ஓஜா போர்டு (Ouija Board) என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? அதை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி நான் படித்து அறிந்த விடயங்களை தங்களிடன் பகிா்கிறேன்.
இறந்தவா்களிடம் தொடா்பு கொண்டு அவா்களிடம் பேச உதவும் ஊடகங்களில் மிக பிரபலமானது இந்த ஓஜா போர்டு (Ouija Board).
ஓஜா போர்டானது ஒரு பலகை/மரபலகையில் ஆங்கில எழுத்துகள் A முதல் Z வரையும், எண்கள் 0 முதல் 1 வரையும் எழுத பட்டிருக்கும் மற்றும் சூரியன் ,சந்திரன் ஆகியவற்றின் படங்களுடம் Yes, No, Goodbye போன்ற வாா்த்தைகளும் எழுதபட்டிருக்கும்.
இது கி.பி 1100 காலகட்டங்களில் முதன்முதலில் சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெறும் விளையாட்டாக எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் முயற்சித்தால் மட்டுமே உங்களால் ஆத்மாக்களுடன் தொடர்புகொள்ள முடியும்.
ஓஜா போர்டு (Ouija Board) பயன்படுத்தும் போது முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியவை..
- மொட்டை மாடியிலோ அல்லது திறந்த நிலப்பரப்பு உள்ள இடங்களிலோ கண்டிப்பாக இதை பயன்படுத்தகூடாது.
- முதலில் நீங்கள் எந்த அறையில் பயன்படுத்த போகிறீர்களோ அந்த அறையை சுத்தமாக வைக்கவும். துடைப்பம் , செருப்பு ஆகியவை அந்த அறையில் இருக்க கூடாது. சாமி சிலைகளோ, படங்களோ இருந்தால் அவற்றையும் நீக்கவும்.
அதேபோல் கண்ணாடிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை துணியால் மூடிவிடவும்.. கண்ணாடிகள் ஆவி உலகிற்கும் நம் உலகிற்கும் பாலமாக நம்பப்படுகிறது எனவே கண்ணாடிகளை கண்டிப்பாக மூடி வைக்கவும்.
- நீங்கள் தனியாகவே இதை பயன்படுத்தலாம்.. இருந்தாலும் ஒரு நண்பருடன் நீங்கள் இதை பயன்படுத்துவது நல்லது .
- இரவு நேரமே இதை பயன்படுத்த உகந்த நேரம். உங்கள் அறையில் இருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவா்த்தி வெளிச்சதை மட்டும் பயன்படுத்தவும் , அறையில் வேறு எந்த சத்தமும் இல்லாமல் பார்த்துகொள்வது மிக முக்கியம்.
- தரையில் அமர்ந்து உபயோகிப்பதே சிறந்தது. முதலில் ஒரு நாணயத்தை போர்டின் மீது வைத்து அதன் மீது உங்கள் ஆள்காட்டி விரலை வைக்கவும் . இதை உபயோகிக்கும் பொழுது அருகில் உங்கள் நண்பா்கள் இருந்தால் அவர்களும் அந்த நாணயத்தின் மீது விரலை வைக்க வேண்டும். முதலில் மூன்று முறை நாணயத்தை சுற்றவும்.. சுற்றியபின் " இங்கே யாரவது இருகிறீர்களா? " என்று கேட்கவும் .
இதுதான் முதல் அடி நீங்கள் அவற்றுடன் தொடர்புகொள்ள ஆரம்பித்து விட்டீர்கள் .
- சில நேரம் நாணயம் நகராது. ஒரு வேலை அந்த அறையில் ஆத்மாக்கள் இல்லாமல் இருக்கலாம், இல்லையென்றால் இருந்தும் உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கலாம் . "Yes ", "S" என்ற எழுத்தை நோக்கி நாணயம் நகர்ந்தால் ஆத்மா அந்த அறையில் இருக்கிறது என்றும் அவை உங்களுடன் தொடர்பு கொள்ள தயார் என்றும் அர்த்தம் ..
- உங்கள் முதல் கேள்வி "நீங்க MOONல் இருந்து வரீங்களா? இல்லை SUNல் இருந்து வரீங்களா? ", என்று கேட்கவும். நாணயமானது மூன் படம் பக்கமோ அல்லது மூன் என்ற எழுத்துக்களையோ நெருங்கினால் அந்த ஆத்மா பொய்களை அதிகமாக கூறக்கூடியது, தீய ஆத்மா என்று அர்த்தம் .. சன் என்றால் அது உண்மையை பேசும் நல்ல ஆத்மாவாகும்.
- அவற்றிடம் வழக்கமான கேள்விகளை நீங்கள் கேட்கலாம் . முக்கியமாக அவற்றிடம் பேசும் பொழுது சிரிக்கவோ, இல்லை பயமோ கூடாது. உங்களது சில்லறை தனமான கேள்விகள் அவற்றை எரிச்சல் அடைய செய்யலாம்.
அது சரி.. அவைகளிடம் என்ன கேள்விகளை கேட்கலாம்..!
* உங்கள் பெயர் ?
* எந்த வயதில் இறந்தீர்கள் ? எந்த ஆண்டு இறந்தீர்கள் ?
* இந்த அறையில் வேறு ஏதேனும் ஆத்மா உள்ளதா ?
இது போன்ற கேள்விகளை நீங்கள் அவற்றிடம் கேட்கலாம்.
