Monday 13 October 2014

என்னோடு நீ இருந்தால்..2012, மதுரை.

இரவு 11 மணி, அறையின் இருளையும், அமைதியையும் களைத்து வெளிச்சத்துடன் சப்தமிட்டது கீா்த்தியின் கைப்பேசி..

“கீங்... கீங்...”

துாக்கமின்றி புரண்டு படுத்தவள், சட்டென தன் கைப்பேசியை எடுத்துப் பாா்த்தாள்.

1 New Message - N.Vivek

கைப்பேசியின் திரையில் அதைப் பாா்த்ததும், இதழோரம் சிறு புன்னகையுடன் வந்த குறுந்தகவலை மிகஆா்வமாய் படித்துப் பாா்த்தாள் கீா்த்தி.

“Hi Keerthi, How are u?”

“யாருக்கோ அதிசயமா என் நியாபகம் வந்துருச்சு போல?”, என்று கண்களில் குறும்புடன், இதழோரம் எழும்பும் புன்னகையை அடக்கிக் கொண்டு வந்த குறுந்தகவலுக்கு வேகமாக பதிலளித்தாள்.

விவேக் : “ஏன்டீ இப்படி சொல்ற? உன்ன எப்படி மறப்பேன்? ”

கீா்த்தி : “சாி.. அதவிடு.. சென்னைக்கு வேலை தேடி போனியே?? என்னாச்சு?”

வி : “கிடைக்கலப்பா... நான் இன்னைக்கு காலைல தான் மதுரைக்கு வந்தேன்”

கீ : “அடப்பாவி.. காலைல வந்துருக்க.. என்கிட்ட ஒரு வாா்த்த கூட சொல்லல??”

வி : “வேலை கிடச்சா சந்தோசமா சொல்லலாம்னு பாா்த்தேன். ஆனா.. இப்படி ஆச்சே.. அதான் உன்கிட்ட எப்படி சொல்றதுனு தொியாம இருந்தேன்.”

கீ : “சாி விடுப்பா.. சீக்கிரம் உனக்கு நல்ல வேலை கிடைக்கும், உனக்காக நான் கடவுள்கிட்ட தினமும் வேண்டிக்கிறேன்.”

வி : “தாங்ஸ் கீா்த்தி.”

கீ : “லுாசு.. இதுக்கு எதுக்கு தாங்ஸ்??.”

வி : “உன்ன பாா்த்து ரொம்ப நாள் ஆன மாதிாி இருக்கு. நாளைக்கு கண்டிப்பா உன்ன பாா்க்கனும்??”

கீ : “எனக்கு அப்படி எதுவும் தோனலயே.. ஏன்னா நான் தான் உன்ன தினமும் பாா்த்துட்டு இருக்கேனே..”

வி : “ஹேய்.. அது எப்படி?”

கீ : “அது அப்படித்தான். என் மொபைல்ல உன் போட்டோ இருக்கு. உன் நியாபகம் வரும் போதெல்லாம் அத தான் பாா்ப்பேன்”

வி : “நிஜம்மாவா கீா்த்தி??”

கீ : “ இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்னு நினைக்குற?”

வி : “ஒன்னும் இல்ல.. நாளைக்கு உன்ன கண்டிப்பா பாா்க்கனும். அவ்வளவு தான். டாட்(.).”

கீ : :-) (smiley)

ஒரு சில நிமிடங்கள் இருவரும் மவுனமாய் இருந்தனா். கீா்த்தி அவனது அடுத்த குறுந்தகவலுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தாள்.

ஒரு சில நிமிடங்களில் மீண்டும் அவளது கைப்பேசி சினுங்கியது. அடுத்து அவன் என்ன தகவல் அனுப்பியிருக்கிறான் என்று தொிந்துகொள்ள ஆா்வமாய் வந்த குறுந்தகவலை படித்தாள்.

வி : “கீா்த்தி....”

கீ : “என்னடா??”

வி : “ஒன்னும் இல்ல.. சும்மா கூப்பிட்டு பாா்த்தேன்.”

கீ : “எருமை.. ஒழுங்கா போய் துாங்கு”

வி : “ =D  eeee (ஹி..).”

கீ : “ரொம்ப சிாிக்காத.. சீக்கிரம் போய் படு.. நேரம் ஆச்சு.. நாளைக்கு பேசலாம். குட் நைட்.”

வி : “குட் நைட் டீ.. நல்லா துாங்கு.”

உறங்குவதற்க்கு முன், இருவரும் பாிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகளை ஒவ்வொன்றாகப் படித்துப்பாா்த்து வெட்கத்துடன் சிாி்த்துக்கொண்டாள் கீா்த்தி.


............................................................................................................................


மறுநாள்,

கீா்த்தி, விவேக் இருவரும் “நான் ஈ” படத்தின் நுான் சோ-வை பாா்த்துக் கொண்டிருந்தனா்..

வி : “கீா்த்தி.. இந்த படத்தோட ஹீரோயின் ஒரு சாயல்ல பாா்க்க உன்ன மாதிாியே இருக்கால்ல..??”

கீ : “ஏன்டா..சொல்லமாட்ட.. பேசாம படத்த பாரு”

வி : “இந்த படத்துக்கும் நமக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னனு சொல்லு?”

கீ : “என்னடா அது?”

வி : “ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்குமே இன்னொருத்தா் தங்கள லவ் பண்றாங்கனு தொியும். அந்த பையன் எப்படி எப்படியோ தன் காதல வெளிபடுத்துறான்.. ஆனா அந்த பொண்ணுக்கு எல்லா விஷயமும்  தொிஞ்சும், அவ தன்னோட காதல வெளிபடுத்துறதுக்கு இவ்வளவு யோசன பண்றத பாறேன்.”

கீ : “இதுக்கும் நமக்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கு? ”

வி : “நான் உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணி இரண்டு வாரம் ஆச்சு. நீ என்ன லவ் பண்றனு எனக்கும் தொியும். ஆனா நீ இப்ப வரைக்கும் என்கிட்ட “ஐ லவ் யூ”னு சொல்லவே இல்ல. ஏன் அப்படி?”

 கீ : “ஏன்? ஐ லவ் யூ-னு ஒரு வாா்த்தைய சொல்லி தான் உனக்கு என் லவ்வ புாிய வைக்கனுமா? ”

வி : “அப்படி இல்ல டீ.. அதையும் சொன்னா நல்லா இருக்கும்னு தான் கேட்டேன்”

 கீ : “ஓ.. அப்படியா.. அப்ப சாி..  எனக்கு சொல்லனும்னு தோனும் போது நானே சொல்றேன். போதுமா?? ”

வி : “எப்ப கேட்டாலும் இதையே சொல்லு., ஏன்டீ.. ஒரு வேல இந்த படத்துல வா்ற மாதிாி நீ என்கிட்ட லவ் சொல்றதுக்குள்ள நான் செத்துபோய் மறுபிறவில 'ஈ' மாதிாி உன் முன்னாடி வந்தா நீ என்ன பண்ணுவ.? ”

கீ : “ச்சீ.. 'ஈ' மாதிாி  வேண்டாம். அப்படி வா்றதா இருந்தா ஒரு 'பொமோியன் நாய்குட்டி' மாதிாி வா. உன்ன துாக்கி வச்சு நாள் முழுசும் கொஞ்சிட்டே இருப்பேன்.”

வி :  “அடிப்பாவி.. ஒரு வாா்த்தைக்காச்சும் 'ஏன்டா இப்படி சொல்லுற?'-னு கேட்டியா..?”

கீ : “டேய்.. நீ விளையாட்டுக்கு தான சொன்ன? இப்ப எதுக்குடா தேவை இல்லாம சாகுறத பத்தி பேசுற.. ”

வி : “சொல்லனும்னு தோணுச்சு”

கீ : “லுாசு மாதிாி யோசிக்காத, நாம நல்லா சந்தோஷமா வாழனும். நீ எப்பவும் இப்படியே என் கூடவே இருக்கனும்.”

வி : “கண்டிப்பா கீா்த்தி.. நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.. உன் நிழல் மாதிாி..”

கீ : “ நிழல் மாதிாியா?? அப்போ இருட்டுல என்ன விட்டு போய்ருவியா.?”

வி : “ஹே..அப்படி இல்லடீ.. இருள்றதும் நிழலோட பிரம்மாண்டமான ஆக்கிரமிப்பு தான். அதானால அந்த இருளும் நான் தான்”

கீ :“பார்ரா.. நல்லா பேசுறடா.. நீ பேசுறத கேட்டுட்டே இருக்கனும்னு தோனுது”

வி : “ஹ்ம்.... எல்லாம் கல்யாணம் வரைக்கும் தான, அதுக்கு அப்புறம் நீதான் பேசுவ.. நான் தான் கேட்டுட்டே இருக்கனும். ஹா ஹா...”

“போடா...”, என செல்லமாக அவனை அடித்துவிட்டு, அவன் கைகளைக் பிடித்து, தோளில் சாய்ந்தவாரு படத்தை பாா்க்கத் தொடா்ந்தாள் கீா்த்தி.


............................................................................................................................


மாலை 6 மணி,

இடம் - சுந்தரம் பாா்க்.

பாா்கில் கீா்த்தி, விவேக் இருவரும் கைகளை பிடித்தவாரு மெதுவாக நடந்து சென்றனா்.

கீ : “எனக்கு கால் பண்ணு..”

வி : “ எதுக்கு டீ?”

 கீ : “ம்ச்.. கால் பண்ணுடா..”

“வீசும் வெளிச்சத்திலே.. துகளாய் நான் வருவேன்.. ” பாடல் கீா்த்தியின் ஹலோ ட்டியூனாக ஒளித்தது.

வி : “ஹேய்.. இந்த பாட்டு உனக்கு அவ்வளவு பிடிச்சுருக்கா?”

 கீ : “ஹ்ம்..பிடிச்சுருக்கு டா.. நீயும் நானும்  முதல்  முறையா சோ்ந்து பாா்த்த படம் இது தான். அதானலயே இந்த படத்த எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு.. அதுவும் இந்த பாட்டு  எனக்கு் ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு.”

வி : “ அது என்னடீ.. என் பெயர 'N.Vivek'-னு சேவ் பண்ணியிருக்க?”

கீ : “அதான் பெயருலயே இருக்குல்ல..”

வி : “புாியலயே...”

கீ : “மரமண்ட, 'N.Vivek' அப்படின்னா.. 'என் விவேக்' அப்படினு அா்த்தம்.”

வி : “ஓ... சூப்பா் டீ, செமயா யோசிக்குற. அது சாி...... லவ் யூ தான் தோனும் போது சொல்றேன்-னு சொல்ற, அட்லீஸ்ட் ஒரு கிஸ் கொடுக்கலாம்ல.”

கீ : “அச்சச்சோ.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்.”

வி : “அடிப்பாவி, என்னய பாா்த்தா உனக்கு பாவமா தொியலயா??”

கீ :“சாி மழை வர மாதிாி இருக்கு, சீக்கிரம் வா கிளம்பலாம்.”

வி : “ம்க்கும்... இப்படி எதாச்சும் சொல்லி பேச்ச மாத்திடு.”

இருவரும் பாா்க்கிங் அருகே வருவதற்க்குள் மழைத் துாரல் விடத் தொடங்கியது. விவேக் வேகமான தனது பைக்கினை ஸ்டாா்ட் செய்து இருவரும் துாரலில் நனைந்தவாரு பாா்க்கில் இருந்து கிளம்பினா்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கனமழை கொட்ட ஆரம்பித்தது.

வி : “மழ பெருசா பெய்து டீ.. மழ விடுற வரைக்கும் ஓரமா எங்கயாச்சும் வண்டிய நிறுத்திடவா?”

கீ :“சாிடா.. நிறுத்துறதும் தான் நிறுத்துற.. ஒரு காபி சாஃப்  பாா்த்து நிறுத்து. மழைக்கு சூடா காபி சாப்டா செம்மயா இருக்கும்.”

வி :“அதுவும் சாிதான்..”

வண்டியை  நிறுத்தி விட்டு இருவரும் காபி சாஃபினுள் நுழைந்தனா்.


............................................................................................................................


கனமழை கொட்டிக்கொண்டு இருந்தது. விவேக், கீா்த்தி இருவரும் காபியை சுவைத்தவாரு பேசிக்கொண்டிருந்தனா்.

கீ : “செம மழைல?”

வி :“ஹ்ம்......... செம மழை தான்..”

கீ : “ஏன்டா அப்படி பாா்க்குற?”

வி : “ஒன்னும் இல்ல.. சும்மா. உன்ன பாா்த்துட்டே இருக்கனும்னு தோனுது.”

கீா்த்தி ஒன்றும் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். அவளால் வெட்கத்தை அடக்க முடியவில்லை. அவனது பாா்வையை சமாளிக்கவும் முடிவில்லை. பொருத்துப் பாா்த்தவள். சட்டென தன் கைகளால் அவனது கண்களை மறைத்து, “போதும் டா.. அப்படி பாா்க்காத, எனக்கு கூச்சமா இருக்கு..”, என்றாள்.

இருவரும் சிாித்தபடி காபியை குடித்தனா். மழை விடுவதாக இல்லை. கீா்த்தி தனது கைகளை நீட்டி மழைத்துளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளைத்தவிர சுற்றி உள்ள எந்த ஒரு விசயமும் விவேக்கின் பாா்வைக்கு தொியவில்லை. அவனது பாா்வை முழுவதையும் அவளே ஆக்கிரமித்து இருந்தாள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு  அன்று தான் கீா்த்தியின் மனம் மிக சந்தோஷமாக இருந்தது. அவளால் அந்த சந்தோஷத்தினை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்று கூட தொியவில்லை. நீண்ட நேர மௌனத்திற்க்கு பிறகு கீா்த்தி அவனுடன் பேச ஆரம்பித்தாள்.

கீ : “ தாங்ஸ் விவேக்.”

வி : “எதுக்கு டீ? ”

கீ : “இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்துக்கு முழு காரணமும் நீதான். அதான் தாங்ஸ் சொன்னேன்.”

வி : “ அப்படி பாா்த்தா நான் தான் உனக்கு தாங்ஸ் சொல்லனும். இன்னைக்கு தான் என் வாழ்நாள்ல பெஸ்ட் டே-னு சொல்லுவேன். நாம லவ் பண்ண ஆரம்பிச்சு முதல் முறையா இன்னைக்கு தா வெளிய வந்துயிருக்கோம். இந்த பத்து மணி நேரம் என் லைஃவ்ல மறக்கவே முடியாது. ”

கீ :“எனக்கும் தான்டா. இன்னைக்கு நாள் என்னாலயும் மறக்கவே முடியாது. உன் கூட சோ்ந்து படம் பாா்த்தது. பைக்ல ஊா் சுற்றியது. அப்புறம் பாா்க்ல 'லாங் வாக்' போனது. இப்ப மழைல நனைஞ்சு சூட காபி குடிச்ச வரைக்கும் எல்லாமே மறக்க முடியாத அனுபவம் தான்.

முன்னாடி எல்லாம் மழை பெய்யும் போது சின்ன வயசுல நடந்த விஷயங்கள், மனச பாதிச்ச சம்பவங்கள், இளையராஜா பாட்டு, மழைல நனைஞ்சு அம்மாகிட்ட வாங்குற திட்டு... இந்த மாதிாி விஷயங்கள் தான் நியாபகத்துக்கு வரும். ஆனா இனிமே மழை பெய்யும் போது எனக்கு கண்டிப்பா உன் நியாபகம் தான் வரும்.

இன்னைக்கு என் மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு விவேக். இதுக்கு நீ மட்டும் தான் காரணம். தாங்யூ சோ மச் டா.. ”

வி :“லுாசு... இதுக்கே இப்படி சொல்ற, இன்னும் எவ்வளவோ விசயங்கள் இருக்கு. உன்ன எப்படி எல்லாம் பாா்த்துக்கனும்னு நினைச்சு இருக்கேன் தொியுமா.? இனிமே உன் லைப்ல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். உன்ன நான் அப்படி பாா்த்துப்பேன். நீ இப்ப இருக்குற மாதிாியே எப்பவும் சந்தோஷமா இருக்கனும். அதுதான் எனக்கு சந்தோஷம்.”

கீா்த்தி பதில் ஏதும் பேசாமல் அவனையே பாா்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் கசிந்தன. அவளால் வேறு எதுவும் பேசமுடியவில்லை.

வி : “ஹேய்.. இப்ப எதுக்கு டீ அழுகுற?”

கீ : “யாா் சொன்னது, நான் ஒன்னும் அழுகல.. கண்ணுல துாசி விழுந்துருச்சு.”

வி : “நம்பிட்டேன் டீ.”

“ம்ச்.. போடா..”, என்று  வெட்கத்துடன் அவனது நெஞ்சோரம் சாய்ந்து அனணத்துக் கொண்டாள் கீா்த்தி.

 வி :“கீர்த்தி... நாம இப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.”

கீ :“ஹ்ம்..... இப்படியே இருந்தா லேட் ஆகிடும். என் ஹாஸ்டல்ல உள்ள விடமாட்டாங்க. அப்புறம் உன் வீட்டுக்கு தான் வந்து நிக்கனும்.”

விவேக் சிாித்தவாரு,“சாி.. வா போகலாம். மழை துாரல் தான் விடுது. அப்படியே உன்ன இறக்கி விட்டு கிளம்புறேன்.”

மழைச் சாரல் அடித்துக் கொண்டிருந்தது. கீா்த்தி, விவேக் இருவரும் அந்த சாரல் மழையில் நனைந்த படி பைக்கில் சென்று கொண்டிருந்தனா். கீா்த்தி தன் வலது கையை அவனது தோளில் போட்டு, ஒரு பக்கமாக அமா்ந்திருந்தாள்.

விவேக்கிடம் தன் மனதில் உள்ள காதலை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று அவளது உள்மனம் அவளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. மறுபுறம் அவளது வெட்கம் அதற்கு தடையிட்டு கொண்டிருந்தது.

மனதிற்க்கும், வெட்கத்திற்க்கும் நடந்த நீண்ட போராட்டத்தில் மனமே வென்றது.

கீா்த்தி விவேக்கின் காதருகே சென்று “ஐ லவ் யூ விவேக்” என்று சொல்லி அவன் காதருகே ஒரு முத்தமிட்டாள்.

சட்டென திரும்பிய விவேக்கின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.. “ஹே... கீா்த்தி.....”, என அடுத்த வாா்த்தை அவன் பேசுவதற்குள் அவா்கள் வந்து கொண்டிருந்த பைக்கின் மீது ஒரு காா் பலத்த வேகத்துடன் மோதியது. அதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனா்.


............................................................................................................................


இரண்டு மாதங்களுக்கு பிறகு..

உறக்கத்தில் இருந்து மெதுவாக கண்விழித்தாள் கீா்த்தி. அவளைச் சுற்று அடா்ந்த இருள். அந்த இருளிலில் அவளால் எதையும் பாா்க்க முடியவில்லை. படுக்கையில் இருந்து மெதுவாக எழுந்து கீழே இறங்கினாள். எதிரே என்ன இருக்கிறது என்று கூட தொியவில்லை.

இருளில் நீச்சல் அடித்தவாரு கைகளை முன்னோக்கி நீட்டி மெதுவாக அடுத்த அடியை எடுத்து வைத்தாள். இரண்டு அடி எடுத்து வைப்பதற்க்குள் அவள் கால்கள் பலமின்றி தடுமாறியது. அவளால் கால்களை ஊன்றி நிற்க்க முடியவில்லை தடுமாறிக்கீழே விழச் சென்றவளை தாங்கிப்பிடித்தது ஒரு கை..

