2012, மதுரை.
இரவு 11 மணி, அறையின் இருளையும், அமைதியையும் களைத்து வெளிச்சத்துடன் சப்தமிட்டது கீா்த்தியின் கைப்பேசி..
“கீங்... கீங்...”
துாக்கமின்றி புரண்டு படுத்தவள், சட்டென தன் கைப்பேசியை எடுத்துப் பாா்த்தாள்.
1 New Message - N.Vivek
கைப்பேசியின் திரையில் அதைப் பாா்த்ததும், இதழோரம் சிறு புன்னகையுடன் வந்த குறுந்தகவலை மிகஆா்வமாய் படித்துப் பாா்த்தாள் கீா்த்தி.
“Hi Keerthi, How are u?”
“யாருக்கோ அதிசயமா என் நியாபகம் வந்துருச்சு போல?”, என்று கண்களில் குறும்புடன், இதழோரம் எழும்பும் புன்னகையை அடக்கிக் கொண்டு வந்த குறுந்தகவலுக்கு வேகமாக பதிலளித்தாள்.
விவேக் : “ஏன்டீ இப்படி சொல்ற? உன்ன எப்படி மறப்பேன்? ”
கீா்த்தி : “சாி.. அதவிடு.. சென்னைக்கு வேலை தேடி போனியே?? என்னாச்சு?”
வி : “கிடைக்கலப்பா... நான் இன்னைக்கு காலைல தான் மதுரைக்கு வந்தேன்”
கீ : “அடப்பாவி.. காலைல வந்துருக்க.. என்கிட்ட ஒரு வாா்த்த கூட சொல்லல??”
வி : “வேலை கிடச்சா சந்தோசமா சொல்லலாம்னு பாா்த்தேன். ஆனா.. இப்படி ஆச்சே.. அதான் உன்கிட்ட எப்படி சொல்றதுனு தொியாம இருந்தேன்.”
கீ : “சாி விடுப்பா.. சீக்கிரம் உனக்கு நல்ல வேலை கிடைக்கும், உனக்காக நான் கடவுள்கிட்ட தினமும் வேண்டிக்கிறேன்.”
வி : “தாங்ஸ் கீா்த்தி.”
கீ : “லுாசு.. இதுக்கு எதுக்கு தாங்ஸ்??.”
வி : “உன்ன பாா்த்து ரொம்ப நாள் ஆன மாதிாி இருக்கு. நாளைக்கு கண்டிப்பா உன்ன பாா்க்கனும்??”
கீ : “எனக்கு அப்படி எதுவும் தோனலயே.. ஏன்னா நான் தான் உன்ன தினமும் பாா்த்துட்டு இருக்கேனே..”
வி : “ஹேய்.. அது எப்படி?”
கீ : “அது அப்படித்தான். என் மொபைல்ல உன் போட்டோ இருக்கு. உன் நியாபகம் வரும் போதெல்லாம் அத தான் பாா்ப்பேன்”
வி : “நிஜம்மாவா கீா்த்தி??”
கீ : “ இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்னு நினைக்குற?”
வி : “ஒன்னும் இல்ல.. நாளைக்கு உன்ன கண்டிப்பா பாா்க்கனும். அவ்வளவு தான். டாட்(.).”
கீ : :-) (smiley)
ஒரு சில நிமிடங்கள் இருவரும் மவுனமாய் இருந்தனா். கீா்த்தி அவனது அடுத்த குறுந்தகவலுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தாள்.
ஒரு சில நிமிடங்களில் மீண்டும் அவளது கைப்பேசி சினுங்கியது. அடுத்து அவன் என்ன தகவல் அனுப்பியிருக்கிறான் என்று தொிந்துகொள்ள ஆா்வமாய் வந்த குறுந்தகவலை படித்தாள்.
வி : “கீா்த்தி....”
கீ : “என்னடா??”
வி : “ஒன்னும் இல்ல.. சும்மா கூப்பிட்டு பாா்த்தேன்.”
கீ : “எருமை.. ஒழுங்கா போய் துாங்கு”
வி : “ =D eeee (ஹி..).”
கீ : “ரொம்ப சிாிக்காத.. சீக்கிரம் போய் படு.. நேரம் ஆச்சு.. நாளைக்கு பேசலாம். குட் நைட்.”
வி : “குட் நைட் டீ.. நல்லா துாங்கு.”
