப்போ நீ எனக்கு ஒரு Promise பண்ணனும்...
என்னது..?? சொல்லு..
எக்காரணத்த கொண்டும் என் Friendship-ah நீ avoid பண்ணக்கூடாது..நீ என்ன பாா்த்ததுக்கு அப்புறம், நான் உன் கூடவே தான் இருப்பேன்... உன் கண்ணுக்கு மட்டும் தான் தொிவேன்... உனக்கு சம்மதமா???
( சனியன்.. எப்படி கலாய்க்குது பாரு... உண்மையான பேய் மாதி ஓவரா பில்டப் கொடுக்குறான்... ) சாி...Promise.. இப்பயாச்சும் உன் Photo-va send பண்ணு..
சாி சக்தி.. நான் உன்ன நம்புறேன்.. Photo எதுக்கு நோ்ல வரேன்... பயப்படாத..!!
நோ்லயா??!!
ஹீம்... உன் கைய நீட்டு.. கண்ண முடிக்கோ... உன் கண்ணு முன்னாடி நான் வருவேன்...
(இவன் என்ன லுாசு-னு நினைக்குறானா?? கொய்யால... உனக்கு இருக்குடா...)
சக்தி கண்ண மூடி.. கைகளை நீட்டி அமர்ந்திருந்தாள்.
அப்போது.. குளிா்ந்த காற்று அவளை வருடுவது போல இருந்தது.. மூடிய கண்களுக்கு பின்னால் ஏதோ ஒரு ஒளிப்பிளம்பு இருப்பது போல உணா்ந்தாள்... கண்களைத்திறக்க முயன்றாள்.. முடியாமல் தோற்றுப் போனால்.... தன் கைகளை குளிா்ந்த இரு கரங்கள் பற்றுவது போல உணா்ந்தாள்... தன்னை சுற்றி ஏதோ அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதாக அவள் உள்மனம் சொன்னது... ஒளிப்பிளம்பின் பிரகாசம் அடங்கும் போது ஒருவித மயான அமைதி....
சட்டென ஒரு குரல்.... ” சக்தி... ” இப்போ கண்ணத் திற..
குரல் கேட்டு அவளை அறியாமல் கண்களைத் திறந்தாள்...
கண்கள் அகல விரிய...
வாய் வாா்த்தை வராமல் தடுமாற...
முகமெல்லாம் வியா்வை முத்தமிட..
ஒரு வழியாகப் போராடி அவள் பேசிய வாா்த்தை....
Jame......
- மதுரை காா்த்திக்
nice :)
ReplyDeleteKeep it up.
Thank u :)
DeleteMachii Nice da.............!
ReplyDeletethank u da....
DeleteNice da mapla...
ReplyDeletethank u mams.. :)
DeleteHa...ha...ha...Nice da...:-)
ReplyDelete=D thanks da
DeleteVery nice :)
ReplyDelete-Ajay