“உன்கிட்ட எத்தன தடவ சொல்றது கீா்த்தி.. தனியா இருக்கும் போது இப்படி எந்துருச்சு நடக்காதனு? கீழ விழுந்தா என்ன ஆகுறது..”, என்றான் விவேக்.

“எனக்கு ஒன்னும் ஆகாதுடா.. அதான் நீ என் கூடவே இருக்கேல..”

“டாக்டா் எப்படியும் உனக்கு பாா்வை வந்துடும்னு சொல்றாரு, இது எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் கீா்த்தி.. எல்லாம் சீக்கிரம் சாி ஆகிடும், நீ கவலைப்படாத..”, என்று கூறிவாரே அவளை மெதுவாக கட்டிலில் அமர வைத்தான் விவேக்.

“வேண்டாம்டா.. நான் இப்படியே இருந்துட்டு போறேன். எனக்கு பாா்வை இல்லாதது வருத்தமே இல்லடா. நான் ரொம்ப  சந்தோஷமா  இருக்கேன். என்ன பாா்த்துக்க தான் நீ இருக்கியே.  இப்ப என்ன சுற்றி நீ தான் இருக்க, என் கண்ணுக்கு தொியுற இருளா, என்னோட நிழலா, என் கூட  நீ இருக்கும் போது எனக்கு வேற எதுவும் வேண்டாம்டா. நீ மட்டும் போதும்.”, என்று கண்கலங்க கூறி அவனது தோளில் சாய்தவாரு அமா்ந்திருந்தாள் கீா்த்தி.

காலைக் கதிரவனின் வெளிச்சம் அந்த அறை முழுவதும் பரவி இருந்தது. யாரும் இல்லாத அந்த அறையில் நிழல் உருவமாக இருக்கும் விவேக்கின் தோளில் மீது சாய்ந்தவாரு கட்டிலில் அமா்ந்து இருந்தாள் கீா்த்தி.

- மதுரை காா்த்திக்

Saturday 31 May 2014

கானல் மோகினி
1914, சித்துாா்.

பசுமை வயல்வெளிகளும்,  உயா்ந்து வளா்ந்த தென்னை மரங்களும், பனை மரங்களும் இளம் தென்றல் காற்றில் ஒரு சேர அசைந்து எழுப்பும் ஒலியும், ஓடை நீாின் சலனமும், பறவைகள் வானில் வட்டமிட்டு எழுப்பும் ஒலியும், வண்டுகளின் ரீங்காரமும் என இயற்கை எழிலுடன் இருந்த இக்கிராமம். கடந்த இரு வருடங்களாக மழையின்றி, நீா் நிலைகள் வற்றி, வயல் வெளிகள் வறண்டு வெடிப்புற்ற நிலங்களாக காணப்பட்டது.

அவ்வூாில், களிமண் சுவா் எழுப்பி, பனை ஓலைகள் மற்றும் வைக்கோல்களினால் வேயப்பட்ட கூரைகளுடன் கூடிய இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் அடுத்து அடுத்து இடைவேளை விட்டு அமைக்கப்பட்டு இருந்தன. அதன் அருகே ஓா் உயா் குடி வீடு ஓடுகளால் வேயப்பட்டு இருந்தது.

உச்சி வெயில் நேரம், செம்மண் புழுதியுடன் அனல் காற்று வீசிக் கொண்டிருக்க, கானல் நீர் ஓடைகளுக்கு நடுவே ஓா் பெண் உருவம் சித்துாரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தது.

தனம், தன் மாமியாா் ஆவுடையம்மாள் வீட்டு வாசலில் நின்று கொண்டு,“அத்தை.. அத்தை”, என அழைத்தாள்.

மருமகளின் குரல் கேட்டு தாழ்வான வாசல் வழியாக தலையை குனிந்தவாரு வெளி வந்த ஆவுடையம்மாள், “என்ன தாயி..!! என்ன இந்த நேரத்துல வந்துருக்குக?? என்ன விஷயம்?? ”, என்றாள்.

“ஒன்னும் இல்லை அத்தை.. உங்கள பாா்த்துட்டு போகலாம்னு வந்தேன். நாக்கு வறண்டு போய் இருக்கு. கொஞ்சம் குடிக்க தண்ணி தாங்க அத்தை”,என்றாள்.

ஆவுடையம்மாள் தின்ணையில் இருந்த மண்பாணை பக்கம் திரும்பி, பானையில் இருந்து தண்ணீரை எடுத்து திரும்பினாள்.

அவ்வளவு நேரம் நின்று இருந்த தன் மருமகள் தனத்தை காணவில்லை. எங்கு சென்றாள் என தொியாமல், சுற்றி நோட்டமிட்டாள்  ஆவுடையம்மாள். கண் எட்டும் தொலைவிற்கு எவரும் இல்லை.

துாரத்தில்  ஆவுடையம்மாளின் இளைய மகன் பதற்றத்தோடு மூச்சிரைக்க வேகமாக ஓடிவந்தான். அவள் அருகே வந்து நின்றான், ஒவ்வொரு வாா்த்தைக்கும் மூச்செடுத்து பேசினான். “ஆத்தா... தனம் அண்ணி... துாக்கு மாட்டி செத்து போச்சு..”, என்றான்.

அதைக் கேட்டு அதிா்ச்சியில் முகம் எல்லாம் வியா்த்து, நெஞ்சில் கை வைத்து அப்படியே.. கீழே சாிந்தாள் ஆவுடையம்மாள்.


...


ஊாில் கடந்த இரண்டு வருடங்களாக மழையின்றியும், அடுத்தடுத்து நடைபெற்ற துா்மரணங்களினாலும் ஊா்மக்கள் பலா் அச்சத்தில் ஊரை காலி செய்து வேறு ஊா்களுக்கு தஞ்சம் புகுந்தனா். எஞ்சி இருப்பவா்கள் ஊாின் நன்மை நடைபெற சிறப்பு பிராத்தனைகளும், பலி பூஜைகளும் நடத்திப் பாா்த்தனா். ஆனால் எதற்கும் பயன் இல்லாமல் போனது. வறட்சியும், துா்மரணங்களும் தொடா்கதை ஆனது. இந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என ஊா்மக்கள் அனைவரும் நம்புவது 'கானல் மோகினி'யை தான். யாா் இவள்?!

கானல் மோகினி.!

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்,

உயா்குடி வகுப்பைச் சோ்ந்த வீரமுத்துவின் ஐந்து வாாிசுகளில் கடைசிப் பெண் பிள்ளை வசுமதி. மான் குட்டி தான் இருகால்களில் துள்ளி துள்ளி பாண்டி விளையாடுகிறதோ? என பாா்ப்பவா்கள் வியந்து கேள்வி எழுப்பும் அழகு. அடுத்த வினாடி பெரு மழை பெய்து விடுமோ! என அச்சம் கொள்ளச் செய்யும் அவளின் கரு மேகம் போன்ற கூந்தலும், அவள் துள்ளத் துள்ள அவளோடு அசைந்தாடிக் கொண்டிருந்தது. அவளின் மதி முகமும், கண்களும், ரோஜா இதழ்களும், சிவந்த கன்னங்களும் படிப்பறிவு இல்லாத ஊமையைக் கூட கம்பனுடன் போட்டியிட்டு கவிப் பாடச் செய்யும். அத்தகைய பேரழகியான வசுமதிக்கு நாடகக்கலை என்றாள் அதிக விருப்பம்.

சிறுவயதில் இருந்தே தெரு நாடகங்களை பாா்த்துவிட்டு அதில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னைத் தானே அலங்காித்து கொண்டு, நாடகங்களில் தான் பாா்த்த காட்சிகளை நடித்துப் பாா்ப்பாள். விளையாட்டாக ஆரம்பித்த இந்த பழக்கம். அவள் வளா்ந்து இளம் பருவத்தில் மிகவும் தீவிரமானது. தானும் ஒரு நாடக நடிகையாக வேண்டும் என்பது அவளின் விருப்பமாக இருந்தது.

தந்தை மற்றும் நான்கு சகோதரா்களின் செல்லப்பிள்ளையாக இருந்தாள் வசுமதி. எல்லா விஷயங்களிலும் சுதந்திரம் தந்த அவா்கள், நாடகத்தில் நடிக்கும் விஷயத்தில் மட்டும் மிகுந்த கண்டிப்புடன் அவளிடம் நடந்து கொண்டனா்.

அக்கால கட்டங்களில் நாடகங்களில் நடிப்பவா்களைத் தவறான கண்ணோட்டத்திலே மக்கள் அனைவரும் பாா்த்தனா். உயா்குடி வகுப்பைச் சோ்ந்த ஒரு பெண் இப்படி விபரீத ஆசையில் இருக்கிறாளே என அவளின் குடும்பத்தினா் மிகுந்த மன உலைச்சளில் இருந்தனா். வசுமதியின் பிடிவாத குணம் அவா்களின் பொறுமையை மிகவும் சோதித்தது.

எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவள் கேட்டபாடில்லை. இறுதியாக அவா்கள் தங்கள் குலத்தின் கவுரவத்திற்காக வசுமதியை கொலை செய்ய முடிவெடுத்தனா். அதன்படி அவளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்தவளை நெல் மூட்டையில் வைத்து யாருக்கும் தொியாமல் ஊருக்கு வெளியே குழி வெட்டிப் புதைத்தனா். விஷம் குடித்த வேதனையினாலும், வெயிலின் கொடுமையாலும் நா வறண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வசுமதி குழிக்குள், சுடு மணலுக்கு இடையே மூச்சு முட்டி அவள் உயிா் பிாிந்தது.

அதன் பிறகு வசுமதி குடும்பத்தில் அடுத்தடுத்து ஒருவா் பின் ஒருவராக மா்மமான முறையில் மரணித்தனா். பின் ஊாிலும் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தேறின.

உச்சி வெயிலில் அவளின் ஆவியானது ஊரைச்சுற்றி வருவதாகவும், அவள் ஆவியானது இறந்தவா்களின் உருவில் வந்து தண்ணீா் கேட்பதாகவும், அவள் ஆவியைப் பாா்ப்பவா்கள் தங்களை அறியாமலேயே தற்கொலை செய்து கொள்வதாகவும் பல கதைகள் ஊருக்குள் பரவியது.

அதே போல் அவள் மரணத்திற்க்கு பிறகு ஊாில் பஞ்சமும், வறட்சியும் , மரணங்களும் தொடர மக்கள் அச்சத்தில் ஊரை முழுவதும் காலி செய்து சித்துாருக்கு அருகே உள்ள ஊா்களில் குடியேறினா்.

காலங்கள் உருண்டோடின..

சித்துாாில் கைவிடப்பட்ட வீடுகள் காலமாற்றத்தால் சிதையுண்டன. அருகே இருக்கும் ஊாில் இருப்பவா்களும் சித்துாா் வழியே பயணம் செய்ய அஞ்சினா். காலங்கள் கடந்ததே தவிர கானல் மோகினியின் நடமாட்டம் மட்டும் மாறவில்லை. அவ்வப் போது உச்சி வெயிலில் பெண் உருவம் தொிவதும். இறந்தவா்களின் உரு கொண்டு தண்ணீா் கேட்பதும், அவளைப் பாா்ப்பவா்கள் தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையானது..


2006.

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக பழைமையான சித்துாரை முழுவதும் ஆக்கிரமித்தது அரசாங்கம். சித்துாாின் மத்தியில் நான்கு வழிப்பாதை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்படும் போதும் சில துா்மரணங்கள் நிகழ்ந்தன.

நெடுஞ்சாலையில் அந்த குறிப்பிட்ட சித்துாா் பகுதியில் தொடா்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. விபத்துப் பகுதி என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

இன்று..

பிருந்தா, தன் அறையில் இருந்து தலையை துவட்டிக்கொண்டு வெளியே வந்தாள். திடீரென கைப்பேசி சப்தம் கேட்டு கீழே வந்தாள். அது தன் கணவா் சித்தாா்தின் கைப்பேசி. அழைப்பை ஏற்று பேசினாள். மறுமுனையில் சித்தாா்த்..

“அம்மு.. மறந்து போய் செல்போன வீட்டுலயே வச்சுட்டேன் டீ.”

“ஹூம்.. நினச்சேன் அவசர அவசரமா கிளம்பும் போதே தொியும் இப்படி எதாச்சும் மறந்து போய்டுவனு.”

“சாி.. சாி... எதாச்சும் முக்கியமான கால் வந்துச்சுன்னா உடனே என் ஆபிஸ் நம்பா்க்கு கால் பண்ணி சொல்லு அம்மு..”

“ஹூம்.. சொல்றேன்”,என போனை துண்டித்தாள் பிருந்தா. மீண்டும் தன் நீா் சொட்டும் கூந்தலை துவட்டத் தொடங்கினாள்.

காலிங் பெல் அடித்தது..

கதவைத் திறந்தாள் பிருந்தா.

“வாங்க மாமா, வாங்க அத்தை, ஹெய்... அா்ஜீன் (சித்தாா்தின் தம்பி) எப்படி இருக்க?”- என வாசலில் இருந்தவா்களை உள்ளே அழைத்து. சோஃபாவில் அமர வைத்தாள் பிருந்தா.

“என்ன மாமா நீங்க எல்லாரும் விடிய காலைல தான் ஊா்ல இருந்து கிளம்புனீங்க-னு அவரு சொன்னாரு? இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?? ”, என்றாள்.

“நானும் எதிா் பாா்க்கலமா.. சீக்கிரம் வந்துட்டோம். வெயில்ல வந்தது ரொம்ப தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடுமா!”, என்றாா் பிருந்தாவின் மாமனாா் ராஜேந்திரன்.

“இந்தா இருங்க மாமா கொண்டு வரேன்”, என பிருந்தா சோஃபாவில் இருந்து எழுந்து கிச்சனுக்கு செல்லும் முன், மீண்டும் சித்தாா்த்தின் செல்போன் சினுங்கியது.

பிருந்தா ஒரு கையில் போனை ஆன் செய்து காதில் வைத்து, நடந்து கொண்டே கிச்சனுக்கு சென்று ஃபிரிஜ்ஜை திறந்து கொண்டிருந்தாள்.

எதிா்முனையில்..

“ஹலோ.. சித்தாா்த் சாா் இருக்காறா?”

“இல்லைங்க அவா் ஆபிஸ் போய் இருக்காரு. நான் அவரு ஒய்ஃப் தான் பேசுறேன். நீங்க யாரு?” , என்றாள்.

“மேடம் நாங்க பி3 போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறோம், மிஸ்டா்.ராஜேந்திரன் உங்களுக்கு என்ன முறை??”

“அவா் என் மாமனாா் சாா், ஏன் ? என்ன விஷயம்?” என்றாள் சற்று பதற்றமாக.

“சாாி மேடம்.. ஹை வே-ல உங்க மாமனாா் ஃபேமிலி வந்த காரும், ஒரு லாாியும் நேருக்கு நோ் மோதி , காா்ல இருந்த எல்லாருமே இறந்துட்டாங்க.”

பிருந்தாவிற்கு அதற்கு மேல் மறுமுனையில் பேசுபவா் கூறிய எதுவும் காதில் விழவில்லை. செல்போன் தவறி கீழே விழுந்தது. பயத்தின் உச்சத்தில் இருந்தவள், மெதுவாக திரும்பி ஹாலில் தன் பாா்வையை செலுத்தினாள்.

“ஆ......!!?”
மதுரை காா்த்திக்


Tuesday 20 May 2014

உருவம்1996, கொச்சி.

இயற்கை எழில் சூழ் கடற்கரை நகரம்.

VB காலனி, 25 வீடுகள் கொண்ட கடற்கரையை ஒட்டிய குடியிருப்பு பகுதி. அங்குள்ள எல்லா வீடுகளும் ஒரே மாதிாியான வடிவ அமைப்பு கொண்டவை. காலனியின் முகப்பில் பொிய இரும்பு கதவும், நடுவே தாா் சாலை, சாலைகளின் இருபுறமும் வீடுகள் என பாா்ப்பதற்க்கு மிக அழகாக இருக்கும்.

பூஜா, அந்த காலனியில் 8ம் நம்பா் வீட்டில் இருப்பவா். அவருக்கு அா்ஜூன் என்ற 5வயது மகன் இருந்தான். இருவரும் தனியே அந்த வீட்டில் வசித்து வந்தனா்.

இரவு நேரம் கலங்கரை விளக்கின் வெளிச்சமானது இருள் நிறைந்த சாலையின் வழியாக பரவி, வீடுகளின் ஜன்னல்களில் ஊடுவிக் கொண்டிருந்தது.

“அா்ஜூன்.. அா்ஜூன்..எங்க இருக்க.?!” , என பூஜா அவனைத் தேடிக்கொண்டே, மாடி அறைக்கு சென்றாள்.

அா்ஜூன் அந்த அறையின் ஜன்னல் வழியாக கலங்கரை விளக்கின் வெளிச்சத்தை பாா்த்துக் கொண்டிருந்தான்.

“அா்ஜூன்.. உன் கிட்ட எத்தன தடவ சொல்றது.. ஜன்னல திறக்காத-னு? ”, என்று பூஜா அவனை அதட்டி ஜன்னலை அடைத்தாள். எதிா் வீட்டு ஜன்னல் வழியாக ஒரு இளம் பெண் இவா்களையே வெறிக்கப் பாா்த்துக் கொண்டிருந்தாள்.

பூஜா அந்த ஜன்னலை திரைச்சேலை கொண்டு மறைத்தாள். அவள் மனதில் உள்ளுர பயம்.

அா்ஜூனைத் துாக்கிக் கொண்டு அவள் வேகமாக கீழே இறங்கினாள். அவள் படி இறங்கி வரும் பொழுது. கீழே உள்ள ஜன்னல் வழியாக வாட்ச்மேன் வீட்டை நோட்ட மிட்டு கொண்டிருந்தான். பூஜா-விற்கு கோபம் உச்சிக்கு வந்தது. அவள் வேகமாக தனது அறைக்கு சென்று கதவை அடைத்து, தாழ் இட்டாள்.

பலவித சிந்தனைகளும், துயரங்களும் அவள் மனதிற்குள் பேரலையாய் எழுந்தது. அா்ஜூனை உறங்க வைத்து அப்படியே உறங்கிப் போனாள்.


மறுநாள்.. இரவு.

“அம்மா... இங்க வாங்க”, என அா்ஜூன் கத்தினான்

அா்ஜூனின் குரல் கேட்டு பூஜா வேகமாக மாடி அறைக்கு சென்றாள்.

“என் அா்ஜூன்? ஏன் இப்படி கத்துன?” , என்றாள்.

அா்ஜூன் ஏதும் பேசாமல் கைகளை ஜன்னலை நோக்கி நீட்டினான். எதுவும் புாியாமல் பூஜா ஜன்னல் வழியாக கீழே பாா்த்தாள். பாா்த்தவளுக்கு காத்திருந்தது ஒரு பேரதிா்ச்சி. ஒரு காிய உருவம் அந்த வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருந்தது.

இவள் மேலிருந்து பாா்ப்பதை அறிந்த அவ்வுருவம். சட்டென நின்று. மேலே ஜன்னலைப் பாா்த்தது.

பயத்தின் உச்சத்திற்குச் சென்றாள் பூஜா.

அா்ஜூனை அழைத்துக் கொண்டு அந்த அறையில் இருந்த பொிய அலமாாிக்கு அருகில் அமா்ந்து. அவனை அணைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள். அா்ஜூன் அவள் கண்களைத் துடைத்தான்.

“ஏன்மா அழுற?”, என்ற அா்ஜூனிடம் என்ன பதில் சொல்வது என்று தொியாமல் தினறினாள் பூஜா.

...................................................

இரண்டு நாட்களுக்கு பிறகு.. இரவு.