உறங்குவதற்க்கு முன், இருவரும் பாிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகளை ஒவ்வொன்றாகப் படித்துப்பாா்த்து வெட்கத்துடன் சிாி்த்துக்கொண்டாள் கீா்த்தி.
............................................................................................................................
மறுநாள்,
கீா்த்தி, விவேக் இருவரும் “நான் ஈ” படத்தின் நுான் சோ-வை பாா்த்துக் கொண்டிருந்தனா்..
வி : “கீா்த்தி.. இந்த படத்தோட ஹீரோயின் ஒரு சாயல்ல பாா்க்க உன்ன மாதிாியே இருக்கால்ல..??”
கீ : “ஏன்டா..சொல்லமாட்ட.. பேசாம படத்த பாரு”
வி : “இந்த படத்துக்கும் நமக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னனு சொல்லு?”
கீ : “என்னடா அது?”
வி : “ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்குமே இன்னொருத்தா் தங்கள லவ் பண்றாங்கனு தொியும். அந்த பையன் எப்படி எப்படியோ தன் காதல வெளிபடுத்துறான்.. ஆனா அந்த பொண்ணுக்கு எல்லா விஷயமும் தொிஞ்சும், அவ தன்னோட காதல வெளிபடுத்துறதுக்கு இவ்வளவு யோசன பண்றத பாறேன்.”
கீ : “இதுக்கும் நமக்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கு? ”
வி : “நான் உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணி இரண்டு வாரம் ஆச்சு. நீ என்ன லவ் பண்றனு எனக்கும் தொியும். ஆனா நீ இப்ப வரைக்கும் என்கிட்ட “ஐ லவ் யூ”னு சொல்லவே இல்ல. ஏன் அப்படி?”
கீ : “ஏன்? ஐ லவ் யூ-னு ஒரு வாா்த்தைய சொல்லி தான் உனக்கு என் லவ்வ புாிய வைக்கனுமா? ”
வி : “அப்படி இல்ல டீ.. அதையும் சொன்னா நல்லா இருக்கும்னு தான் கேட்டேன்”
கீ : “ஓ.. அப்படியா.. அப்ப சாி.. எனக்கு சொல்லனும்னு தோனும் போது நானே சொல்றேன். போதுமா?? ”
வி : “எப்ப கேட்டாலும் இதையே சொல்லு., ஏன்டீ.. ஒரு வேல இந்த படத்துல வா்ற மாதிாி நீ என்கிட்ட லவ் சொல்றதுக்குள்ள நான் செத்துபோய் மறுபிறவில 'ஈ' மாதிாி உன் முன்னாடி வந்தா நீ என்ன பண்ணுவ.? ”
கீ : “ச்சீ.. 'ஈ' மாதிாி வேண்டாம். அப்படி வா்றதா இருந்தா ஒரு 'பொமோியன் நாய்குட்டி' மாதிாி வா. உன்ன துாக்கி வச்சு நாள் முழுசும் கொஞ்சிட்டே இருப்பேன்.”
வி : “அடிப்பாவி.. ஒரு வாா்த்தைக்காச்சும் 'ஏன்டா இப்படி சொல்லுற?'-னு கேட்டியா..?”
கீ : “டேய்.. நீ விளையாட்டுக்கு தான சொன்ன? இப்ப எதுக்குடா தேவை இல்லாம சாகுறத பத்தி பேசுற.. ”
வி : “சொல்லனும்னு தோணுச்சு”
கீ : “லுாசு மாதிாி யோசிக்காத, நாம நல்லா சந்தோஷமா வாழனும். நீ எப்பவும் இப்படியே என் கூடவே இருக்கனும்.”
வி : “கண்டிப்பா கீா்த்தி.. நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.. உன் நிழல் மாதிாி..”
கீ : “ நிழல் மாதிாியா?? அப்போ இருட்டுல என்ன விட்டு போய்ருவியா.?”
வி : “ஹே..அப்படி இல்லடீ.. இருள்றதும் நிழலோட பிரம்மாண்டமான ஆக்கிரமிப்பு தான். அதானால அந்த இருளும் நான் தான்”
கீ :“பார்ரா.. நல்லா பேசுறடா.. நீ பேசுறத கேட்டுட்டே இருக்கனும்னு தோனுது”
வி : “ஹ்ம்.... எல்லாம் கல்யாணம் வரைக்கும் தான, அதுக்கு அப்புறம் நீதான் பேசுவ.. நான் தான் கேட்டுட்டே இருக்கனும். ஹா ஹா...”