உங்கள் கேள்விகளுக்கு நாணயம் ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்து பதில் சொல்லும் . அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் சுலபமாக புரிந்துகொள்ளலாம் .
- நாணயம் Z-A அல்லது 9-0 என்று வரிசையாக நகர்ந்தால் அவை தொடர்பை முடித்துக்கொள்ள முயல்கிறது என்று அர்த்தம், அந்த நிலையில் நீங்கள் "Goodbye" என்று சொல்லி முடித்துக்கொள்ளவும்.
நாணயம் Goodbye நகர்ந்தபிறகே நீங்கள் நாணயத்தில் இருந்து விரலை எடுக்கவேண்டும். அதற்கு முன்பு எக்காரணத்தை கொண்டும் நீங்கள் விரலை நாணயத்தில் இருந்து எடுக்க கூடாது.
நீங்க உண்மையாகவே ஓஜா போர்டை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் ஓஜா போர்டின் மூலம் உங்களை துன்புறுத்தும் துஷ்ட சக்தியான "ZOZO" பற்றி கண்டிப்பாக தொிந்திருக்க வேண்டும். "ZOZO"வைப் பற்றி அறியாமல் நீங்கள் ஓஜா போா்டினை பயன்படுத்தினால் பொிய ஆபத்தை சந்திக்க நோிடும்.
யாா் இந்த "ZOZO"? அது என்ன செய்யும் என்பதை கீழே பாா்ப்போம்.
"ZOZO" என்பது அமானுஷ்ய ஆத்மாவாகும் (துா் ஆத்மா).
நீங்கள் ஓஜா போர்டின் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்ததும் ஆவியின் பெயரை முதலில் கேட்பீர்கள். அது Z இல் இருந்து O என்று மாறி மாறி குறித்தால் அது அந்த அமானுஷ்ய ஆத்மா "ZOZO" தான். மேலும் அதனிடம் கேள்விகள் கேட்காமல் உடனே Goodbye சொல்லி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.
இந்த செய்தியை படிக்கும் நண்பர்கள் ஒரு சில நேரத்தில் இணைப்பின் பொழுது Z-O தானாகவே தம்மை அறியாமல் நகர்த்தியதும் உண்டு . அது நம் ஆழ்மனத்தின் விளையாட்டு .
சில நேரங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள நினைக்கும் பொழுதும், அதாவது நம் நண்பா்அல்லது உறவினா் ஒருவாின் ஆத்மாவுடன் தொடா்பு கொள்ள நினைக்கும் பொழுது இந்த "ZOZO" அரக்கன் நாம் யாரிடம் பேச நினைக்கிறோமோ அவர்களை போல் அழகாக நடித்து நம்மை ஏமாற்றி விடும். ஒரு சில நேரத்தில் நாணயம் இடது வலதாக வேகமாக நகர்த்தும்.
விளையாட்டு தனமாக இருப்பவர்களே இந்த ஆத்மாவின் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகின்றனர் .
பொதுவாக "ZOZO"விற்கு பெண்கள் மீதே அதீத நாட்டம் உள்ளதாக தெரிகிறது. பலர் தங்களது "ZOZO" அனுபவத்தை பகிரும் பொழுது, அந்த துா்ஆத்மா தங்களிடம் தொடர்பு கொள்ளும் பெண்களை கவா்ந்து அவர்களை நரகத்திற்கு அழைத்து போவதாக குறிப்பிட்டு கூறுகின்றனர் . மேலும் தொடர்பின் பொழுது இந்த "ZOZO" அதிகமாக பெண்களையே தாக்குகிறது என சிலா் ஆராய்ந்து கூறியுள்ளனா் .
இந்த ZOZO மிக சுலபமாக நம்மை ஆட்கொள்ள கூடியது . நமக்கு நெருக்கமானவர்களை தாக்கவும் செய்கிறது, ஒரு சில நேரத்தில் அவர்களது இயல்பு குணத்தையே மாற்றகூடியது. நம் வீட்டை கூட அமானுஷ்ய நிலைக்கு மாற்ற கூடியது இந்த ZOZO.
எனவே முடித்த அளவு ஆவி உலகத்தை தகுந்த அனுபவசாலியின் உதவியுடன் தொடர்புகொள்வதே நல்லது . விளையாட்டிற்காக இதை எக்காரணத்தை கொண்டும் உபயோகப்படுத்தாதீா்கள், விளையாட நமக்கு எவ்வளவோ விளையாட்டுகள் இருக்கிறது. இந்த ஓஜா போர்டைப் பற்றி முழுமையாக அறியாமல் பயன்படுத்தாதீா்கள்.
குறிப்பு : இக்கட்டுரை மூடநம்பிக்கைகளை வளா்ப்பதற்கு அல்ல. ஓஜா போர்டு பற்றி நான் அறிந்த தகவல்களை தங்களிடம் பகிா்ந்துள்ளேன். இது முழுக்க முழுக்க தங்களது நம்பிக்கையை சாா்ந்ததே.
- மதுரை காா்த்திக்
அதெல்லாம் சரி... நாங்க ஏன்யா நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகணும்... வராத பேயை கூப்பிட்டு இழுக்கணும்... :) :) :) :)
ReplyDeleteinteresting....
ReplyDeleteExperience personal anybody here? Please contact me wtsp no 9149670178
ReplyDelete