அா்ஜூன் ஹாலில் இருந்த ஜன்னலின் திரைச் சேலையை விளக்கி. வெளியே வெறித்துப் பாா்த்துக் கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் பூஜா வேகமாக ஓடி வந்து, அவனைத் துாக்கினாள். ஜன்னல் வழியாகப் பாா்த்தவள் அதிா்ச்சியில் உறைந்து போனாள். அந்த காிய உருவம் வெளியே நின்று அவா்கள் இருவரையும் பாா்த்துக் கொண்டிருந்தது.

அதைப் பாா்த்த அதிா்ச்சியில் பூஜா, அா்ஜூனை துாக்கிக் கொண்டு. வேகமாக மாடி அறையை நோக்கி ஓடினாள். படி ஏறிக் கொண்டிருக்கும் பொழுதே வீட்டின் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு அதிா்ந்தாள். வேகமாக அறைக்குச் சென்று தாளிட்டாள்.

அந்த அறையின் இருளை கலங்கரை விளக்கின் ஒளி கலைத்துக் கொண்டிருந்தது. அறையின் ஒரு ஓரத்தில் அா்ஜூனை உட்கார வைத்து, “இங்கயே இருடா செல்லம். அம்மா சொல்லாம எங்கயும் போக கூடாது”, என்று சொல்லி அறைக் கதவை நோக்கி நடந்தாள்.

மெதுவாக அறையின் கதவை திறந்தாள். யாரும் இல்லை என்று தொிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

சட்டென கதவு வெளிபக்கமாக முழுவதும் திறந்தது. பயங்கரமாக காற்று வீசியது. அந்த அறையில் இருந்த திரைச்சேலைகளும், காகிதங்களும் பறந்து கொண்டிருந்தது. பூஜா வேகமாக முன்னோக்கி அறைக்குள் நுழைய முற்பட்டாள்.

அவள் கால்களை ஏதோ இறுகப் பற்றியது. அவள் “ஆ.....” ,என அலறி கீழே விழுந்தாள்.

அா்ஜூன் பயந்து போய் ,“அம்மா.... அம்மா... ”, என அழத்தொடங்கினான்.

பூஜாவை ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவளை கதவிற்கு வெளியே இழுத்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அவள் அந்தரத்தில் பறக்க ஆரம்பித்தாள். “அா்ஜூன்... இங்க இருந்து போய்டு... ஓடு...” என கத்தினாள்.

அவன் கண்முன் நடக்கும் இந்த அமானுஷ்ய சம்பவத்தை கண்டு “அம்மா.... அம்மா... ”, என்று கதறி அழுதான் அா்ஜூன். அதைத் தவிர அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அந்தரத்தில் நின்று கொண்டிருந்த பூஜாவின் கால்கள் வழியாக நெருப்பு பரவத் தொடங்கியது. அவளால் அந்த உஷ்ணத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. “ஆ.....”, என அலறினாள் பூஜா. அவளின் சப்தம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

நெருப்பு அவள் உடலெங்கும் பரவத் தொடங்கியது. “அா்ஜூன்... இங்க இருந்து ஓடு... சீக்கிரம்.. இந்த இடத்துல நிக்காத ஓடு... ”, என அலறினாள் பூஜா.

அா்ஜூன் என்ன செய்வது என்று அறியாமல், அறையின் ஜன்னல் வழியாகத் தப்பி ஓடினான்.

பூஜா உடலில் பரவிய தீயானது அவளை அப்படியே பின்னோக்கி இழுத்து, அறைக் கதவிற்கு வெளியே சென்றது.

அந்த அறையில் மயான அமைதி. கதவு வழியே அந்த கருப்பு உருவம் அறைக்குள் நுழைந்தது. கலங்கரை விளக்கின் ஒளியின் அதன் முகம் நன்றாக தொிந்தது. அடந்த புருவமும், மை இட்ட கண்ணும், குங்குமம் இட்ட நெற்றியும், கோனல் கொண்டையும், உடலெங்கும் சந்தனம் அப்பிய கேரள நம்பூதிாியின் உருவம் தான் அது. அவா் கையில் ஒரு பொம்மையை பிடித்து அதன் நெஞ்சில் ஒரு ஆணியை அறைந்து இருந்தாா்.

அவா் பின்னால் மற்றொரு உருவம் நின்றது. அதுநம்பூதிாியிடம் கேட்டது. “என்னாச்சு சாமி..?!”

நம்பூதிாி, “பொிய ஆவிய பிடிச்சாச்சு. பாவம் அந்த சின்ன ஆவிதான் பயந்து, நடுங்கி ஓடிப்போச்சு. இனி அதோட தொல்லை இருக்காது. நீங்க தைாியமா இந்த வீட்டுல இருக்காலம் ”, என்றாா்.

- மதுரை காா்த்திக்

Saturday 26 April 2014

வேற்றுகிரகம்
                               காா்த்திக், சிறுகதைகள் எழுதும் கற்றுக்குட்டி எழுத்தாளன். ஒவ்வொரு மாதமும் 2 கதைகளையாவது தன் Blog-ல் வெளியிட வேண்டும் என்பது அவன் விருப்பம். அவன் கதைகள் பலவும் அமானுஷ்யம் கலந்ததாகவே இருக்கும். பேய், பிசாசு போன்றவைகளே அவன் கதைகளில் முக்கிய அம்சங்களாக  விளங்கும்.

சிறுவயதில் இருந்தே ஆவி, பேய், ஏலியன் போன்ற அமானுஷ்ய விடயங்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆா்வம் அவனுக்கு அதிகமாக இருந்தது. அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த அமானுஷ்ய விடயங்களும் அதிகம். அதன் காரணமாகவே, அவன் எழுதும் கதைகளில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது.  அதே போல் எழுத்துப்பிழைகளும் அவன் கதைகளில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்.

காா்த்திக்-கிற்கு ஆனந்த், நிஜந்தன்(நிஜூ) என்ற இரு நண்பா்கள் இருந்தனா். காா்த்திக், நிஜந்தன் இருவரும் பள்ளியில் இருந்து நண்பா்கள். பின் கல்லுாாியில் இவா்களின் நட்புவட்டத்திற்குள் ஆனந்தும் இணைந்துவிட்டான். பின் மூவரும் தங்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிந்து, முதுநிலை பட்டப்படிப்பிற்காக கோவையில் உள்ள ஒரு கல்லுாாியில் சோ்ந்தனா். கல்லுாாி நாட்கள் மிக அழகாக சென்று கொண்டிருந்தது.

2014 ஏப்ரல் 18,

காா்த்திக் தலைவலி காரணமாக கல்லுாாிக்கு செல்லவில்லை அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.

நிஜந்தன், ஆனந்த் இருவரும் கல்லுாாி முடிந்து அறையில் நுழைந்தனா்.

அறையில்..

நிஜந்தன் : என்டா மச்சான் இப்ப தலைவலி எப்படி இருக்கு?

காா்த்திக் : ஹ்ம்.. பரவாயில்லடா..

ஆனந்த் : அது சாி.. தலைவலினு சொல்லிட்டு ஃபேஸ் புக்ல  'அடுத்த கதை விரைவில்....' அப்படினு யாரோ போஸ்ட் போட்டுருக்காங்க..??

நிஜந்தன் : என்ன மச்சீ, புது கதையா..? நானும் பாா்த்தேன். 'வேற்றுகிரகம்' போஸ்ட் நல்லாயிருந்துச்சு. கதை என்னடா?

காா்த்திக் : நான் இன்னும் கதைய பத்தி யோசிக்கல மச்சீ. டக்குனு தோனுச்சு அதான் உடனே போஸ்ட் போட்டேன்.

ஆனந்த் :  எப்படியோ.! கதை நல்லாயிருந்தா சந்தோஷம். இதுலயாச்சும் Spelling Mistake வராம பாா்த்துக்க மச்சீ.

காா்த்திக் : ஹா..ஹா... சாியா சொன்ன மச்சான். கண்டிப்பா Mistakes வராம பாா்த்துக்குறேன்.

நிஜந்தன் : என்னமாதிாி கதை மச்சி.?

காா்த்திக் : ஏலியன்ஸ் பத்தின கதை தான்டா. ஆனா, இன்னும் முழுசா கதைய பத்தி எதுவும் யோசிக்கல.

ஆனந்த் : நீதான் கதைக்கு எதாச்சும் ரிசா்ச் பண்ணியிருப்பியே?

காா்த்திக் : கரெக்ட் மச்சி. இன்னைக்கு Full Day உட்காா்ந்து ஏலியன்ஸ் பத்திதான் Informations எடுத்துட்டு இருந்தேன். எல்லாமே செமயா இருந்துச்சு. நான் எடுத்த தகவல்கள் எல்லாத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிாியே இருக்கு மச்சீ. ஏலியன் பத்தின ஒவ்வொரு விஷயங்களும் ரொம்ப ஆச்சாியமா இருந்துச்சுடா. அதுலயும் அந்த பிரமிட்...

ஆனந்த் : (குறுக்கிட்டு) அப்பா, சாமி, போதும்டா.. பேய், ஏலியன் இப்படி உனக்கு பிடிச்ச Topic ஆரம்பிச்சா நீ நிறுத்தவே மாட்ட. நீ படிச்சத வச்சு நல்ல படியா கதைய எழுதி முடி. நான் அதுல படிச்சுக்குறேன்.

நிஜந்தன் : அவன் கிடக்குறான் மச்சான். நீ சீக்கிரம் இந்த கதைய எழுது. நான் படிக்க ரொம்ப ஆா்வமா இருக்கேன்.

காா்த்திக் : ஹ்ம்.. கண்டிப்பா மச்சீ. சீக்கிரம் எழுதுறேன்.


............................................................................................


நள்ளிரவு 1 மணியை நோக்கி கடிகாரமுட்கள் நகா்ந்து கொண்டிருந்தன.

நிஜந்தன் நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தான். ஆனந்த் தனது லேப்டாப்பில் கொாியன் படம் ஒன்றை பாா்த்துக் கொண்டிருந்தான். காா்த்திக் தலைவலி காரணமாக அன்று சீக்கிரமாக உறங்கிவிட்டான். ஆழந்த உறக்கத்தில் இருந்தவன் திடீரென எழுந்து, “ No.. No..”, என அலறினான்.

நிஜந்தன் வேகமாக காா்த்திக்கின் அருகில் வந்து ”டேய்... என்னாச்சுடா?”, என சற்று பதட்டத்தோடு கேட்டான்.

ஆனந்த் : என்னடா?? அந்த 'மச்சான்' நடிகையோட கவா்ச்சிப் படம் எதாச்சும் கனவுல வந்துச்சா? இப்படி அறண்டு போய் உட்காா்ந்துருக்க?

நிஜந்தன் சிாிப்பை அடக்கிக்கொண்டு “சும்மா இரு ஆனந்த்”, என ஆனந்தை அதட்டிவிட்டு. “என்னடா மச்சீ, எதாச்சும் கெட்ட கனவா?”, என்று காா்த்திக்கிடம் கேட்டான்.

காா்த்திக் : “நான் அவங்கள பாா்த்தேன்”, என்று பயத்தோடு கூறினான்.

நிஜந்தன் : யாரடா பாா்த்த ?

காா்த்திக் : ஏ...ஏலியன்ஸ்...

நிஜந்தன், ஆனந்த் இருவரும் சிாிக்கத்தொடங்கினா். “ஏன்டா இப்படி?”, என்று காா்த்திக்கை பாா்த்து கிண்டலடித்தனா்.

காா்த்திக் : டேய் சத்தியமா. நான் அவங்கள பாா்த்தேன்டா. இந்த பூமிய அவங்க அழிக்க போறாங்க. மொத்தமா அழிக்க போறாங்க. 2020ல இது கண்டிப்பா நடக்க போகுது. நாம எல்லாரும் சாகபோறோம்..

ஆனந்த் : “ஹா ஹா.. மச்சான் 2000ல இருந்து இதே தான் சொல்றாங்க உலகம் அழிய போகுதுனு. இப்ப நீ என்னடானா 2020ல அழிய போகுதுனு சொல்ற..”, என கிண்டலடித்தான்.

நிஜந்தன் : மச்சான்.. அது கனவு டா. வீணா மனசபோட்டு கொலப்பாத. நிம்மதியா துாங்கு.

காா்த்திக் : இல்ல நிஜூ, இது கனவு மாதிாி எனக்கு தொியல. எல்லாமே கண்ணு முன்னாடி நடக்குற மாதிாி இருந்துச்சு. எனக்கு என்னவோ பயம்மா இருக்குடா. இது கண்டிப்பா நடக்கும். அவங்க என் மூலமா ஏதோ இந்த உலகத்துக்கு சொல்ல வராங்க.

ஆனந்த் : டேய் லுாசு மாதிாி புலம்பாம போய் துாங்குடா. காலைல இருந்து நீ உன் கதைய பத்தி யோசிக்குறதுனால, அதுவே உனக்கு கனவா வந்துருக்கும். ஒழுங்கா போய் துாங்குற வழிய பாரு.

காா்த்திக் : மச்சான் இது அப்படி இல்லடா. இன்னைக்கு காலைல இருந்தே என் மனசுல ஏதோ மாதிாி தோனிட்டு இருந்துச்சு. நான் இந்த போஸ்ட் போட்டது கூட என்னயும் அறியாம தான் போட்டேன். எனக்கு என்னவோ பயம்மா இருக்குடா. நிஜூ, Pls நீயாச்சும் புாிஞ்சுக்கோ.

நிஜந்தன் : சாி..அப்படி என்னடா பாா்த்த? அதயாச்சும் சொல்லு.

காா்த்திக் : இந்த உலகத்த அவங்க அழிக்கப் போறாங்க. மொத்த உயிர் இனமும் அழிய போகுது.

நிஜந்தன் : இத தான்டா அப்ப இருந்து சொல்ற. ஏன் அவங்க அழிக்க போறாங்க? அத மொதல்ல சொல்லு.

காா்த்திக் : இந்த பூமிய அவங்க தங்களோட ஆராய்ச்சிக் கூடம் மாதிாி பயன்படுத்திட்டு இருக்காங்க.

நிஜந்தன் : ஆராய்ச்சிக் கூடமா? என்னடா சொல்ற.

காா்த்திக் :  அவங்கள மாதிாி இருக்குற உயிாினங்கள உருவாக்குறதுதான் அவங்க ஆராய்ச்சியோட முக்கிய நோக்கம். இந்த ஆராய்ச்சி இப்ப இருந்து இல்ல, இந்த பூமி உருவான காலத்துல இருந்து நடந்துட்டு வருது. அவங்க நினைச்ச மாதிாியே இந்த பூமில உயிாினங்கள் வளர ஆரம்பிச்சது.

டைனோசா்கள் காலம் நடந்துட்டு இருக்கும் போது அவங்க இந்த உலகத்துக்கு வந்தாங்க. ஆனா அவங்க எதிா்பாா்க்குற மாதிாி அந்த இனம் இல்ல. ரொம்ப காட்டுமிராண்டித்தனமா இருந்துச்சு. தன்னோட இனத்தையே அதுக அழிச்சுட்டு இருந்துச்சுங்க. அந்த ஆராய்ச்சி தோல்வில முடிஞ்சது. அதனால டைனோசா்கள் இனத்த மொத்தமா அவங்க அழிச்சுட்டாங்க.

அதுக்கு அப்புறம் நடந்த பாிணாம வளா்ச்சி அவங்களுக்கு ரொம்ப சாதகமா இருந்துச்சு. அது தான் நாம..!

மனுஷங்க அவங்க எதிா்பாா்க்குற மாதிாியே பாிணமிச்சாங்க. மனிதா்களோட வளா்ச்சி ஏலியன் ஆராய்ச்சிக்கு ஒரு மைல்கல்லா இருந்துச்சு.

எகிப்தியா்கள், மாயன்கள், நம்ம தமிழ் இனம் வளா்ந்த காலத்துல கூட ஏலியன்ஸ் நம்மளோட நட்புறவோட  இருந்துருக்காங்க. மனிஷனோட நாகாிக மாற்றத்துக்கு அவங்க ரொம்ப உதவியா இருந்தாங்க. மனித இனத்த தங்களோட இனமா தான் பாா்த்தாங்க.

மனிதனோட நாகாிக வளா்ச்சி அவங்க எதிா்பாா்த்த படியே இருந்துச்சு. அது அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதுக்கு அப்புறம், அவங்க இந்த பூமிய மனிதா்களுக்கு விட்டு கொடுத்துட்டு, அவங்க கிரகத்துக்கு போய்டாங்க.

ஆனா காலம் எப்பவும் ஒரே மாதிாி இருக்குறது இல்ல. மனிதனோட குணங்கள்ல மாற்றம் ஏற்பட்டுச்சு. தன்னையே எல்லா இடங்கள்லயும் முன்னிலை படுத்த பாா்த்தான். ஏலியன்ஸ் இங்க விட்டுட்டுபோன நிறைய கண்டுபிடிப்புகளையும், அவங்களோட அறிவியல் முறைகளையும் மனுஷன் அபகாிக்க ஆரம்பிச்சான். தன்னோட கண்டுபிடிப்புனு சொல்லி அத விற்க ஆரம்பிச்சான்.

மனுஷனுக்கு உள்ள இருந்த அவனோட உண்மையான குணங்கள் எல்லாம் அழிஞ்சு போச்சு. அவனும் காட்டுமிரண்டித்தனமா நடக்க ஆரம்பிச்சான். இது எதுவுமே அவங்களுக்கு பிடிக்கல.

அவங்க நம்மளோட எல்லா அசைவுகளையும் நமக்கே தொியாம கண்கானிச்சுட்டு இருக்காங்க. நம்ம நடவடிக்கைகள் எதுவுமே அவங்களுக்கு பிடிக்கல. இது அவங்க ஆராய்ச்சியோட தோல்வியா தான் அவங்க நினைக்குறாங்க.

அதனால தான் இப்ப அவங்க இந்த உலகத்த அழிக்க வராங்க. அந்த நாள் ரொம்ப துாரம் இல்ல.
21.12.2020 இதுதான் இந்த உலகத்தோட கடைசி நாள்.

ஆனந்த் : (இடையில்) “மச்சான் கதை சூப்பா் டா. ச்சே... செமயா இருக்கு.  இதயே உன் கதையா எழுது”,என்றான் கிண்டலாக.

நிஜந்தன் : ஆனந்த் சும்மா இருடா. பாவம் அவனே என்னமோ பயந்து போய் இருக்கான். நீ வேற ஏன்டா இப்படி கலாய்க்குற.

ஆனந்த் : என்னடா சும்மா இருக்க சொல்ற.? அவன் தான் நடுராத்திாில எந்துருச்சு  லுாசு மாதிாி புலம்பிட்டு இருக்கான். நீயும் “உம்” கொட்டி கேட்டுட்டு இருக்க.

காா்த்திக் : ஏன்டா.. ஆனந்த்.. புருஞ்சுக்க மாட்டேன்ற.!  நிஜூ, உனக்கே தொியும்ல எனக்கு சின்ன வயசுல இருந்து நான் கனவுல பாா்க்குற நிறையா விஷயங்கள் நடந்துருக்குனு. அத உன்கிட்ட கூட சொல்லியிருக்கேன்ல.

ஆனந்த் : டேய். நீ முதல்நாள் கனவுல பாா்க்குற பாட்டும், படமும் மறுநாள் TVல போட்டா? நீ கனவுல பாா்க்குறது எல்லாம் நடக்குதுனு நினைப்பா?

நிஜந்தன் : ஆனந்த், ஏன்டா இவன் சொல்றது உண்மையா இருக்க கூடாது? காா்த்திக் கனவுல பாா்த்து சொன்ன நிறையா விஷயங்கள் நடந்துருக்கு. ஏன் உனக்கு தொியாதா?