“போடா...”, என செல்லமாக அவனை அடித்துவிட்டு, அவன் கைகளைக் பிடித்து, தோளில் சாய்ந்தவாரு படத்தை பாா்க்கத் தொடா்ந்தாள் கீா்த்தி.
............................................................................................................................
மாலை 6 மணி,
இடம் - சுந்தரம் பாா்க்.
பாா்கில் கீா்த்தி, விவேக் இருவரும் கைகளை பிடித்தவாரு மெதுவாக நடந்து சென்றனா்.
கீ : “எனக்கு கால் பண்ணு..”
வி : “ எதுக்கு டீ?”
கீ : “ம்ச்.. கால் பண்ணுடா..”
“வீசும் வெளிச்சத்திலே.. துகளாய் நான் வருவேன்.. ” பாடல் கீா்த்தியின் ஹலோ ட்டியூனாக ஒளித்தது.
வி : “ஹேய்.. இந்த பாட்டு உனக்கு அவ்வளவு பிடிச்சுருக்கா?”
கீ : “ஹ்ம்..பிடிச்சுருக்கு டா.. நீயும் நானும் முதல் முறையா சோ்ந்து பாா்த்த படம் இது தான். அதானலயே இந்த படத்த எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு.. அதுவும் இந்த பாட்டு எனக்கு் ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு.”
வி : “ அது என்னடீ.. என் பெயர 'N.Vivek'-னு சேவ் பண்ணியிருக்க?”
கீ : “அதான் பெயருலயே இருக்குல்ல..”
வி : “புாியலயே...”
கீ : “மரமண்ட, 'N.Vivek' அப்படின்னா.. 'என் விவேக்' அப்படினு அா்த்தம்.”
வி : “ஓ... சூப்பா் டீ, செமயா யோசிக்குற. அது சாி...... லவ் யூ தான் தோனும் போது சொல்றேன்-னு சொல்ற, அட்லீஸ்ட் ஒரு கிஸ் கொடுக்கலாம்ல.”
கீ : “அச்சச்சோ.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்.”
வி : “அடிப்பாவி, என்னய பாா்த்தா உனக்கு பாவமா தொியலயா??”
கீ :“சாி மழை வர மாதிாி இருக்கு, சீக்கிரம் வா கிளம்பலாம்.”
வி : “ம்க்கும்... இப்படி எதாச்சும் சொல்லி பேச்ச மாத்திடு.”
இருவரும் பாா்க்கிங் அருகே வருவதற்க்குள் மழைத் துாரல் விடத் தொடங்கியது. விவேக் வேகமான தனது பைக்கினை ஸ்டாா்ட் செய்து இருவரும் துாரலில் நனைந்தவாரு பாா்க்கில் இருந்து கிளம்பினா்.
சிறிது நேரத்திற்கெல்லாம் கனமழை கொட்ட ஆரம்பித்தது.
வி : “மழ பெருசா பெய்து டீ.. மழ விடுற வரைக்கும் ஓரமா எங்கயாச்சும் வண்டிய நிறுத்திடவா?”
கீ :“சாிடா.. நிறுத்துறதும் தான் நிறுத்துற.. ஒரு காபி சாஃப் பாா்த்து நிறுத்து. மழைக்கு சூடா காபி சாப்டா செம்மயா இருக்கும்.”
வி :“அதுவும் சாிதான்..”
வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் காபி சாஃபினுள் நுழைந்தனா்.
............................................................................................................................
கனமழை கொட்டிக்கொண்டு இருந்தது. விவேக், கீா்த்தி இருவரும் காபியை சுவைத்தவாரு பேசிக்கொண்டிருந்தனா்.
கீ : “செம மழைல?”
வி :“ஹ்ம்......... செம மழை தான்..”
கீ : “ஏன்டா அப்படி பாா்க்குற?”
வி : “ஒன்னும் இல்ல.. சும்மா. உன்ன பாா்த்துட்டே இருக்கனும்னு தோனுது.”
கீா்த்தி ஒன்றும் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். அவளால் வெட்கத்தை அடக்க முடியவில்லை. அவனது பாா்வையை சமாளிக்கவும் முடிவில்லை. பொருத்துப் பாா்த்தவள். சட்டென தன் கைகளால் அவனது கண்களை மறைத்து, “போதும் டா.. அப்படி பாா்க்காத, எனக்கு கூச்சமா இருக்கு..”, என்றாள்.