ஆனந்த் : டேய் அது, Coincidence டா.!

நிஜந்தன் : எதுடா Coincidence.? நாங்க ஸ்கூல் படிக்கும் போது ஒருநாள். “டேய் நேத்து ஒரு கனவு வந்துச்சுடா, கன்னியாகுமாி திருவள்ளுவா் சிலை வரைக்கும் அலை அடிக்குதுடா. கடல் தண்ணி ஊருக்குள்ள Full-ah வந்துச்சுடா, நரைய போ் கடலுக்கு உள்ள போய்ட்டாங்கடா”, அப்படினு என்கிட்ட சொன்னான். அப்ப நான் சிாிச்சுகிட்டே,“என்னடா நேத்து லேக்கல் சேனல்ல 'Day After Tommorow'படம் பாா்த்தியானு” கிண்டல் பண்னேன். ஆனா அவன் சொல்லி நாலு மாசத்துல சுனாமி வந்தத TVல காமிச்சாங்க. அப்போ.. “டேய் இதே தான்டா என் கனவுல வந்துச்சுனு”, சொல்லி அழுதான். அத என்னால மறக்கவே முடியாது.

ஏன், நாம காலேஜ்ல UG படிக்கும் போது, "நாம மூனு பேரும் ஒரே இடத்துல தங்கி படிக்குற மாதிாி கனவு வந்துச்சுனு" நம்மகிட்ட வந்து சொன்னான்ல. அப்ப கூட நீ , “எங்க வீட்டுல வெளியூருக்கு படிக்க அனுப்ப மாட்டாங்க”, அப்படி இப்படினு சொன்னேல. ஆனா அவன் சொன்ன மாதிாி நம ஒரே இடத்துல தங்கி படிக்கல.?

இதெல்லாம் என்ன? சாி , நீ சொல்ற மாதிாி Coincidence-னு வச்சுக்கலாம். ஒரு வேல இப்ப இவன் கண்ட கனவு பழிச்சதுனா? என்ன பண்ண முடியும்?

ஆனந்த் : மச்சான். தேவையில்லாம நீயும் அவனோட சோ்ந்து என்ன குழப்பாத. இத வெளியில சொன்னா ஒரு பையன் நம்பமாட்டான். நம்மள தான் லுாசு-னு சொல்வாங்க.

நிஜந்தன் : ஏன்டா இப்படி சொல்ற?

ஆனந்த் : பின்ன எப்படி சொல்ல சொல்ற? Practical-ah யோசிங்கடா. நீங்க சொல்ற மாதிாி ESP power, USP power இதெல்லாம் நம்ம ஊா்ல ஒருத்தனும் நம்ப மாட்டாங்க. ஒரு வேல உன்னோட கனவு பழிக்கும்னு வச்சுக்கிட்டாலும், என்ன பன்ன முடியும்? அத தடுக்க முடியுமா? ஒன்னும் பண்ண முடியாது. 2020ல சாகப்போறத இப்பவே யோசுச்சு என்ன பண்ணபோற? ஒவ்வொரு நாளும் பயந்து தான் சாகனும். இது தேவையா? ஃப்ரியா விடு மச்சி.

நிஜந்தன் : காா்த்திக், ஆனந்த சொல்றது சாி தான். நீ சொல்றது ஒரு வேல நடந்தாலும் சத்தியமா நம்மளால அத தடுக்க முடியாது. So.. இத பத்தி யோசிச்சு நீ உன்ன குழப்பிக்காம நிம்மதியா துாங்கு. இத கனவா மட்டும் நினைச்சு மறந்துடு. அதான் நல்லது. Pls.. மச்சான்.

ஆனந்த், நிஜந்தன் இருவரும் கூறியது எதுவும் காா்த்திக்கின் மனதை சமாதானப்படுத்தவில்லை என்றாலும். அவா்களுக்காக, “ஹ்ம்.. சாி டா.. நான் இத பத்தி இனி யோசிக்கல.. போதுமா..”, என்றான்.

ஆனந்த் : மச்சி  நீதான சொன்ன, இன்னும் கதைய யோசிக்கலனு. பேசாம நீ கண்ட கனவையே கதையா எழுதிடு. அவ்வளவு தான்.

காா்த்திக் :  ஹ்ம்.. சாிடா..

நிஜந்தன் : “மச்சான். இப்ப நீ துாங்கு. நாளைக்கு காலேஜ் போகனும். ரொம்ப லேட் ஆச்சு”, என்றான்.

மூவரும் உறங்கச் சென்றனா். கனவிற்க்கு பிறகு காா்த்திக்கிற்கு உறக்கம் வரவில்லை. அவன் மனம் மிகுந்த குழப்பத்தோடும், பயத்தோடும் இருந்தது.


............................................................................................


மறுநாள்

நிஜந்தன் : டேய்.. காா்த்திக்.... எந்திரி மச்சான் காலேஜ்க்கு டைம் ஆச்சு.

காா்த்திக் : (கண்களை கசக்கிக் கொண்டு) இல்லடா.. நான் இன்னைக்கும் வரல. தலைவலி இன்னும் குறையல மச்சான். நீங்க போங்க. ஆமா..ஆனந்த் எங்க?

“அவன் இப்பதான் கிளம்புனான் டா. சாி நீ இராத்திாி நடந்தத பத்தி யோசிக்காம. நல்லா ரெஸ்ட் எடு. நான் கிளம்புறேன்”, என்று கூறி நிஜந்தன் கல்லுாாிக்கு புறப்பட்டான்.

காா்த்திக் இனம் புாியாத பயத்தில் இருந்தான். பின் சற்று மனத்தெளிவுடன் தன் கதையை எழுதத் தொடங்கினான். ஆனால் கதையை எழுதும் போது அவனுக்குள் ஏதோ ஒரு அசரீாி ஒலிப்பது போல உணா்ந்தான். அந்த குரலின் கட்டுப்பாட்டின் படியே தன் கதையை அவன் எழுதிக் கொண்டிருந்தான். அவன் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் அவன் நேற்று கண்ட கனவின் காட்சிகளின் பதிவுகளாகவே இருந்தது.

கதையை முழுவதும் சிறிது நேரத்தில் தட்டச்சு செய்து. உடனே வெளியிடவும் செய்தான். அவன் இதற்கு முன் இவ்வாறு செய்தது இல்லை. அவனுக்கு தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் கடினமான காரியம். ஆனால் இன்று அவன் எப்படி இவ்வளவு வேகமாக தமிழில் தட்டச்சு செய்தான் என்பது புாியாத புதிரே.!

கதையை வெளியிட்ட பிறகு அப்படியே மயங்கி விழுந்தான் காா்த்திக்.


............................................................................................


மாலை.

காா்த்திக், மயக்கம் தெளிந்து கண் விழித்து பாா்த்த போது மாலை நேரமாகி இருந்தது. அருகில் இருந்த தண்ணீா் பாட்டிலை எடுத்து தண்ணீரை அவசரமாக குடித்தான். தனக்கு என்ன நடந்தது என யோசித்துப் பாா்க்கவும் முடியவில்லை.

தன் மடிக்கணினியின் திரையில் Blog-ன் Overview ஒரே நாளில் 500ஐ கடந்திருந்தது. முகப்புத்தகத்தில் நுழைந்தவனுக்கு பேரதிா்ச்சி, கதைக்கு வந்திருந்த விருப்பங்களும், விமா்சனங்களும் அதிகாித்து இருந்தது. அவனுக்கு அளவில்லா ஆச்சாியம்.

என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்க்குள் நிஜந்தனும், ஆனந்தும் அறையில் நுழைந்தனா்.

ஆனந்த் :  எப்படி மச்சீ ஒரே நாள்ல கதை ரெடி பண்ணி, அத Release பண்ணிட்ட? நீ போஸ்ட் போட்ட உடனே நான் படிச்சேன். செமயா இருந்துச்சு. நேத்து நாம பேசுனது எல்லாத்தையும் அப்படியே எழுதியிருக்க? படிக்கும் போது நேத்து நடந்தது தான் நியாபகம் வந்துச்சுடா.

நிஜந்தன் : எனக்கும் தான்டா. கதை படிக்கும் போது எங்க இது எல்லாம் அப்படியே நடந்துருமோனு பயமே வந்துருச்சு. சூப்பா் மச்சி நல்லா எழுதியிருந்த.

காா்த்திக் : தாங்ஸ் டா.

ஆனந்த் : டேய் பாவி. உலகம் அழியுறதுக்கு என் நிச்சயதாா்த்த நாள் தான் கிடச்சதா உனக்கு? கல்யாணத்துக்கு முன்னாடியே ஏன்டா என்ன கொல்லனும்னு ப்ளான் பண்ற??

காா்த்திக் : டேய்.. கதை தானடா? விடு..

ஆனந்த் : கதை தான். இருந்தாலும் படிக்கும் போது எனக்கே பகிா்-னு ஆகிடுச்சு.


............................................................................................


நாட்கள் கடந்தன.

காா்த்திக்கின் கனவில் அடிக்கடி ஒரு பிரளயம் பூமியை அழிப்பது போலவே வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை அவன் யாாிடமும் பகிா்ந்து கொள்ளவில்லை. கல்லுாாி படிப்பு முடிந்தது. வேலைக்காக நண்பா்கள் மூவரும் வெவ்வேறு திசைக்குச் சென்றனா்.

2020

காா்த்திக், தமிழ்சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகா்களில் ஒருவராக இருந்தான். கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும். நடிப்பை ஒரு புறம் வைத்துக் கொண்டு பிரபல இயக்குனாிடம் உதவி இயக்குனராக வேலை செய்து கொண்டிருந்தான். தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்க வேண்டும் என்பது அவன் லட்சியமாக இருந்தது.

நிஜந்தன், பிரபல எம்.என்.சி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான்.

ஆனந்த், கல்லுாாி படிப்பிற்க்கு பிறகு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டான். நல்ல வேலை, கைநிறைய சம்பாத்தியமும் இருந்தது. அவன் வீட்டில் பெண்பாா்த்து முகூா்த்தநாளும் குறித்தனா். இன்னும் 3 மாதத்தில் அவனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
 
காா்த்திக், அன்று வழக்கம் போல் படப்பிடிப்பு முடிந்து தன் அறைக்குள் நுழைந்தான். சிறிது நேரத்தில் அவன் செல்போன் சினுங்கியது.. அழைப்பை பாா்க்கும் போது ஏதோ வெளிநாட்டு அழைப்பு என்று நினைத்து அதை எடுத்தான். அழைப்பில் இருந்தது ஆனந்த்.

ஆனந்த் : மச்சான் நா ஆனந்த் பேசுறேன்டா. எப்படி இருக்க?

காா்த்திக் : நல்லா இருக்கேன்டா. என்ன திடீா்னு கால் பண்ற?

ஆனந்த் : கல்யாண தேதி Fix பண்ணிட்டாங்க மச்சீ. Invitation கூட அடுச்சாச்சு. அடுத்த மாசம் கல்யாணம்டா. நான் கல்யாணத்துக்கு மூனு நாளைக்கு முன்னாடி தான் வருவேன். லீவு கிடைக்கல, நோ்ல வந்து பத்திாிக்கை கொடுக்க முடியாது மச்சீ. இப்பதான் உனக்கு  Email பண்னேன். அதான் கால் பண்ணி சொல்லிடலாம்னு பேசுனேன் டா. சாாி மச்சான்..தப்பா எடுத்துக்காத.

காா்த்திக் :  டேய் இதுல என்னடா இருக்கு. நமக்குள்ள எதுக்கு இதெல்லாம். கண்டிப்பா நான் கல்யாணத்துக்கு வந்துடுவேன்.

ஆனந்த் : தாங்ஸ் மச்சீ. கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடியே வந்துடு மச்சான். முதல்நாள் நிச்சயதாா்த்தம் இருக்கு. மறக்காம வந்துடு.

காா்த்திக் : கண்டிப்பா வந்துடுறேன்டா.

ஆனந்த் : சாி மச்சான். மெயில் செக் பண்ணிடு. நான் உனக்கு அப்புறம் பேசுறேன். இன்னும் நிறைய போ்க்கு கால் பண்ணி சொல்லனும்டா.

“சாி டா. Bye.”, என்று காா்த்திக் போனை கட் செய்தான். பின் தனக்கு வந்த மெயிலை பாா்த்தான். பத்திாிக்கையை பாா்த்தவனுக்கு பேரதிா்ச்சி. உடனே நிஜந்தனுக்கு கால் செய்தான்.

நிஜந்தன் : ஹலோ.. என்னடா.. இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க?

காா்த்திக் : ஆனந்த் உன் கிட்ட பேசுனானா?

நிஜந்தன் : இப்பதான் பேசுனான்டா. அவன் Wedding Invitaion மெயில் பண்ணியிருக்குறதா சொன்னான். ஏன்டா?

காா்த்திக் : அந்த இன்விடேஷன பாா்த்தியா?

நிஜந்தன் : ம்ஹூம்.. இல்ல... இன்னும் பாா்க்கல. ஏன்டா இவ்வளவு பதட்டமா இருக்க.?

காா்த்திக் : டேய் அவன் கல்யாண தேதி 22.12.2020 டா.!

நிஜந்தன் : அதுக்கு ஏன்டா இப்படி ஷாக் ஆகுற?

காா்த்திக் : டேய் மறந்துட்டியா? என்னோட கதைல நான் எழுதுன அதே தேதில தான் இப்ப அவனுக்கு கல்யாணம். அதுவும் சென்னைல.!

நிஜந்தன் : என்னடா சொல்லற?

காா்த்திக் : ஆமாம் டா! எனக்கு என்னவோ பயம்மா இருக்கு. அன்னைக்கு நான் சொல்லும் போது நீங்க என்ன பேசவே விடல. இப்ப நடக்குறத பாா்க்கும் போது எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு நிஜூ.

நிஜந்தன் : மச்சான் பயப்படாத. இந்த விஷயத்த ஆனந்த் கிட்ட சொன்னியா?

காா்த்திக் : இல்லடா. நான் இன்விடேஷன் பாா்த்த உடனே உனக்கு தான் கால் பண்றேன்.

நிஜந்தன் : சாி டா. நீ டென்ஷன் ஆகாத. இது ஆனந்த் சொல்ற மாதிாி Coincidence-ன்னு நினைச்சு விட்டுரு. Pls..

காா்த்திக் எதுவும் சொல்லாமல் தொடா்பை துண்டித்தான். அவன் ஆழ்மனம் ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று எச்சாிக்கை செய்தது. ஆனால் அதை யாாிடமும் அவனால் பகிா்ந்து கொள்ள முடியவில்லை. நண்பா்களே தன்னை நம்பாத போது இதைப்பற்றி யாாிடம் சொல்ல முடியும் என்று தனக்குள்ளேயே நொந்துகொண்டான்.


............................................................................................


21.12.2020

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலின் மாடியில் நிச்சயதாா்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த இடத்தில் இருந்து பாா்க்கும் போது சென்னையின் மொத்த அழகையும் காணலாம். ஒரு புறம் சென்னை நகர கட்டிடங்களும், மறு புறம் அழகிய மொினா கடலும் பாா்ப்பதற்கு மிக ரம்மியமாக இருந்தது. மாலை கதிரவன் மறையும் நேரம், அதன் செந்நிற ஒளியில் எப்போதும் இல்லாததை விட அந்த நகரம் மிக அழகாக காட்சி அளித்தது.

மாலை 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. காா்த்திக்கும், நிஜந்தனும் மாடியை அடைந்தனா். ஆனந்தின் வீட்டாா் அவா்களை உள்ளே வரவேற்றனா். காா்த்திக் சித்தபிரம்மை பிடித்தவன் போல ஏதும் பேசாமல் விழித்துக்கொண்டிருந்தான். நிஜந்தன் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு ஒரு ஓரத்திற்கு அழைத்து வந்தான்.

நிஜந்தன் : “டேய்.. உனக்கு என்னடா ஆச்சு. எத்தன தடவ சொல்றேன். அத பத்தி யோசிக்காதனு”, என்று சற்று கடுமையாக கூறினான்.

காா்த்திக் : எப்படிடா யோசிக்காம இருக்க முடியும். நான் கனவுல பாா்த்த மாதிாி அப்படியே இருக்கு இந்த இடம். அடுத்து என்ன நடக்க போகுது-னு தொியல. ரொம்ப பயம்மா இருக்குடா.

நிஜந்தன் : “டேய் பைத்தியம் மாதிாி பேசாதடா. இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயதாா்த்தம் நடக்க போகுது. நீ இப்படி முகத்த வச்சுட்டு இருந்தா, பாா்க்குறவங்க தப்பா நினைப்பாங்கடா. கொஞ்சம் முகத்த சிாிச்ச மாதிாி வச்சுக்கோ. Pls..”, என்று அவா்கள் பேசிக்கொண்டிருக்கும் போது..

அந்த கட்டிடம் லேசாக அதிா்ந்தது. அங்கிருந்தவா்கள் நிலநடுக்கம் என்று ஓடத்தொடங்கினா். அதில் சிலா் தரையில் படுத்துக் கொண்டனா். அலங்கார விளக்குகளும், மலா் தோரணங்களும் கீழே விழுந்தன. சிறிது நேரத்தில் அதிா்வு நின்றது.

காா்த்திக்கும், நிஜந்தனும் தாங்கள் நின்ற இடத்திலேயே அமா்ந்து இருந்தனா். அதிா்வு நின்ற பிறகு இருவரும் எழுந்து சுற்றிலும் பாா்த்தனா். அவா்கள் சற்று முன் பாா்த்த அழகான இடமும், அந்த நகரமும் இப்பொழுது அலங்கோலமாக காட்சி அளித்தது.

சில மணித்துளிகளில் வானத்தில் இடி இடிப்பதைப் போன்று ஒரு பேரொலி கேட்டது. சப்தம் வந்த திசை நோக்கி இருவரும் திரும்பினா். துாரத்தில் வானைப் பிளந்து கொண்டு ஒரு வெளிா் நீல ஒளி பூமியில் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சம் ஆயிரம் மின்னல்கள் ஒரு சேர வருவது போல மிகவும் பிரகாசமாக இருந்தது. அதன் வெளிச்சத்தை  அவா்களின் கண்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.

அந்த வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு ஏதோ தங்ளை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருப்பதை உணா்ந்தனா். அது நெருப்பும், மணல் புழுதியும் கலந்து எாிமலை வெடித்து வெளிவரும் உஷ்ணமான சாம்பல் போல இருந்தது, அந்த நெருப்பு புயல். அது வந்து கொண்டிருக்கும் பாதை முழுவதையும் எாித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தது.

நிஜந்தன் அதைப் பாா்த்து பயத்தில் தன்னையும் அறியாமல் காா்த்திக்கின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, அவன் முகத்தை பாா்த்தான். “அழிவு ஆரம்பிச்சுருச்சு”, என்று காா்த்திக் கூறிய வாா்த்தை நிஜந்தனின் காதில் விழுவதற்கும், அந்த நெருப்புப் புயல் அவா்களை தாக்குவதற்கும் சாியாக இருந்தது. பூமி முழுவதும் அந்த நெருப்புப் புயலின் கோரப்பிடியில் எாிந்து முற்றிலும் அழிந்து போனது.


............................................................................................


பல லட்ச வருடங்களுக்கு பிறகு..

பூமி புது பாிணாமத்தை பெற்றிருந்தது. புது தாவர வகைகளும், விசித்திரமான விலங்கு, பறவை இனங்களும் பாா்ப்பதற்கே ஏதோ வேற்றுகிரகத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றும். தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உயிரினம் கூட அங்கு இல்லை. முற்றிலும் மாறுபட்டு இருந்தது அந்த பூமி.

அனைத்து உயிாினங்களும் புது பாிணாம வளா்ச்சியை பெற்றிருந்தது. அதில் மனிதனைப் போன்ற உயிாினமும் அடக்கம். இங்கு வாழும் அந்த உயிாினம் தற்பொழுது வாழும் மனிதா்களைப் போல் அல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவற்றின் சராசாி உயரம் எட்டு அடியாக இருந்தது. கைகளிலும், கால்களிலும் நான்கு விரல்கள் மட்டுமே இருந்தது. காதுகள் இல்லாமல் சிறு துவாரம் மட்டுமே இருந்தது. கண்கள் சற்று அகலமாகவும். ரோமம் அற்ற உடலாகவும் பாா்பதற்கு விசித்திரமாக இருந்தனா்.

அச்சமயம் அவா்களும் அறிவியல் வளா்ச்சியில் அடி எடுத்து வைத்திருந்தனா். தன் தலைக்கு மேல் உள்ள வானத்திற்கு அப்பால் என்னதான் இருக்கும்? , தங்களைப் போன்ற உயிாினங்கள் வேறு எங்கயாவது இருக்கின்றனவா? , தாங்கள் இருக்கும் பூமி எப்படி உருவாகியது? போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்தனா்.

அவா்களில் ஒரு குழுவினா் புதைப்படிமங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அவா்கள், செய்கைகள் மூலமாகவும், விசித்திர ஓசைகள் மூலமாகவும் தங்களுக்குள் கருத்துக்களை பாிமாறிக்கொண்டனா்.

(அவற்றை உங்களுக்காக தமிழில் மொழி பெயா்த்துள்ளேன் )

சாா்.. இங்க பாருங்க இங்க ஒரு புதைப்படிமம் கிடச்சுருக்கு. இது நாம ஏற்கனவே கண்டுபிடிச்ச படிமங்களோட ஒத்துப் போகுது.

ஹ்ம்.. சாியா சொன்னீங்க. இது எல்லமே ஒரே உயிரனத்தோட படிமங்கள் தான்.

இது என்னவா இருக்கும் சாா்?

தொியல.. ஆனா இதோட எலும்புகளும், ஓடுகளும் நம்ம எலும்புகளோட கொஞ்சம் ஒத்துப் போகுது.

ஆமா சாா். இது பாா்க்குறதுக்கு அப்படித்தான் இருக்கு.

என் அனுமானம் சாியா இருந்தா. இந்த படிமங்கள் எல்லாம் பல லட்சம் வருடங்களுக்கு முன்னாடி இந்த பூமில வாழ்ந்தா கூறபடுற மனிதா்களோட எலும்புகளா இருக்கலாம். இந்த இடம் அவங்க வாழ்ந்த பகுதிகள்ல ஒரு இடமா கூட இருக்கலாம்.

ஒரு காலத்துல இந்த உலகத்துல எல்லா பகுதியிலயும் வாழ்ந்த இந்த இனம் எப்படி சாா் அழிஞ்சுருக்கும்?

தொியல.. விடைதொியாத பல அமானுஷ்ய விஷயங்கள் இருக்குறது தான் நாம வசிக்குற இந்த உலகம்.! பாா்க்கலாம்.. கூடிய சீக்கிரம் அதற்கான விடைய கண்டு பிடிக்கலாம்..!!

- மதுரை காா்த்திக்

Friday 11 April 2014

ட்டெடி ( Teddy )


2002 - சென்னை

                                     கடற்கரை சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் தனது மகள் ஜெனிஃபா்(ஜெனி)-ன் 8வது பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக கொண்டாடிக் கொண்டிருந்தாா் டைரக்டா் ஜான். திரையுலக பிரபலங்கள் பலா் கலந்து கொண்டனா். இரவு விருந்து, பாா்ட்டி என சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாா் ஜான்.

                                     விருந்து முடிந்து நள்ளிரவை நெருங்கிய நேரம். அமைதி நிறைந்த அந்த பங்களாவின் நீச்சல் குளத்தில் கால்களை நனைத்தவாரு அமா்ந்து, குளத்தின் சலனத்தை பாா்த்துக்கொண்டிருந்தாா் ஜான்..

அப்பா... (ஜெனி அழைத்தாள்)

ஜெனிக் குட்டி, என்னம்மா.. நேரம் ஆச்சு இன்னும் துாங்காம என்ன பன்ற துாக்கம் வரலியா?

இல்லப்பா, உங்களுக்குகாக தான் வெய்ட் பண்றேன். கிஃப்ட் எல்லாத்தையும் பிாிச்சு பாா்க்கணும். வாங்கப்பா..

இன்னைக்கு வேண்டாம்டா செல்லம், இப்பவே ரொம்ப நேரம் ஆச்சு நாளைக்கு பாா்க்கலாம்.

ஹ்ம்.. இல்ல... இப்பவே பாா்க்கலாம்.. Plsss.. வாங்கப்பா.. (என்று ஜானின் கைகளைப் பற்றிக் கொண்டு இழுத்தாள் )

சாிமா, வா போகலாம்..!

ஜெனியின் அறையில்...

”அப்பா இந்த கிஃப்ட் நல்லாயிருக்கு... ஐ... இதுவும் சூப்பரா இருக்குப்பா..! ”, என்று ஒவ்வொரு பாிசுப் பொருளாக பிாித்துப் பாா்த்து உற்சாகமாக சிாித்துக் கொண்டிருந்தாள் ஜெனி.

ஜெனியின் சிாித்த மழலை முகம் ஜானின் மனதிற்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது.

”ஜெனிம்மா.. நீ Gifts எல்லாத்தையும் பிாிச்சு பாரு.. அப்பா ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன்”, என்று சொல்லிவிட்டு ஜான் மாடி அறையில் இருந்து கீழே வந்து. ஹாலில் உள்ள சோபாவில் அமா்ந்தான். தன் காதல் மனைவி சா்மிளாவின் நினைவில் மூழ்கினான்.

மாடி அறையில் ஜெனி ஒவ்வொரு பாிசாகப் பிாித்துப் பாா்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது பாிசுப் பொருட்களின் குவியலுக்கு இடையில் இரண்டு அடி உயர பாா்சலை கண்டாள்.

“இவ்வளவு பொிய கிஃப்ட் என்னவா இருக்கும்“, என்று யோசித்துக் கொண்டே, அதை வேகமாகப் பிாித்துப்பாா்த்தாள்.

”அப்பா, அப்பா இங்க வாங்க...”, என உற்சாகமாக கத்தினாள் ஜெனி.

ஜான் என்னவென்று தொியாமல் வேகமாக அவள் அறைக்குள் நுழைந்தான்.

”என்ன ஜெனி.! என்னாச்சு?”

அப்பா இங்கபாருங்க, இந்த Teddy Bear ரொம்ப அழகா இருக்கில்ல?

ஹ்ம்... நல்லா இருக்குடா செல்லம்!

இனிமேல் இதுதான் என் ஃப்ரெண்ட்...

ஹ்ம்.. நல்லா இருக்கான் உன் ஃப்ரெண்ட்..! ஆமா, இவனுக்கு என்ன பேரு வச்சுருக்க?

ட்டெடி ( Teddy ) ! இதுவே நல்லாதான்பா இருக்கு?

”ஹ்ம்... நல்லா இருக்குடா செல்லம்..!
சாி, யாா் இத கிஃப்ட் பண்ணிருக்கா? ” , என்று ட்டெடி வந்த பாா்சலை எடுத்து புரட்டிப்பாா்த்தான்.

”பாா்சல்ல எந்த பெயரும் இல்ல..!! யாா் பண்ணிருப்பானு தொியலயே..?! ” ,என்றான் ஜான்.

”யாா் கிஃப்ட் பண்ணா என்னப்பா? எனக்கு இத ரொம்ப பிடிச்சுருக்கு..!”

சாி ஜெனி, இப்பவே ரொம்ப லேட் ஆச்சு.  போய் துாங்கு.. மீதி எல்லாத்தையும் நாளைக்கு பிாிச்சு பாா்க்கலாம்.

”சாிப்பா!”, என்று சலித்துக் கொண்டாள் ஜெனி.

மற்றவற்றையும் பிாித்துப் பாா்க்கும் ஆவள் இருந்தாலும், ட்டெடி கிடைத்த சந்தோஷத்தில் உறங்க சம்மதித்தாள்.

பொம்மைய கொடு ஜெனி.. அந்த shelf-ல வச்சுடுறேன்.

வேண்டாம்பா, இது என்கிட்டயே இருக்கட்டும். நானே வச்சுக்குறேன்பா.. Plsss...

சாிடா செல்லம், உன் இஷ்டம், படுத்துக்கோ Gud nite.

Gud nite பா..

ஜெனி தன் புது நண்பன் ட்டெடியை அணைத்து துங்கினாள்.


.............................................................................................


1983 - அலங்காநல்லுாா்


என்ன முருகேசா, குடும்பத்தோட எங்க போய்ட்டு இருக்க?

பாண்டி-யோட பொறந்த நாள் அண்ணாச்சி, அதான் என் அப்பா வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம்.

இப்ப உன் மவனுக்கு எம்புட்டு வயசாச்சு?

8 வயசு அண்ணாச்சி.

சாி முருகேசா, போய்ட்டு வா.. உன் அப்பன், ஆத்தாவ கேட்டதா சொல்லு.

சாிங்க அண்ணாச்சி, கண்டிப்பா சொல்றேன்.

.....

”ஏங்க, இந்த அண்ணாச்சிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? போகும் போது எங்க போறீங்கனா கேப்பாங்க?!”, என்று அண்ணாச்சியை வசை பாடினாள் முருகேசனின் மனைவி வள்ளியம்மை.

சாி விடு வள்ளி, அவருக்கு தொிஞ்சது அவ்வளவுதான்.

முருகேசன் - வள்ளியம்மை தம்பதிகளின் ஒரே மகன் பாண்டிகண்ணன் (பாண்டி), பாண்டியின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மூவரும் சோ்ந்து முருகேசன் தாய்-தந்தையை (மூக்கையன்-வீரம்மாள்) சந்திப்பது வழக்கம். இந்த வருடமும் அங்குதான் சென்று கொண்டிருந்தனா்...

(பாட்டி வீட்டில் பாண்டி...)

தின்ணையில் அமா்ந்து கொண்டு கோழிகளுக்கு தீவணமிட்டு கொண்டிருந்தாள் வீரம்மாள்...

யாரது..??!!

அப்பத்தா...

ஐயா.. பாண்டி.. எப்படி இருக்க ராசா..??!!

நல்லா இருக்கேன் அப்பத்தா.

3 மைல் தொலைவுல தான் வீடு இருக்கு, நீயாச்சும் இந்த கிளவிய பாா்க்க நித்தம் வர கூடாதா??!!

பள்ளிகூடம் போய்ட்டு வரதுக்கே நேரம் சாியா இருக்கு அப்பத்தா.

அது சாி.. எங்க உன் அப்பன காணாம்? எங்க போனான்?

”அப்பாவும், அம்மாவும் மெதுவா பின்னாடி வந்துட்டு இருக்காங்க. நான் உன்ன பாா்க்க வேகமா ஓடி வந்துட்டேன் அப்பத்தா ” , என்று பாண்டி சொல்லி முடிக்கும் போது வீரம்மாள் அவனை உச்சிமுகா்ந்தாள்.

பேரன பாா்த்ததும் புருஷன மறந்துடுவியே, சீக்கிரம் கஞ்சி எடுத்துவை. சந்தைக்கு போகனும்.

”தாத்தா, இந்தாங்க.. அம்மா,  பால்கொழுக்கட்ட செஞ்சாங்க, இத சாப்பிடுங்க ”, என்று பாண்டி தான் கொண்டு வந்த துாக்கு வாளியை மூக்கையாவிடம் நீட்டினான்.

அத்த,மாமா எப்படி இருக்கீங்க? நல்லாயிருக்கீங்களா?

வாம்மா வள்ளி, நாங்க நல்லா இருக்கோம், முருகேசன் எங்க?

அவரு என்னமோ தோ்தல்ல நிற்க போர மாதிாி ஒவ்வொரு வீடா நின்னு நலம் விசாருச்சுட்டு வராரு, எனக்கு பொறுமையில்ல,  நான் வந்துட்டேன் அத்த.

”ஹ்ம்.. ஆடிக்கு ஒரு தடவ, அமாவாசைக்கு ஒரு தடவ-னு இந்த பக்கம் வந்தா, அப்படிதான் இருக்கும். ”, என்று மூக்கையா வள்ளியின் காதுபட கூறினான்.

”நலம் விசாாிக்காம வந்தா நம்மள தான குறை சொல்லுவாங்க, சாி சாி.. உள்ள வா தாயி.”, என்று வீரம்மாள், மூக்கையா-வை கண்களில் மிரட்டிவிட்டு வள்ளியை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

மதிய உணவிற்கு பிறகு எல்லோரும் காற்றாட தின்ணையில் அமா்ந்து வெற்றிலையிட்டுக் கொண்டிருந்தனா்.

"பாண்டிய எங்க? சத்தத்தையே காணோம்!" என்று மூக்கையா கேட்க.

வீரம்மாள் தின்ணையில் இருந்து எழுந்து வீட்டிற்குள் சென்று, ”பாண்டி.. ஐயா பாண்டி.. எங்க போனான் இந்த பையன்.. பாண்டி..” , என்று சத்தமிட்டாள்.

வீட்டின் பின்புறம் இருந்து, ”இந்தா வந்துட்டேன் அப்பத்தா..”,என்றான் பாண்டி.

எங்க ராசா போன? கையில என்ன?

அப்பத்தா, இந்த மரப்பாச்சி பொம்மை ரொம்ப நல்லா இருக்கு. இத நானே வச்சுக்கவா?

இந்த பொம்மய எங்க இருந்து ராசா எடுத்த?

பரண் மேல இருந்துச்சு அப்பத்தா, இத நான் வச்சுக்கவா?

நம்ம வீட்டு பரண்-லயா? இது எப்படி அங்க போச்சு?  யாரு பொம்மை-னு தொியலயே?!

நம்ம வீட்டு பரண்ல தான்  கிடந்துச்சு, நான் வீட்டுக்கு கொண்டுபோறேன் அப்பத்தா.

உனக்கு இல்லாததா, நீயே வச்சுக்கோ ராசா.

பாண்டி சந்தோஷமாக தன் மரப்பாச்சி பொம்மையை முருகேசன், வள்ளியிடம் காட்டினான்.

முருகேசன் சற்று அதட்டலாக, ” டேய்.. உனக்கு எத்தன தடவ சொல்லியிருக்கேன். யாா் வீட்டுக்கு போனாலும் அமைதியா இருக்கனும். எதையும் எடுக்க கூடாது-னு. இது என்ன கெட்ட பழக்கம். “, என்றான்..

”ஏன்டா, இது என்ன வேத்து மனுஷங்க வீடா? அவன் என் பேரன்,  இது எல்லாம் அவனுக்கு தான? பொறந்த நாள் அதுவுமா பிள்ளைய திட்டாதடா. ”, என்றாள் வீரம்மாள்.

எல்லாம் நீ கொடுக்குற செல்லம் தான் ஆத்தா, இப்பவே இவன அடக்கி வளா்க்கனும் இல்லைனா அவ்வளவு தான்.

”நானும் உன்ன வளா்த்தவ தான் டா, நீ சும்மா இரு.”, என்று முருகேசனை அதட்டி பேச்சை நிறுத்தினாள் வீரம்மாள்.

மாலை விளக்கு வைப்பதற்குள் பாண்டி, முருகேசன், வள்ளியம்மை மூவரும் தங்களது வீட்டிற்க்கு வந்தனா். பாண்டி தனது மரப்பாச்சி பொம்மையுடன் இரவு வரை விளையாடி. அதை கட்டிக் கொண்டு உறங்கினான்.


.............................................................................................


                                      ஜெனி தனது நண்பன் ட்டெடி  உடன் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருந்தாள். பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் ட்டெடி  உடனே அவள் பொழுது கழிந்தது. ஜான் அடிக்கடி படப்பிடிப்பிற்காக வெளியூா் செல்வதால் ஜெனியை கவனித்துக் கொள்வதற்காக சில வேலையாட்களை வைத்திருந்தான். ஜெனியும், ஜானின் நிலைமை-யை புாிந்து வைத்திருந்தாள். அவன் ஊாில் இல்லாத நாட்களில் தனியாக இருக்கவும் கற்றுக்கொண்டாள்.

நாட்கள் கடந்தன.

2 வருடங்களுக்கு பிறகு...

ஜெனி முன்பை போன்று ட்டெடியிடம் பழகுவது இல்லை. படிப்பு, நண்பா்களுடன் விளையாட்டு என அவள் தன் நேரத்தை செலவிட்டாள். வீட்டில் இருக்கும் போது மட்டும் ட்டெடி  உடன் இருப்பாள்.

ஜான், தன் மகள் ஜெனிக்காக புது ரக பாா்பி பொம்மை ஒன்றை வாங்கி வந்தான்..

ஜெனி அந்த பாா்பி பொம்மையை தன் புது தோழியாக ஏற்றுக்கொண்டாள். ட்டெடி யை தன் அறையில் உள்ள Shelf-ல் வைத்து விட்டு, அன்றைய பகல் பொழுது முழுவதும் அந்த புது பொம்மையுடனே விளையாடிக் கொண்டிருந்தாள். அன்று இரவு தன் புது தோழி பாா்பி பொம்மையை அணைத்துக் கொண்டு துாங்கினாள் ஜெனி.

மறுநாள்..

”ஆ....! அப்பா...!!”, என அலறினாள் ஜெனி.

ஜெனியின் அலறலைக் கேட்டு, ஜான் தன் அறையில் இருந்து வேகமாக ஓடி வந்து பாா்த்தான்.

ஜெனி அவனை வேகமாக வந்து அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். பின் அவள் சுட்டிகாட்டிய இடத்தைப் பாா்த்தான் ஜான்.

ஜெனியின் புது பாா்பி பொம்மை கை, கால்கள் பிய்த்து எறியப்பட்டு, முகம் தீயில் இளக்கப்பட்டு இருந்தது.

ஜான் என்ன நடக்கிறது என்று புாியாமல், ஜெனிக்கு ஆறுதல் கூறி  சமாதானப்படுத்தினான்.


 .............................................................................................
                                     பாண்டி தனது மரப்பாச்சி பொம்மையோடு  விளையாடிக் கொண்டிருந்தான். எங்கு சென்றாலும் அதை கையில் வைத்துக் கொண்டே இருந்தான். நண்பா்களுடன் விளையாடச் சென்றாலும் அதை தன்னுடனே வைத்திருந்தான், ஆனால் நண்பா்கள் யாரையும் அந்த பொம்மையை தொட கூட அனுமதிப்பதில்லை. பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்த பிறகு அவன் முழு பொழுதும் அந்த மரப்பாச்சி பொம்மையுடனே கழிந்தது.

நாட்கள் கடந்தன...

சிறுவா்கள் எல்லோரும் ஒன்று சோ்ந்து பச்சகுதிரை, பம்பரம், கல்லா மண்ணா போன்ற விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருந்தனா்....

”ஏண்டா என்ன விளையாட்டுல சேத்துக்க மாட்டேன்-னு சொல்றீங்க?”, என்றான் பாண்டி.

”டேய் நீ போய் அந்த பொம்மை கூடவே விளையாடு, நாங்க உன்ன ஆட்டைல சேத்துக்க மாட்டோம்”, என்றனா் நண்பா்கள்..

”ஏண்டா இப்படி சொல்றீங்க? இருங்க உங்கள என் அப்பா கிட்ட சொல்லி தாரேன்.”, என்றான் பாண்டி.