இருவரும் சிாித்தபடி காபியை குடித்தனா். மழை விடுவதாக இல்லை. கீா்த்தி தனது கைகளை நீட்டி மழைத்துளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளைத்தவிர சுற்றி உள்ள எந்த ஒரு விசயமும் விவேக்கின் பாா்வைக்கு தொியவில்லை. அவனது பாா்வை முழுவதையும் அவளே ஆக்கிரமித்து இருந்தாள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அன்று தான் கீா்த்தியின் மனம் மிக சந்தோஷமாக இருந்தது. அவளால் அந்த சந்தோஷத்தினை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்று கூட தொியவில்லை. நீண்ட நேர மௌனத்திற்க்கு பிறகு கீா்த்தி அவனுடன் பேச ஆரம்பித்தாள்.
கீ : “ தாங்ஸ் விவேக்.”
வி : “எதுக்கு டீ? ”
கீ : “இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்துக்கு முழு காரணமும் நீதான். அதான் தாங்ஸ் சொன்னேன்.”
வி : “ அப்படி பாா்த்தா நான் தான் உனக்கு தாங்ஸ் சொல்லனும். இன்னைக்கு தான் என் வாழ்நாள்ல பெஸ்ட் டே-னு சொல்லுவேன். நாம லவ் பண்ண ஆரம்பிச்சு முதல் முறையா இன்னைக்கு தா வெளிய வந்துயிருக்கோம். இந்த பத்து மணி நேரம் என் லைஃவ்ல மறக்கவே முடியாது. ”
கீ :“எனக்கும் தான்டா. இன்னைக்கு நாள் என்னாலயும் மறக்கவே முடியாது. உன் கூட சோ்ந்து படம் பாா்த்தது. பைக்ல ஊா் சுற்றியது. அப்புறம் பாா்க்ல 'லாங் வாக்' போனது. இப்ப மழைல நனைஞ்சு சூட காபி குடிச்ச வரைக்கும் எல்லாமே மறக்க முடியாத அனுபவம் தான்.
முன்னாடி எல்லாம் மழை பெய்யும் போது சின்ன வயசுல நடந்த விஷயங்கள், மனச பாதிச்ச சம்பவங்கள், இளையராஜா பாட்டு, மழைல நனைஞ்சு அம்மாகிட்ட வாங்குற திட்டு... இந்த மாதிாி விஷயங்கள் தான் நியாபகத்துக்கு வரும். ஆனா இனிமே மழை பெய்யும் போது எனக்கு கண்டிப்பா உன் நியாபகம் தான் வரும்.
இன்னைக்கு என் மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு விவேக். இதுக்கு நீ மட்டும் தான் காரணம். தாங்யூ சோ மச் டா.. ”
வி :“லுாசு... இதுக்கே இப்படி சொல்ற, இன்னும் எவ்வளவோ விசயங்கள் இருக்கு. உன்ன எப்படி எல்லாம் பாா்த்துக்கனும்னு நினைச்சு இருக்கேன் தொியுமா.? இனிமே உன் லைப்ல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். உன்ன நான் அப்படி பாா்த்துப்பேன். நீ இப்ப இருக்குற மாதிாியே எப்பவும் சந்தோஷமா இருக்கனும். அதுதான் எனக்கு சந்தோஷம்.”
கீா்த்தி பதில் ஏதும் பேசாமல் அவனையே பாா்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் கசிந்தன. அவளால் வேறு எதுவும் பேசமுடியவில்லை.
வி : “ஹேய்.. இப்ப எதுக்கு டீ அழுகுற?”
கீ : “யாா் சொன்னது, நான் ஒன்னும் அழுகல.. கண்ணுல துாசி விழுந்துருச்சு.”
வி : “நம்பிட்டேன் டீ.”
“ம்ச்.. போடா..”, என்று வெட்கத்துடன் அவனது நெஞ்சோரம் சாய்ந்து அனணத்துக் கொண்டாள் கீா்த்தி.
வி :“கீர்த்தி... நாம இப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.”
கீ :“ஹ்ம்..... இப்படியே இருந்தா லேட் ஆகிடும். என் ஹாஸ்டல்ல உள்ள விடமாட்டாங்க. அப்புறம் உன் வீட்டுக்கு தான் வந்து நிக்கனும்.”