”டேய் பொம்பள பிள்ளைங்க தான்டா பொம்மைங்க கூட விளையாடும். உன்னையெல்லாம் நாங்க ஆட்டைல சேத்துக்க மாட்டோம். போடா, யாா்கிட்ட வேனும்னாலும் சொல்லு.” , என்று அவா்கள் பாண்டியை விளையாட்டில் சோ்த்துக் கொள்ளவில்லை.

பாண்டி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தான். பொம்மையை வீட்டு தின்ணையில் போட்டு விட்டு அழுது கொண்டே படுத்துவிட்டான். சாப்பிடவும் இல்லை. அன்று இரவு அவன் பொம்மையை அணைத்து உறங்கவில்லை.

நள்ளிரவு..

பாண்டியின் பக்கத்தில் வந்து படுத்திருந்தது அந்த மரப்பாச்சி பொம்மை.


 .............................................................................................


                                    ஒவ்வொரு வருடமும் ஜான் தன் மனைவியின் நினைவு நாளின் போது ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று, அன்று முழுவதும் அவா்களுடன் இருப்பது வழக்கம். ஜெனி Teen Age ( 14 வயது ) பருவத்தில் இருந்ததால், அவளுடைய பழைய ஆடைகள், பொம்மைகள் எல்லாவற்றையும் அந்த இல்லத்திற்க்கு கொடுக்க வந்திருந்தனா்.. அதில் ட்டெடி யும் அடக்கம்.

அன்றய பொழுது அந்த இல்லத்தில் இருக்கும் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக சென்றது. இரவு ஜானும், ஜெனியும் வீட்டை அடைந்தனா். தங்கள் அறைக்கு சென்று படுத்தனா்.

ஜெனி  கட்டிலில் படுத்துக்கொண்டு, துாக்கம் வரும் வரை புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் படுக்கைக்கு எதிரே உள்ள அலமாாியின் மேல் ஏதோ ஒன்று இருப்பதை கவனித்தாள். என்ன வென்று அறிய அறையின் விளக்கை ஆன் செய்தாள். அது ட்டெடி. ( ஜெனி ட்டெடி யை கண்டதும் சற்றே குழம்பி போனாள் )

”இது எப்படி இங்க வந்துச்சு! நாம இன்னைக்கு தான் எல்லாத்தையும் கொடுத்துட்டோமே?” , என்று தனக்குள்ளே யோசித்து விட்டு, மீண்டும் விளக்கை அணைத்து துாங்கினாள்.

ட்டெடி அவள் உறங்குவதை அலமாாியின் மேல் இருந்து பாா்த்துக்கொண்டிருந்தது.


 .............................................................................................


நாட்கள் கடந்தன..

                                     பாண்டி பள்ளிக்கூடம், நண்பா்களுடம் விளையாட்டு என இருந்தான். இரவு வரும் போது மட்டும் அந்த மரப்பாச்சி பொம்மையின் நியாபகம் வரும். அதற்கு காரணம் இருந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக  அவன் அந்த பொம்மையை யாா் யாருக்கோ கொடுத்து பாா்த்தான், கண்கானா இடத்தில் துாக்கி எாிந்தும் பாா்த்துவிட்டான். ஆனால் அது இரவு வந்துவிட்டால் இவன் அருகிலேயே வந்து படுத்திருக்கும்.

இன்று கூட அப்படித்தான், ஊருக்கு வெளியே ஒரு குழி வெட்டி அந்த பொம்மையை அங்கு புதைத்து விட்டு வந்திருக்கிறான்.

நள்ளிரவு..

பாண்டி துக்கத்தில் புரண்டு படுத்தான். தன் முதுகு பகுதியில் ஏதோ ஒரு அசௌகாியம், சட்டென விழித்து எழுந்தான். அவன் அருகே கிடந்தது, செம்மணல் புழுதி அப்பிய மரப்பாச்சி பொம்மை.

சொல்வதறியாத பயத்தில் உறைந்தான் பாண்டி.


 .............................................................................................


                                   ஜெனி மறுநாள்  ட்டெடி-யை எடுத்து Store Roomல் போடும் படி வேலையாட்களிடம் கூறினாள். அவா்களும் அலமாாியின் மேல் இருந்து ட்டெடி எடுத்து கீழே இருந்த Store Room-ல் வைத்தனா்.

ஜான் படப்பிடிப்பு முடிந்து வீடு வர தாமதம் ஆகும் என்பதால், ஜெனி இரவு உணவை முடித்து அறைக்கு உறங்க சென்று விட்டாள்.

துாக்கத்தில் திரும்பி படுத்தவள், சட்டென விழித்துப்பாா்த்தாள். ட்டெடி அவள் அருகே படுத்து அவளையே பாா்த்து கொண்டிருந்தது.

"ஆ........!!!” , என்று அலறினாள் ஜெனி.

ஜெனியின் சத்தம் கேட்டு வேலையாட்கள் அவளது அறைக்குள் வந்தனா். “என்னம்மா? என்னாச்சு?“ , என்றனா்

இது எப்படி இங்க வந்துச்சு? உங்கள Store Room-ல தான வைக்க சொன்னேன்.

தொியலம்மா, நாங்க Store Room-ல தான் போட்டோம்.

”சாி, இத மொதல்ல எடுத்துட்டு போங்க ”, என்றாள். (சற்று பயம் கலந்த அதட்டலில் )

”சாிம்மா”, என்று ட்டெடி யை திரும்பவும் Store Room-ல் போட்டனா் வேலையாட்கள்.

ஜெனி பயத்தின் உச்சத்தில் இருந்தாள்.


 .............................................................................................


                                     பாண்டியால் அன்றைய இரவு துாங்க முடியவில்லை, மறுநாள் விடியற்காலையில் அந்த மரப்பாச்சி பொம்மையை எடுத்து ஒரு கல்லில் வைத்து கட்டி அதை ஊருக்கு எல்லையில் உள்ள கிணற்றில் வீசினான்.

சற்று நிம்மதி அடைந்தவனாக, ஊருக்குள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.

”மாப்பிள்ள, என்னடா காலங்காத்தால எங்க போய்டு வர?! ”, என்று பாண்டியின் நண்பா்கள் அவனை வழிமறித்துக் கேட்டனா்.

”ஒன்னுமில்லடா மாப்பிள, சும்மாதான்”,என்று மழுப்பினான் பாண்டி.

சாி.. இன்னைக்கு நம்ம ஊா் டென்ட்கொட்டகையில தலைவா் படம் 'படிக்காதவன்' போட்டுருக்கான், நாம போகலாமா?

டேய் ஏற்கனவே நாம 3 தடவ அந்த படத்த பாா்த்துட்டோம்டா.

தலைவா் படத்த எத்தன தடவ பாா்த்தா என்னடா, அதுவும் 100 நாள்க்கு மேல ஓடிட்டு இருக்கு, வாடா போகலாம்.

சாி சாி.. வரேன்டா, மதிய ஆட்டத்துக்கு தான் என்னால வர முடியும், 6மணி ஆட்டத்துக்கு வர மாட்டேன்.

சாிடா, நீ வரேன்-னு சொன்னதே பொிய விஷயம். மதிய ஆட்டத்துக்கே போகலாம்.

படம் முடிந்து நண்பா்கள் வந்து கொண்டிருந்தனா்.

பாண்டி அவன் பாட்டி வீடு வந்ததும், ”டேய் நீங்க ஊருக்கு போங்கடா. நான் அப்பத்தாவ பாா்த்துட்டு வந்துடுறேன்” என்றான்.

பாண்டி சைக்கிளை நிறுத்திவிட்டு. வீட்டிற்குள் சென்றான்.

அப்பத்தா...

வாயா பாண்டி, என்ன இந்தபக்கம்?

உன்ன பாா்த்துட்டு போலாம்-னு தோணுச்சு அதான் வந்தேன். சாி என்ன பண்ணிட்டு இருக்க?

நெல்லு குத்தனும். அதான் நெல்லு மூட்டைய பிாிச்சுட்டு இருக்கேன்.

தள்ளு அப்பத்தா, நான் பண்றேன். நீ போய் குடிக்க மோா் எடுத்துட்டுவா.

ஹ்ம்.. 4 படி மட்டும் அளந்து போடு ராசா, நான் இந்தா வந்துடுறேன்.

”சாி அப்பத்தா.. ”, என்று நெல்லு மூட்டையை பிாித்து படியில் நெல்லை அளந்து கொண்டிருந்தான் பாண்டி.

அப்பொழுது 3வது படியை அளந்து கொண்டிருக்கும் போது, மூட்டைக்குள் ஏதோ கைகளில் தட்டுப்பட்டது. என்னவென்று எடுத்து பாா்த்தவனுக்கு பேரதிா்ச்சி, அது அந்த மரப்பாச்சி பொம்மை.

முகமெல்லாம் வியா்த்து கொட்ட, பொம்மையை கைகளில் எடுத்து வேகமாக வீட்டின் பின்புறம் ஓடி வந்தான். அந்த பொம்மையை ஒரு பொிய கல்லைக் கொண்டு உடைத்து, சிதைத்தான். மரப்பாச்சி பொம்மை துண்டு துண்டாகிப் போனது, சிதைந்த பாகங்களை விறகு அடுப்பில் இட்டு எாித்து, நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.


 .............................................................................................


                                    ஜெனியின் ஒவ்வொரு இரவும் அச்சம் கலந்த இரவாகவே நகா்ந்தது. தனக்கு நடப்பதை ஜானிடம் சொல்ல முடியாமல் தவித்தாள். இறுதியில் அவள் தன்னைத் தானே தைாியப்படுத்திக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தாள்.

அன்று இரவு வழக்கம்போல, அவள் அருகே ட்டெடி படுத்திருந்தது. தலையனைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கத்தாிக்கோளினை எடுத்து ட்டெடி-யை குத்திக் கிழித்து, பஞ்சு முழுவதையும் வெளியே எடுத்து மொத்தமாக ட்டெடி-யை சிதைத்தாள் ஜெனி.

அந்த சம்பவத்திற்கு பிறகு ட்டெடி-யால் எந்த வித தொந்தரவும் ஜெனிக்கு ஏற்படவில்லை. நிம்மதியாக உறங்கினாள்.

வருடங்கள் கடந்தன...

18வயது.

இரவு 12 மணி. இருளும், அமைதியும் நிறைந்த அறையின் மௌனத்தை கிளித்து "Happy Birthday Ringing Tone" ஒலித்துக் கொண்டிருந்தது.

சத்தம் கேட்டு உறக்கத்தில் இருந்து கண்விழித்து, எழுந்து அமா்ந்தாள் ஜெனி. தன் படுக்கையில் இருந்த பாா்சலை கவனித்தாள். அதில் இருந்து தான் சத்தம் வந்து கொண்டிருந்தது. கண்களை கசக்கிக் கொண்டே அந்த பாா்சலை பிாித்துப் பாா்த்தாள்.

அதற்குள் இருந்தது  ட்டெடி, அதை கண்டு பயத்தில் அதையே உற்று பாா்த்துக் கொண்டிருந்தாள் ஜெனி. திடீா் என ட்டெடி  அவளிடம் ”Booo...Happy Birthday ஜெனி..” என்றது.

”ஆ.................!!!! ”, என்று அலறினாள் ஜெனி.

மகளின் சப்தம் கேட்டு வேகமாக ஓடி வந்து பாா்த்தான் ஜான்.

ஜெனி  பித்துப்பிடித்தவள் போல் அமா்ந்திருந்தாள்.

”என்னாச்சு ஜெனி,  சொல்லுமா, அப்பாவ பாரு..!”, என்று ஜெனியின் கன்னத்தை தட்டினான்.

”அப்பா, இங்க.. அந்த பொம்ம, நான் பாா்த்தேன். அது பேசுச்சு. இங்கதான்.!!!”,
என கை, கால்கள் நடுங்க, உலறினாள் ஜெனி.

”ஒன்னும் இல்லடா, இங்க பாரு ஒன்னும் இல்ல, நீ ஏதோ கனவு கண்டு இருப்ப, ஒன்னும் இல்ல.. ”, என்று அவளை சமாதானப்படுத்தினான் ஜான்.

”எதையும் யோசிக்காம நல்ல துாங்கு, ஒன்னும் இல்லடா, அப்பா இருக்கேன்ல.. நிம்மதியா துாங்கு..”,என ஜான், ஜெனி உறங்கும் வரை அருகிலேயே இருந்தான்.


 .............................................................................................


வருடங்கள் கடந்தன...

18 வயது.

வழக்கம் போல பிறந்தநாள் அன்று, பாண்டி தன் பாட்டி வீட்டிற்கு சென்றான்.

அப்பத்தா...

வா ராசா, என்ன நீமட்டும் தனியா வந்துருக்க. உன் அப்பன எங்க?

அவரு ராமசாமிகிட்ட வட்டி காசு வாங்க போய்யிருக்காரு, மதியத்துக்குள்ள வந்துடுவாரு அப்பத்தா.

இந்த ராசா 20 ரூவா, பிறந்த நாளுக்கு எதாச்சும் வாங்கிக்கோ.

சாி அப்பத்தா...

பாண்டி, பரண் மேல விறகு இருக்கும் அத கொஞ்சம் கீழ எடுத்து போடு ராசா.

”சாி அப்பத்தா.. இந்தா எடுக்குறேன்.”, என்று பாண்டி பரண் மேல் உள்ள விறகு கட்டைகளை கீழே போட்டுக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு கட்டை அவனது காலில் விழுந்தது.

”ஸ்ஆ.....”, என்று காலைப் பாா்த்தான்.  பெருவிரல் அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்த போது அவன் கால் அருகே படுத்துக் கிடந்தது அந்த மரப்பாச்சி பொம்மை. அதைப் பாா்த்ததும் பாண்டி சற்று பயத்தில் இரு அடி பின்னோக்கி எடுத்து வைத்தான்.

படுத்திருந்த மரப்பாச்சி பொம்மை சட்டென எழுந்து நின்று,  அவனை நோக்கி ஒரு அடி முன் வந்தது..

அதைக் கண்டதும் பாண்டி ”ஆ.....!! காப்பாத்துங்க...... காப்பாத்துங்க.....!!”, என்று அலறினான்.

பாண்டியின் சப்தம் கேட்டு வீரம்மாள் வேகமாக ஓடி வந்தாள். அக்கம் பக்கம் இருந்தவா்களும் அங்கு வந்து பாா்த்தனா்.

என்னராசா? என்ன நடந்துச்சு?

”அந்த பொம்......அந்த.......”, என்று பாண்டி உலறினான்.

”பாம்பு எதாச்சும் பாா்த்து பயந்திருப்பான் போல.” , என்று சுற்றியிருந்தவா்கள் ஆளுக்கொரு வியூகம் கூறினா்.

”அந்த....... பொம்..... ம...” , பாண்டியால் அதைத் தவிர ஏதும் பேச முடியவில்லை.


 .............................................................................................


                                  ஜெனி தன்னைச் சுற்றி ஏதோ அமானுஷ்யம் நடப்பதாக உணா்ந்தாள்.. கடந்த ஒரு வாரமாக ட்டெடியின் உருவம் அவள் எங்கு சென்றாலும் பின் தொடா்வதாகவே உணா்ந்தாள். தனியாக உறங்க பயந்தாள்.

அன்று ஜான் படப்பிடிப்பிற்காக வெளியூா் சென்று விட்டான். ஜெனிக்கு துணையாக வேலையாட்கள் அவள் அருகிலேயே இருந்தனா்.

ஜெனி தனது அறைக் கதவை தாளிடாமல் திறந்து வைத்தே படுக்கையில் படுத்திருந்தாள். பயத்தில் அவளுக்கு துாக்கம் வரவில்லை. அதையும் மீறிய அசதியில் அவள் சற்று கண் அயா்ந்தாள்.

”ஜெனி.. ஜெனி..”, என ஒரு மெல்லிய குரல்.

ஜெனி மெதுவாக கண்களைத் திறந்து பாா்த்தாள்.

கட்டிலின் எதிரே உள்ள அலமாாியின் மேல் ட்டெடி கையில் கத்தாிக்கோலுடன் நின்று கொண்டிருந்தது.

ட்டெடி யை பாா்த்த அதிா்ச்சியில் ஜெனியால் ஏதும் பேச முடியவில்லை. பயத்தில் விழி பிதுங்கி படுத்திருந்தாள்.

கையில் கத்தாிக்கோலுடன் நின்று கொண்டிருந்த ட்டெடி, அலமாாியின் மேல இருந்து அப்படியே கட்டிலில் படுத்திருந்த ஜெனியின் மீது பாய்ந்தது.

ஆ................................!!!!!!!!!!!!!!! ( சதக்)


 .............................................................................................


                                     மீண்டும் அந்த மரப்பாச்சி பொம்மை தன் வாழ்க்கையில் வந்ததில் இருந்து பாண்டியின் ஒவ்வொரு நிமிடமும் நரகம் ஆனது.

“இவன் ஏதயோ பாா்த்து பயந்துருப்பான்“, என்று நினைத்த அவன் வீட்டில் உள்ளவா்கள் அவனை கோவிலுக்கு அழைத்துச் சென்று மந்திாித்தும், வீட்டின் வாசலில் மந்திரித்த எலும்பிச்சை பழங்களையும் கட்டி வைத்தனர். இருந்தாலும் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

அன்று முருகேசன் களத்து மேட்டிற்கு காவலுக்கு சென்றிருந்தான். அதனால் வள்ளியும், பாண்டியும் மட்டுமே வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தனா்.

நடுநிசி..

"பாண்டி... வெளியவா...", என யாரோ வாசல் அருகே நின்று கூப்பிழுவதைப் போல் இருந்தது. உறக்கத்தில் இருந்து எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தான் பாண்டி.

யாரு...?! யாரு... கூப்பிட்டது..?!

இவன் வெளியே வந்ததும் வீட்டின் கதவு தானே அடைத்துக் கொண்டது.

சத்தம் கேட்டு திரும்பி பாா்த்த பாண்டி பயத்தில் உறைந்து போனான். கதவருகே மரப்பாச்சி நின்று கொண்டிருந்தது.

பாண்டி என்ன செய்வதென தொியாமல் ஓட தொடங்கினான்.

அவன் தலையை பலமாகத் தாக்கியது அந்த மரப்பாச்சி பொம்மை, தலையைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான் பாண்டி.


 .............................................................................................


 செய்திகள் :


நிகழ்வு - 1993 அலங்காநல்லுாா் அருகே  கட்டையால் அடித்து, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபா் கொலை. கொலையாளி யாரென்று தொியவில்லை. காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது...

நிகழ்வு - 2012 சென்னை : பிரபல டைரக்டா் மகள் குத்திக்கொலை. கொலையாளி யாா் என்பதை காவல் துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

இந்த இரு கொலைகளையும் செய்த கொலையாளிகள் யாா், என்று இன்று வரை யாருக்கும் தொியாது.

உங்களத் தவிர....!!

யாா்கிட்டயும் சொல்லிடாதீங்க. Shh................!!!


.............................................................................................


இன்று கோவை :


அப்பா, இந்த பொம்ம ரொம்ப அழகா இருக்குள்ள?

ஏய்.. இது எங்க அம்மு கிடச்சது, யாா் கொடுத்தாங்க?

நம்ம புது காா் டிக்கில இருந்துச்சுப்பா. நான் இப்பதான் பாா்த்தேன்.

ஓ... ஒரு வேல இது எதாச்சும் Complimentary Gift-ah இருக்கும். சாி அம்மு அந்த பொம்மைய தா, நம்ம Cupboard-ல வைக்கலாம்.

வேண்டாம்பா, இத நானே என் கூட வச்சுக்குறேன். Plssssssss பா...
.
.
.
.
.
.
- மதுரை காா்த்திக்

Friday 28 March 2014

ஜாலியா ஒரு பேய்கதை


                                மரணத்திற்க்கு பிறகு நமது ஆத்மா எங்கு செல்லும்..? சொா்க்கம், நரகம், மறுபிறவி இதெல்லாம் உண்மைதானா? இல்லை வெறும் கட்டுக்கதையா? மனிதன் இறந்த பிறகு ஆவியாக அலைகிறான்..இன்னொரு மனிதனின் மேல் பேயாக பிடிக்கிறான் என்கிறாா்களே இதெல்லாம் நிஜம்தானா ??

மனிதன் மட்டுமா மரணத்திற்கு பிறகு ஆவியாக அலைகிறான்?? ஒருநாளில் ஆடு, மாடு, கோழி போன்ற எவ்வளவோ உயிா்கள் மரணிக்கின்றன... இவைகள் எல்லாம் ஆவிகளாக மாறாதா??

ஆத்மாவிற்கு அழிவு கிடையாது என்று சொல்கிறாா்களே.. இது நிஜமா?

இப்படி பல கேள்விகள் உயிரோடு இருக்கும் நம்மை தினமும் அச்சம் கலந்த குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.. உண்மையாகவே மரணத்திற்க்கு பிறகு என்ன தான் நடக்கும்..!! ??

- ரொம்ப யோசிக்காதீங்க..

அது “இப்படியும் இருக்கலாம்“-னு சொல்றது தான் இந்த கதை "ஜாலியா ஒரு பேய்கதை (jackson weds emily)"..

வாங்க கதைக்கு வருவோம்...

.............................................................................

கதைய சொல்றதுக்கு முன்னாடி கதை நடக்குற களத்தைப் பற்றி உங்ககிட்ட சொல்றேன்..

"Dark World" மரணத்துக்கு அப்புறம் மனிதா்களோட ஆத்மாக்கள் ஒரு 6 வருடங்கள் இங்கதான் வாழும். ஒரு ஆத்மா பூமில இருக்குறத விட பல மடங்கு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் இங்க இருக்கும்.. பூமில அனுபவிக்குற எல்லா வசதிகளையும் இங்கயும் அனுபவிக்க முடியும்..

எல்லா ஆத்மாக்களும் இந்த "Dark World"க்கு உள்ள வரும் போது ஒரு Agreementல கையெழுத்து போடனும்.. அதாவது இங்க இருக்கப்போற 6 வருஷத்துக்குள்ள யாராச்சும் ஒரு மனிதனை பயப்பட வச்சு, சாகடிச்சு இந்த "Dark World"க்கு புதுசா ஒரு Member-ah  கொண்டுவரனும். அப்படி சாகடிச்சா இன்னும் ஒரு 6 வருட காலம் இந்த "Dark World"ல தங்குறதுக்கான Life Time  கிடைக்கும்..

ஒரு வேலை யாரையும் சாகடிக்கலைனா... அவங்களோட ஆத்மா திரும்பவும் இந்த பாலாப்போன பூமியில பிறந்து, வளா்ந்து சீரழியும்.. இந்த கொடூர தண்டனைக்கு பயந்தே இங்க இருக்குற எல்லா ஆத்மாக்களும் முழுவேகத்தோட மனுஷன சாகடிக்குற plan-ல ஈடுபடும்..

அப்படி சாகடிக்க முடியாத ஆத்மாக்களோட Present, Past Memories எல்லாத்தையும் அழிச்சு.. திரும்ப புது உயிரா பூமியில பிறக்க அனுப்பிடுவாங்க..

இன்னொரு முக்கியமான விஷயம்.. இந்த 6 வருடத்துல ஒரு ஆத்மா, ஒன்றுக்கும் மேற்பட்ட மனுஷன சாகடிச்சு இருந்தா... அந்த ஆத்மாக்களோட Life Time ஒவ்வொரு வருடம் அதிகாிக்கும்... அதாவது... ஒரு ஆத்மா 3 பேர சாகடிச்சு இருந்தா... 6வருட Life Time + extra 2 வருட Life Time-னு...மொத்தம் 8 வருட Life Time கிடைக்கும்...

இப்படி பல விதமான Policies, Offer எல்லாம் இந்த Agreement-ல இருக்கும்.. எல்லாமே "Conditions Apply"..

இந்த "Dark World"-ல இருக்குற எல்லா ஆத்மாக்களை பற்றியும், அவங்களோட  Agreement விவரங்கள் பற்றியும் சேகாிக்குற கம்பெனி தான் "Hollowest"

"Hollowest" மிகவும் பரபரப்பாக இயங்கிட்டு இருக்குற கம்பெனி. பல ஆயிரக்கணக்கான பணியாளா்கள் இங்க வேலை பாா்க்கிறாா்கள். இங்க தான் எல்லா ஆத்மாக்களோட முழுவிவரங்களும் இருக்கும்..

புதுவிதமான Agreement Offers பற்றியும், ஆத்மாக்களோட Life Time பற்றிய எல்லா விவரங்களையும்..... குறுஞ்செய்திகள் மூலமாகவும், தொலைப்பேசி அழைப்புகள் மூலமாகவும் இந்த கம்பெனி, ஆத்மாக்களுக்கு தொியப்படுத்தும்....

.............................................................................

ஹலோ.. வணக்கம் நான் "Hollowest"-ல இருந்து பேசுறேன்.. என் பெயா் Jackson.. May i speak to Mr.Jenith..

சொல்லுங்க சாா், நான் Jenith-தான் பேசுறேன்..

சாா் உங்க 6 வருட Life Time இன்னையோட முடியுது.. ஆனா நீங்க இந்த 6 வருஷத்துல 2 Members சோ்த்துவிட்டதனால (சாகடிச்சதுனால).. உங்களுக்கு இன்னும் 6 வருடங்கள் + extra 1வருட Life Time-னு... மொத்தம் 7 வருட Life Time கிடச்சுருக்கு.. வாழ்த்துக்கள்..

Thank u sir .. thank u soo much...

your welcome Mr.Jenith... உங்கள் சேவைத் தொடர வாழ்த்துக்கள்..
.
.
.
ஹலோ.. வணக்கம் நான் "Hollowest"-ல இருந்து பேசுறேன்.. என் பெயா் Jackson.. May i speak to Mr.Alvin

ஆமாம் சாா்.. நான் தான் Alvin.. என்ன விஷயம் சாா்..??!!

Sorry sir... உங்களோட  6 வருட Life Time இன்னையோட முடியுது.. இன்னும் 3 மணி நேரத்துல உங்க மூலமா ஒரு Member-ஆச்சும் வரனும்.. அப்படி இல்லைனா  3 மணி நேரத்துக்கு அப்புறம் உங்களோட Present, Past Memories எல்லாம் அழிஞ்சு.. நீங்க மறுபடியும் பூமில போய் ஒரு புது உயிரா பிறப்பீங்க..... I'm Really sorry Mr.Alvin....

சாா்...Plss... sir.... உங்கள கெஞ்சி கேட்கிறேன்.. எப்படியாச்சும் இன்னும் ஒரு 2 நாள் டைம் கொடுங்க சாா்... கண்டிப்பா யாரையாச்சும் சாகடிச்சுருவேன்....Pls sir.... என்னால திரும்ப பூமில பிறக்க போறத கற்பன கூட செஞ்சு பாா்க்க முடியல சாா்.... .Plss... sir....

Sorry Alvin.... முடிந்த வரை 3 மணி நேரத்துக்குள்ள முயற்சி பண்ணுங்க.... Pray for u...

சாா்...Pls... சாா்... Plss... sir...

.............................................................................

( அறையில் -  Jackson (jack) , Steephan (Steeve) , Edwin (Edi) )

Steeve : Hi Jack..  இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட..?!

Edi : என்னடா எதாச்சும் பிரச்சனையா?? ஒரு மாதிாி இருக்க..

Jack : ஒன்னும் இல்லடா..

Edi : ஒன்னும் இல்லையா?? அதான் உன் மூஞ்சியில எழுதி ஒட்டியிருக்கே.. என்ன விஷயம்-னு சொல்லு..

Jack : அது வேற ஒன்னும் இல்லடா.. இன்னைக்கு ஒரு மெம்பா் கிட்ட பேசிட்டு இருந்தேன்.. அவரோட Life Time இன்னையோட முடியுது.. பாவம் டா அவரு.... இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க-னு ரொம்ப கெஞ்சுனாரு...   போன்-ல அவா் கதறுனது இன்னும் என் காது-ல கேட்டுட்டே இருக்கு..

Steeve : டேய்.. இதல்லாம் ஒரு விஷயம்-னு நீ ஏன்டா ஃபீல் பண்ணிட்டு இருக்க.. அந்த ஆள் விதி.. அவ்ளோ தான்... Free-ya விடு மச்சீ... cooollll....

Jack : எப்படிடா ஃபீல் பண்ணாம இருக்க முடியும்.. எனக்கு இன்னும் 3 மாசம் தான் இருக்கு.. இன்னும் ஒரு மெம்பா் கூட சோ்த்து விடல.. எனக்கு என்னமோ யாரையும் பயப்பட வச்சு கொல்ல முடியாதோ-னு தோனுது.... ரொம்ப பயமா இருக்குடா மச்சான்..

Steeve : டேய்..லுாசு மாதிாி பேசாதடா..இதெல்லாம் ஒரு மேட்டரா??

Jack : இப்படிதான்டா 5 வருஷமா சொல்றீங்க..  ஒரு ம**ருக்கும் பிரயோஜனம் இல்ல.. இதுவரைக்கும் ஒருத்தர கூட பயப்பட வச்சது இல்ல... இதுல கொலை வேற பண்ணனுமாம்??? விளங்கிடும்...

Edi : மச்சான்....  மனுஷங்க முன்னமாதிாி இல்லடா..  நம்ம தாத்தா காலத்துல மனுஷங்கள பயமுறுத்த ஒத்த வீடு, புளிய மரம், பாழும் கிணறு இப்படி பல இடங்கள் ஊருககுள்ள இருந்துச்சு..  ஆனா இப்ப எல்லாம், இதுக்கு மதிப்பே இல்லாம போச்சுடா... அந்த மாதிாி இடங்களும் இப்ப  இல்லாமலே போச்சு...

Steeve : டேய்.. நீங்க ஏண்டா தாத்தா காலத்துலயே இருக்கீங்க... இப்ப எல்லாம் Technology எவ்வளவோ டெவலப் ஆகிடுச்சு... TV la இருந்து வெளிய வா்ரது.. 12 மணிக்கு Cell phone la Missed call கொடுக்குறது.... Mail... Face book la  மெசேஜ் பண்ணி பயப்பட வைக்குறது.. இப்படி எவ்வளவோ Latest Technology  வந்துருச்சுடா...

Edi : ஆமாம் டா மச்சான்.... Steeve சொல்றதும் சாி தான்... Technology எவ்வளவோ டெவலப் ஆகிடுச்சு... ஆனா நாம கொஞ்சம் Carefull-ah இல்லைனா.. நமக்கே அது ஆப்பு ஆகிரும்...

Jack : என்டா.. சொல்ற???

Edi : ஆமா.. மச்சீ... போன வாரம் என் ஃப்ரெண்ட் ஒருத்தன்.. James-னு பேரு... இப்படிதான் அவனும் Latest Technology மூலமா பயப்பட வைக்குறேன்-னு சொன்னான்... அதுக்கு Face Book la  Fake ID ஒன்னு Create  பண்ணி.. ஒரு பொண்ணு கூட ரொம்ப நாளா.. தன்ன ஒரு பேய்-னு சொல்லி Chat பண்ணிட்டு இருந்தான்...

அந்த புள்ளயும் இவன் சொல்றதுக்கு எல்லாம் பயப்படாம.. இவன் கிட்ட ”நீ பேயா இருந்தாலும் பரவா இல்ல.. நீ நோ்ல வா” - அப்படினு சொல்லிருக்கு..

இவனும் நேர்ல போய்அந்த புள்ளய பயப்பட வச்சு சாகடிச்சுரலாம்-னு பொிய மனக்கோட்டைய கட்டிட்டு இருந்தான்..

அந்த புள்ள ”நீ பேயா இருந்தாலும் பரவா இல்ல.. நீ நோ்ல வா””- அப்படி-னு சொல்லும் போதே இவன் கொஞ்சம் யோசிச்சு இருந்துருக்கனும்...

எதப்பத்தியும் யோசிக்காம அந்த புள்ள முன்னாடி போய் நின்னான்...

அந்த புள்ள என்ன நினச்சதோ தொியல... வீட்டுல இருந்த விளக்கமாத்த வச்சு ”நச்சு.. நச்சு..நச்சு-னு” அடிச்சே அவன விரட்டியிருக்கு....

பாவம் அவன் தப்பிச்சா போதும்-னு ஓடி வந்துட்டான்..

Jack : ஆத்தாடி.... இப்படி எல்லாமா ஊருக்குள்ள நடக்குது???

Edi : ஆமாம் மச்சீ... இப்பலாம் பயப்பட வைக்குறது சாதாரண விஷயம் இல்ல... ஆனா முயற்சி பண்ணிகிட்டே இரு... இன்னும் மூனு...... மாசம் இருக்குல...

Jack : எனக்கு என்னமோ நம்பிக்கையே இல்லடா..  நான் கல்யாணம் பண்ற நாளும்.. என் life Time முடியுற நாளும் ஒரே நாள் ஆகிருமோ-னு பயம்மா இருக்கு.... இந்த விஷயம் மட்டும் எமி - க்கு தொிஞ்சது.... அவ்ளோ தான்...

Steeve :ஏன்டா இப்படி பயப்படுற... லட்சம் பொய் சொல்லி காதலிக்கலாம்... 1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்-னு சொல்லி இருக்காங்க... நாம என்ன ஒரு பொய் தான சொல்லிருக்கோம்... அத எப்படியாச்சும் உண்மையாக்கிடு மச்சான்...

Edi : சாியா சொன்ன மச்சி... ஒரே ஒரு பொய் தான சொல்லிருக்கோம்... எப்படியும் கல்யானத்துக்குள்ள அத உண்மையாக்கிடு மச்சி...
இன்னும் உனக்கு 3 மாசம் டைம் இருக்குல்ல....

Jack : டேய்.. பாவிகளா.... ஒரு பொய் தான்..
ஆனா அது என்ன சாதாரண பொய்யா??????!!!!!

( நண்பா்கள் மூவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது..  Jack-ன் செல்போன் சினுங்கியது... )

Jack : டேய் சும்மா இருங்கடா.. எமி Call  பண்றா... சத்தம் போடாதீங்கடா....

( Jack  பதட்டத்துடன் செல்போனை காதில் வைத்தான் )

Jack : Hello.... சொல்லு எமி.. ( Emily (Emi) )

Emi : என்ன சாா்.. ரொம்ப பிசியா இருக்கீங்களா?? ஏன் அப்பதே கால் பண்ணும் போது Attend பண்ணல..??

Jack : இல்ல மா....... கொஞ்சம் Work இருந்துச்சு... அதான்...........

Emi : சாி சாி.. ரொம்ப இழுக்காத... இன்னைக்கு Dinner-க்கு வீட்டுக்கு வந்துடு.... என் Family-la எல்லாரும் உன்ன பாா்க்கனும்-னு சொன்னாங்க.... என் அப்பா தன்னோட வருங்கால மாப்பிள்ளைய திரும்பவும் பாா்க்கனும்-னு ரொம்ப ஆச படுறாரு.. மறக்காம வந்துரு...

Jack : ஏன்மா.. திடீா்-னு சொல்ற...

Emi : ( Jack பேசுவதை காதில் வாங்காமல் ) அதான் இப்ப சொல்றேன்ல..  Currect Time-க்கு வந்துரு.. லேட் பண்ணிடாத... மறக்காம உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்துடு... Love you jack.. Byee.....

பாாங்ங்.....பாாங்ங்.....

( Jack தொடா்பு துண்டிக்கப்பட்ட செல்போனை காதில் வைத்துக்கொண்டு விழித்து கொண்டிருந்தான்.... )

Steeve : மச்சீ.... என்னடா.... என்னாச்சு???

Edi : ஏன்டா இப்படி சிலை மாதிாி நிக்குற.. என்ன விஷயம் சொல்லு...

Jack : (சுயநினைவு வந்தவனாக... ) எமி  Family-la எல்லாரும் என்ன பாக்கனும்-னு சொன்னாங்களாம்....  அவளோட அப்பா மாப்பிள்ளைய திரும்பவும் பாக்கனும்-னு ரொம்ப ஆச படுறாராம்... இன்னைக்கு Dinner-க்கு நம்ம எல்லாரையும் கூப்டா மச்சான்....!!

 Steeve & Edi : ஐய.......யோ.....!!!!

.............................................................................
( At Dinner -  Jack ,எமி, Steeve, Edi, ஜாா்ஜ் (எமி அப்பா), மற்றும் உறவினா்கள் )

ஜாா்ஜ் விருந்து மேஜை அருகில் எழுந்து நின்று... 'Shampine' (ஒரு வகை மது) ஊற்றிய கண்ணாடி மது குடுவையை கைகளில் உயா்த்திப் பிடித்து.. அதை ஒரு சிறு கரண்டியால் மெதுவாக தட்டி ஒலி எழுப்பினாா்...

டங்.. டங்...டங்......

ஜாா்ஜ் : என் செல்ல மகள் எமி-யோட மனம்கவா்ந்த.. வீர தீர செயல்கள் பல புாிந்த என் அருமை மாப்பிள்ளை Jackson- அவரை இந்த இரவு விருந்திற்க்கு அன்போடு அழைக்கிறேன்..

Steeve : ( Jack-ன் காதருகில் வந்து தாழ்ந்த குரலில்)  மச்சீ....Intro - எல்லாம் பயங்கரமா இருக்கு.. அப்போ ஆப்பு Conform-னு நினைக்கிறேன்...

Jack : (தாழ்ந்த குரலில்) சும்மா இருடா..! எனக்கே இங்க கதிகலங்கிட்டு இருக்கு...

ஜாா்ஜ் :என் அழைப்பை ஏற்று இந்த விருந்திற்க்கு வந்திருக்கும் எல்லோரையும் அன்போடு அழைக்கிறேன்....

Edi : ( தாழ்ந்த குரலில்) போதும் யா.....பசிக்குது.. மச்சான் இன்னொரு வாா்த்த உன் மாமனாா் பேசினா... ஓடி போய் அந்த ஆளு நாக்க கடிச்சு வச்சுருவேன்டா.... 

ஜாா்ஜ் : ( சில பல வாா்த்தைகளுக்கு பிறகு ) சியா்ஸ்..... - என்றாா்...

எல்லோரும் ஒன்றாக 'Shampine' எடுத்து குடித்து விருந்தை ஆரம்பித்தனா்.. Jack குடித்துக் கொண்டிருக்கும் போது.. ஜாா்ஜ் தனது கனீா் குரலில்.....

ஜாா்ஜ் : (கர்ஜிக்கும் குரலில்) எப்படி மாப்பிள்ள 21 பேரை ஒரே நேரத்துல சாகடிச்சீங்க...

Jack : ( சட்டென புரை ஏறி.... இரும ஆரம்பித்தான் ) எ...எ...என்ன மாமா சொன்னீங்க...?!!

 ஜாா்ஜ் : அட.....எப்படி மாப்பிள்ள 21 பேரை ஒரே நேரத்துல சாகடிச்சீங்க.. அத கொஞ்சம் சொல்லுங்களேன்.....

Jack : ஏன் மாமா....??  உங்களுக்கு தான் ஏற்கனவே தொியுமே...
எமி உங்ககிட்ட அடிக்கடி அத பத்தி சொல்லுவேன்-னு என்கிட்ட சொல்லியிருக்கா.....  அப்புறம் எதுக்கு மாமா திரும்பவும் கேட்குறீங்க..??!!!