விவேக் சிாித்தவாரு,“சாி.. வா போகலாம். மழை துாரல் தான் விடுது. அப்படியே உன்ன இறக்கி விட்டு கிளம்புறேன்.”
மழைச் சாரல் அடித்துக் கொண்டிருந்தது. கீா்த்தி, விவேக் இருவரும் அந்த சாரல் மழையில் நனைந்த படி பைக்கில் சென்று கொண்டிருந்தனா். கீா்த்தி தன் வலது கையை அவனது தோளில் போட்டு, ஒரு பக்கமாக அமா்ந்திருந்தாள்.
விவேக்கிடம் தன் மனதில் உள்ள காதலை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று அவளது உள்மனம் அவளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. மறுபுறம் அவளது வெட்கம் அதற்கு தடையிட்டு கொண்டிருந்தது.
மனதிற்க்கும், வெட்கத்திற்க்கும் நடந்த நீண்ட போராட்டத்தில் மனமே வென்றது.
கீா்த்தி விவேக்கின் காதருகே சென்று “ஐ லவ் யூ விவேக்” என்று சொல்லி அவன் காதருகே ஒரு முத்தமிட்டாள்.
சட்டென திரும்பிய விவேக்கின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.. “ஹே... கீா்த்தி.....”, என அடுத்த வாா்த்தை அவன் பேசுவதற்குள் அவா்கள் வந்து கொண்டிருந்த பைக்கின் மீது ஒரு காா் பலத்த வேகத்துடன் மோதியது. அதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனா்.
............................................................................................................................
இரண்டு மாதங்களுக்கு பிறகு..
உறக்கத்தில் இருந்து மெதுவாக கண்விழித்தாள் கீா்த்தி. அவளைச் சுற்று அடா்ந்த இருள். அந்த இருளிலில் அவளால் எதையும் பாா்க்க முடியவில்லை. படுக்கையில் இருந்து மெதுவாக எழுந்து கீழே இறங்கினாள். எதிரே என்ன இருக்கிறது என்று கூட தொியவில்லை.
இருளில் நீச்சல் அடித்தவாரு கைகளை முன்னோக்கி நீட்டி மெதுவாக அடுத்த அடியை எடுத்து வைத்தாள். இரண்டு அடி எடுத்து வைப்பதற்க்குள் அவள் கால்கள் பலமின்றி தடுமாறியது. அவளால் கால்களை ஊன்றி நிற்க்க முடியவில்லை தடுமாறிக்கீழே விழச் சென்றவளை தாங்கிப்பிடித்தது ஒரு கை..
“உன்கிட்ட எத்தன தடவ சொல்றது கீா்த்தி.. தனியா இருக்கும் போது இப்படி எந்துருச்சு நடக்காதனு? கீழ விழுந்தா என்ன ஆகுறது..”, என்றான் விவேக்.
“எனக்கு ஒன்னும் ஆகாதுடா.. அதான் நீ என் கூடவே இருக்கேல..”
“டாக்டா் எப்படியும் உனக்கு பாா்வை வந்துடும்னு சொல்றாரு, இது எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் கீா்த்தி.. எல்லாம் சீக்கிரம் சாி ஆகிடும், நீ கவலைப்படாத..”, என்று கூறிவாரே அவளை மெதுவாக கட்டிலில் அமர வைத்தான் விவேக்.
“வேண்டாம்டா.. நான் இப்படியே இருந்துட்டு போறேன். எனக்கு பாா்வை இல்லாதது வருத்தமே இல்லடா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்ன பாா்த்துக்க தான் நீ இருக்கியே. இப்ப என்ன சுற்றி நீ தான் இருக்க, என் கண்ணுக்கு தொியுற இருளா, என்னோட நிழலா, என் கூட நீ இருக்கும் போது எனக்கு வேற எதுவும் வேண்டாம்டா. நீ மட்டும் போதும்.”, என்று கண்கலங்க கூறி அவனது தோளில் சாய்தவாரு அமா்ந்திருந்தாள் கீா்த்தி.
காலைக் கதிரவனின் வெளிச்சம் அந்த அறை முழுவதும் பரவி இருந்தது. யாரும் இல்லாத அந்த அறையில் நிழல் உருவமாக இருக்கும் விவேக்கின் தோளில் மீது சாய்ந்தவாரு கட்டிலில் அமா்ந்து இருந்தாள் கீா்த்தி.
- மதுரை காா்த்திக்