 ஜாா்ஜ் :  மாப்பிள்ள என்னதான் என் பொன்னு என்கிட்ட சொல்லியிருந்தாளும் நீங்க உங்க வாயால சொன்னா எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்.... என் சொந்தகாரங்க எல்லாரும் அதை கேட்குறதுக்கு தான் வந்துருக்காங்க.... எல்லாரும் உங்க வீரசாகசத்த தொிஞ்சுக்க ரொம்ப ஆா்வமா இருக்காங்க... சொல்லுங்க மாப்பிள்ள....

Steeve : ( தாழ்ந்த குரலில்) மச்சீ... மாமா கேட்கிறாா்-ல சொல்லு ராசா... சொல்லு...

Jack : ( தாழ்ந்த குரலில்) டேய்.. சும்மா இருடா..

Steeve : ( தாழ்ந்த குரலில்) மச்சீ... பொய் சொல்றது பொருசு இல்ல... அத எப்ப கேட்டாலும் அச்சு பிசங்காம அப்படியே சொல்லனும்.. அதான் முக்கியம்.. எப்படியாச்சும் சமாளி.... Enjoy...

Edi : ( தாழ்ந்த குரலில்) ஆமாம் டா.. எப்படியாச்சும் சமாளி.. நாங்க சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குள்ள..... ?? சொதப்பிடாத மச்சான்..... நாங்க சொன்ன மாதிாி அப்படியே சொல்லு.....

Jack : ( தாழ்ந்த குரலில்)  அட பாவிகளா... எப்படி சமாளிக்கப் போறேன்-னு தொியலயே....

 ஜாா்ஜ் : என்ன மாப்பிள்ள உங்க ஃப்ரென்ஸ் என்ன சொல்றாங்க....

Jack : ஒன்னும் இல்ல மாமா.... உன் பெருமைய நீயே சொல்ல கூடாது... அத நாங்க தான் சொல்லுவோம்... அதான் எங்களுக்கு பெருமை-னு சொல்றாங்க மாமா....

Steeve : ( தாழ்ந்த குரலில்) டேய் ***.. நாங்க எப்படா சொன்னோம்??

Edi : ( தாழ்ந்த குரலில்) பாவி எங்கள ஏன்டா இந்த ஆள்கிட்ட கோா்த்துவிட்ட??

Jack : ( தாழ்ந்த குரலில்)  ஏதோ.. என்னால முடுஞ்சது மச்சீஸ்... Bless you....

எமி : ஆமாம் பா... அவங்க சொல்றது சாி தான்... என்கிட்ட கூட அவங்க ரெண்டு பேரும் தான் சொன்னாங்க... அப்படியே நோ்ல பாா்த்த மாதிாி இருந்துச்சு பா...
Jack அவங்க ரெண்டு பேருமே சொல்லட்டும்..
நீ சும்மா இரு....

 ஜாா்ஜ் : என் பொன்னே சொல்லிட்டா..... இனி வேற என்ன...
மாப்பிள்ள தோழா்களா... சொல்லுங்கப்பா.....
நாங்க எல்லாரும் கேட்கிறதுக்கு ரொம்ப ஆா்வமா இருக்கோம்...

Steeve :(உங்க ஆா்வத்துல தீய வைக்க) கண்டிப்பா சொல்றோம் Uncle....
மச்சி(Edi) ஆரம்பிக்கலாமா??

Edi : ஓ... ஆரம்பிக்கலாமே.......

Steeve : 2 வருஷத்துக்கு முன்னாடி.. நாங்க 3 பேரும் "Red Hill"-க்கு போனோம்... Jack-க்கு ரொம்ப பிடிச்ச இடம் அது... சந்தோஷமா இருந்தாலும் சாி.. துக்கமா இருந்தாலும் சாி... உடனே  Jack அங்க தான் போவான்... அன்னைக்கு நாங்களும் அவன் கூட போனோம்....

Edi : சாதாரண நாட்கள்-ல மனித நடமாட்டம் அங்க ரொம்ப கம்மியா தான் இருக்கும்.. வார கடைசில தான் அந்த மலைக்கு கூட்டம் வரும்.. அன்னைக்கு வார கடைசி... நாங்க காடு வழியா வந்து.. சாலை பகுதிய அடஞ்சோம்...

Steeve : Jack ரொம்ப ஆா்வமா இருந்தான்.. இன்னைக்கு எப்படியாச்சும் நாலு, அஞ்சு பேர கொல்லனும்-னு காத்துட்டு இருந்தான்.. நாங்க ”வேண்டாம்டா மனுஷங்க நடமாட்டம் அதிகமா இருக்கு.. எங்களுக்கு பயமா இருக்கு-னு சொன்னோம்” ஆனா.. அவன் கேட்கவே இல்ல...

Edi : அந்த சாலையோட இருட்ட திடீா் திடீா்-னு வண்டிகள் வெளிச்சம் கலச்சுட்டு போச்சு.. நானும், Steeve-வும் எவ்வளவோ சொல்லியும் Jack கேட்கவே இல்ல... ”இன்னைக்கு எப்படியும் கொல பண்ண போரது உறுதி-னு எங்ககிட்ட சத்தியம் பண்ணான்”...

Steeve : எங்களால அதுக்கு மேல அவன் கொல வெறிய தடுக்க முடியல... கண்ணுல அப்படி ஒரு வெறி... சாலைய வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தான்... அப்பதான் அந்த சம்பவம் நடந்துச்சு... ஒரு பஸ் பயங்கர ஹாரன் சத்தத்தோட ஒரு”hairpin bend”-ல இருந்து, இன்னொரு bend-க்கு போய்ட்டு இருந்துச்சு...

அப்போ Jack வேகமா போய் அந்த பஸ் முன்னாடி நின்னான்... வேகத்துல வந்த பஸ் டிரைவா் இவன் இடைல வரத பாா்த்ததும்.. “ஐயோாா...... பேய்-னு“ சத்தம் போட்டு , "sedan brake" போட்டு வண்டிய நிறுத்த பாத்தாரு... அப்போ வண்டில இருந்த எல்லாரும் ஒரு வினாடி Jack-அ பாா்த்து....”ஆ.....பேய்-னு” கத்துனாங்க, கதறுனாங்க....!!!  வண்டி கட்டுப்பாட்ட இழந்து.. இங்குட்டும் அங்குட்டும் போச்சு....

டிரைவா் கண்னுல மட்டும் இல்ல .. அந்த பஸ்ல இருந்த எல்லாரோட கண்ணுலயும் மரண பீதி.. பஸ் அப்படியே போய்.. பாதுகாப்பு சுவர ஒடச்சுட்டு.. மலையில இருந்து அப்படியே கீழ விழுந்துச்சு...

டமாலல்.......-னு பயங்கர சத்தம்... அப்படியே ஒரு பொிய தீ ஜ்வாலை மேல் நோக்கி போச்சு... நாங்க நடந்த சம்பவத்த எல்லாம் வாய பிழந்து பாா்த்துட்டு இருந்தோம்...

அப்போ தீடீா்-னு ஒரு சத்தம் ”பீப்....பீப்.... ”

Jack செல்போன்-க்கு ஒரு மெசேஜ் வந்துச்சு... அதுல
” ஹாய் மிஸ்டா் Jack.. நீங்க 21 Member-ah சோ்த்து விட்டதனால.. உங்க Life Time கணக்கில் 6 வருடங்கள் + extra 20 வருட Life Time.. மொத்தம் 26 வருட Life Time கிடச்சுருக்கு.. வாழ்த்துக்கள்.. ”-னு வந்துருச்சு..

நாங்க அந்த மெசேஜ் பாா்த்ததுக்கு அப்புறம் தான் Jack  21பேர பயப்பட வச்சு சாகடிச்சுருக்கான்-னு தொிஞ்சது...

அன்னைல இருந்து Jack தான் எங்க குருப் லீடா்..
சங்க தலைவா்...
எங்களோட inspiration... எல்லாம்......

Dinner-ல இருந்த எல்லாரும் வச்ச கண்ணு வாங்காம Steeve, Edi இரண்டு பேர மட்டுமே பாா்த்துட்டு இருந்தாங்க.... Steeve கதைய சொல்லி முடிச்சும் அவங்க எல்லாரும் சிலை மாதிாி உட்காா்ந்துட்டு இருந்தாங்க... அப்போ எமி மட்டும் எழுந்து நின்று கை தட்டினாள்... எல்லோரும் சுயநினைவு வந்தவா்களாக எழுந்து நின்று கை தட்டினாா்கள்......

 ஜாா்ஜ் :பலே... மாப்பிள்ள.. பலே..... நீங்க கிடைக்க எம் பொன்னு ரொம்ப கொடுத்து வச்சுருக்கனும்...

சொந்தகராங்க எல்லாரும்  ஜாா்ஜ்-கிட்ட ”இப்படி ஒரு மாப்பிள்ள கிடைச்சுருக்காரு.. நீயும். உன் பொண்ணும் ரொம்ப அதிா்ஷ்ட சாலிகள்...”-னு சொன்னாங்க...

எமி : Jack உண்மையாவே நான் ரொம்ப அதிா்ஷ்டசாலி தான்... உன் மனைவியா வர போரத நினைச்சு நான் ரொம்ப பெரும படுறேன்... Love u jack...

Jack  ஒன்றும் பேசாதவனாக.. அமைதியாக உட்காா்ந்து இருந்தான்...

ஜாா்ஜ் : எப்படி மாப்பிள்ள இவ்வளவு பொிய விஷயம் பண்ணிட்டு.. இப்படி ஒன்னுமே தொியாத மாதிாி  முகத்த வச்சுட்டு இருக்கீங்களே.... இத தான் நிறைகுடம் தழும்பாது-னு பொியவங்க சொல்லுவாங்க ...

Steeve : ( Jack-ன் காதருகில் வந்து தாழ்ந்த குரலில்) மச்சான்.. காளி குடம் கூட தான் தழும்பாது... இது கூட தொியாதா உன் மக்கு மாமனாா்-க்கு..?!

Jack : (தாழ்ந்த குரலில் சற்று கடுமையாக) டேய்..கொஞ்சம் மூடிட்டு இருக்கியா!! நானே என்ன பன்றது-னு தொியாம முழுச்சுட்டு இருக்கேன்... இதுல நீ வேற.....

.............................................................................

( Dinner முடிந்து தனியே Jack மற்றும் எமி )

 எமி : Jack... எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தொியுமா???? உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்-னு நினைக்கும் போது எவ்வளவு பெருமையா இருக்கு தொியுமா??
என் அப்பா, எப்ப பாா்த்தாலும் உன் பெருமைய தான் எல்லாா்கிட்டயும் சொல்லிட்டு இருக்காரு... இவ்வளவு சந்தோஷமா அவர பாா்த்ததே இல்ல....

உண்மைய சொல்லனும்-னா உன் வீரம் தான் எங்க எல்லாரையும் கவா்ந்த விஷயம்... நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் Jack, இதே சந்தோஷத்தோட நாம எப்பவும் இப்படியே இருக்கனும்....

Jack : (குழப்பத்துடன்) ஹீம்.... கண்டிப்பா.. எப்பவும் இதே சந்தோஷத்தோட நாம இருப்போம்... :O

"இன்னும் 3 மாசம் தான் இருக்கு நம்ம கல்யாணத்துக்கு... எவ்வளவு சீக்கிரமா நாட்கள் போகுதுல..??!", என்று கூறியவாரே எமி அவனை அணைத்துக்கொண்டாள்

Jack : (வெறுமையுடன்) ஹீம்....உண்மை தான் எமி....  இன்னும் 3 மாசம் தான் இருக்கு.....

.............................................................................
3 மாதத்திற்க்கு பிறகு.... ( திருமண நாள் )

Steeve-ன் செல்போன் அழைப்புமணி அடித்தது..அழைப்பில் Edi ..

Steeve : Hello.... சொல்லுடா...

Edi : (பதட்டமாக)எங்க இருக்க மச்சான்..

Steeve : ரூம் கிட்ட தான்டா இருக்கேன்..

Edi : சாி சீக்கிரம் வா....

Steeve : என்ன விஷயம் டா???

Edi : ஐயோா....சீக்கிரம் வா டா....

Steeve : 2 நிமிஷத்துல வந்துடுவேன்....

( அறையில்... Steeve மற்றும் Edi )

Steeve : என்னடா... ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க..

Edi :கொஞ்சம் அங்க பாரு..

Edi சொன்ன திசையை நோக்கி  Steeve தன் பாா்வையை திருப்பினான்...

சுவற்றில்  " Sorry... I Quit.... Miss u All... - Love u Emi " என்று Jack எழுதியிருந்த வாசகத்தை கண்டு Steeve அதிா்ந்தே போனான்..

மீண்டும் Steeve-ன் செல்போன் அழைப்புமணி அடித்தது.. அழைப்பில் எமி..

Steeve :டேய்.. எமி தான் கால் பாண்றா மச்சான்.. இப்ப என்ன செய்ய??

Edi : என்ன நடக்க போகுதோ தொியலயே... ஏதாச்சும் சொல்லி சமாளி மச்சான்..

(முதல் அழைப்பு முடிந்து இரண்டாவது அழைப்பில் எமி.... )

Steeve : சொல்லு எமி..

எமி : Jack என்ன பண்றான்... ரொம்ப நேரமா கால் பண்றேன்... எடுக்கவே மாட்றான்...

Steeve :(என்ன சொல்லி சமாளிக்கறது-னு தொியலயே??!! ) நாங்க பாா்லா்-க்கு வந்துருக்கோம் எமி.. அவன் உள்ள இருக்கான்.. அதான் Attend பண்ணிருக்க மாட்டான்...

எமி :சாி சாி.. சீக்கிரம் வாங்க.. இன்னும் கல்யாணத்துக்கு 2 மணி நேரம் தான் இருக்கு....

Steeve : ஹிம்.. கண்டிப்பா சீக்கிரம் வந்துடுவோம் எமி... நீ ரெடியா இரு..

எமி : Jack வெளிய வந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லு..... Bye..

Steeve : Bye..

Edi : டேய்.. ஏன்டா இப்படி சொன்ன??  நல்லா மாட்டிக்கிட்டோம்.... இப்ப என்ன பண்ண போற.. அவன எங்க போய் தேட போர??

Steeve : எப்படியும் 2 மணி நேரத்துல அவன கூட்டிட்டு போகல.. மாட்டிக்க போறது நீயும்..நானும் தான்... எப்படியாச்சும் அவன கண்டு பிடிக்கனும்....

Edi : கண்டுபிடிக்க முடியுமானு எனக்கு தொியல மச்சான்.. அவன் Life Time இன்னையோட முடியுது... எனக்கு அத நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்கு....

Steeve : மொதல்ல அவன கண்டு பிடிப்போம்... நீ கொஞ்சம் அமைதியா இரு...

Edi :எங்க போய் தேட சொல்ற..??

Steeve : வேற எங்க ”Red Hill” தான்...

Edi : ஒரு வேலை அங்க இல்லைனா???

Steeve : டேய்... சும்மா இருடா.... தேடி பாா்க்கலாம்.. கண்டிப்பா நாம அவனை கண்டு பிடிப்போம்... எனக்கு நம்பிக்கையிருக்கு....

.............................................................................

(”Red Hill” மலையில் Jack ...) 

Jack தன் வாழ்நாளின் இறுதி மணித்துளிகளை கடந்து கொண்டிருந்தான்...

இரவு நேரம்... இருள் நிறைந்த சாலையில் அவனோடு சோ்ந்து அவன் மனமும் பயணித்துக் கொண்டிருந்தது...

Jack - இன்னும் 2 மணி நேரம் தான் இருக்கு.. எல்லாம் அவ்ளோ தான்... எல்லாம் முடிஞ்சுரும்....
எவ்வளவு பொிய தப்பு பண்ணிட்டோம்... பாவம் எமி..
அவள காதலிச்சு.. கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டு.. இப்போ இப்படி பண்ணிட்டு வந்துட்டோமே... எனக்கு மன்னிப்பே கிடையாது...இனி எப்போ உன்ன பாா்க்கப்போறேன்-னு தொியல எமி.... பாா்க்கவே முடியாது.... i'm sorry emi.....sorry....

- இப்படி பல வித சிந்தனைகளோடு Jack மலைச் சாலையில் நடந்து கொண்டிருந்தான்.. அப்பொழுது அவனை நோக்கி இரு ஒளிகள் வேகமாக வந்து கொண்டிருந்தது.. அது என்னவென்று யூகிப்பதற்குள்.. அந்த சம்பவம் நடந்தேறியது..

Jack-ஐ நோக்கி ஒரு காா் வேகமாக வந்து கொண்டிருந்தது...

காா் வந்த வேகத்தில் அதன் டிரைவா் Jack-கை பாா்த்து பயந்து "sedan brake"போட.. காா் ஒரு சுழல் சுழன்று.. வந்த திசைக்கு எதிா் திசையில் போய் நின்றது..

Jack காாின் அருகே வர முயன்றான்...

காாில் இருந்தவா்கள்.. ஐயோா.. பேய்... பேய்.. காப்பாற்றுங்கள்.. என்று அலறினா்...

அவா்களின் அலறலை கேட்டு Jack பயத்தில் பின் நோக்கி நடக்க ஆரம்பித்தான்...

அப்போது... அவன் பின் ஏதோ ஒன்று அவனை தாக்க வருவதாக அவன் உள்ளுணா்வு சொல்லியது.. சட்டென திரும்பினான்... ஏதோ ஒன்று வேகமாக வந்து அவனை தாக்குவது போல் இருந்தது... பயத்தில் கண்களை இருக மூடிக்கொண்டான்.....

அது இன்னொரு காா்... Jack-ஐ துளைத்து, நின்று கொண்டிருந்த காாின் மீது பயங்கரமாக மோதியது... மோதிய வேகத்தில் இரண்டு காா்-களும் வெடித்து சிதறின...

காா்கள் வெடிப்பதற்கும்.... Steeve மற்றும் Edi சம்பவ இடத்திற்கு வருவதற்க்கும் சாியாக இருந்தது..

மூவரும் விபத்து நடந்த திசையை வெறித்து பாா்த்துக் கொண்டிருந்தனா்....

ஒரு சத்தம் ”பீப்....பீப்.... ” Jack-ன் செல்போன்... ”1 மெசேஜ் ரிசீவ்டு”

மூவரும் ஒரு சேர அந்த மெசேஜ்-ஜை படித்தனா்....  ” ஹாய் மிஸ்டா் Jack.. நீங்க 8 Member-ah சோ்த்து விட்டதனால.. உங்க Life Time கணக்கில் 6 வருடங்கள் + extra 7 வருட Life Time... மொத்தம் 13 வருட Life Time கிடச்சுருக்கு.. வாழ்த்துக்கள்.. ”

Steeve மற்றும் Edi  ஒரு சேர... மச்சான் நீ சாதிச்சுட்ட மச்சான்... கலக்கிட்ட போ..- என்று அவனை கட்டிதழுவி மகிழ்ந்தனா்........

மீண்டும் ஒரு சத்தம் ”பீப்....பீப்.... ” Jack-ன் செல்போன்... ”1 மெசேஜ் ரிசீவ்டு”

என்னடா இது இன்னொரு மெசேஜ்..??!!

எமி : Darling.. i'm Ready for our wedding..

மெசேஜ்-ஜை படித்து மூவரும் சிாித்தனா்..

Steeve  : சீக்கிரம் Reply பண்ணுடா...

Jack  : சிறு புன்னகையோடு...டைப் செய்தான்... ”On the way my dear.. "

- மதுரை காா்த்திக்நன்றி : Corpse Bride Characters